Advertisment

MNREGS திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 10 ஆவது மாதமாக 2 கோடிக்கு மேல் உயர்வு; தமிழகம் முதலிடம்

Covid distress: MNREGS demand above 2-crore level 10th month in a row: MNREGS திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 10 ஆவது மாதமாக 2 கோடிக்கு மேல் உயர்வு; மாநிலங்களில் தமிழகம் அதிக பயனாளிகளுடன் முதலிடம்

author-image
WebDesk
New Update
MNREGS திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 10 ஆவது மாதமாக 2 கோடிக்கு மேல் உயர்வு; தமிழகம் முதலிடம்

செப்டம்பரில் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் MNREGS மூலம் வேலைகளைப் பெற்றனர், இது மத்திய மற்றும் மாநிலங்கள் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகு, கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைக்கான தேவை அதிகமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது.

Advertisment

MNREGS போர்ட்டலில் கிடைக்கும் தரவு, செப்டம்பரில் 2.07 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தைப் பெற்றுள்ளன. இது 2020 ஆம் ஆண்டின் அதே மாதத்தை விட 3.85% அதிகமாகும் (2020 செப்டம்பர் ஆனது, கொரோனா முதல் அலை மற்றும் தொற்றுநோயின் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு வந்தது) மற்றும் கடந்த கொரோனா இல்லாத ஆண்டான செப்டம்பர் 2019ஐ விட 72.30 % அதிகம்.

உண்மையில், கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து MNREGS ஐப் பெறும் குடும்பங்களின் மாதாந்திர எண்ணிக்கை இரண்டு கோடிக்கு மேல் உள்ளது. கடந்த 18 மாதங்களில், அல்லது தொற்றுநோய் தாக்கியதில் இருந்து, இந்த எண்ணிக்கை மூன்று முறை மட்டுமே - ஏப்ரல் 2020 (1.10 கோடி), அக்டோபர் 2020 (1.99 கோடி) மற்றும் நவம்பர் 2020 இல் (1.84 கோடி) இரண்டு கோடிக்குக் கீழே உள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலங்களில், மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டுமே MNREGS ஐப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டு கோடியைத் தாண்டியது.

2021-22 நிதியாண்டின் முதல் பாதியில் MNREGSஐப் பெறும் குடும்பங்களின் மாத சராசரி எண்ணிக்கை 2.36 கோடியாக இருந்தது. இது 2020-21ஆம் ஆண்டுக்கான மாத சராசரியான 2.28 கோடியை விட அதிகமாகும். 2019-20ல் இந்த எண்ணிக்கை 1.56 கோடியாக இருந்தது.

சமீபத்திய மாதங்களில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், MNREGS பணிக்கான தொடர்ச்சியான தேவை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2021 இல், தமிழ்நாடு (46.54 லட்சம்) குடும்பங்கள் MNREGS ஐப் பெற்று முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் (23.47 லட்சம்), உத்தரப் பிரதேசம் (19.57 லட்சம்), ராஜஸ்தான் (18.73 லட்சம்) மற்றும் மத்தியப் பிரதேசம் (14.56 லட்சம்).

publive-image

அருணாச்சல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை செப்டம்பர் 2020 மற்றும் செப்டம்பர் 2021 க்கு இடையில் MNREGS ஐப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையில் 30% க்கும் அதிகமான அதிகரிப்பைக் கண்டுள்ளன.

2020-21 நிதியாண்டில் மொத்தத்தில் (7.5 கோடி குடும்பங்கள்) 11 கோடிக்கும் அதிகமானோர் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தினர். நடப்பு நிதியாண்டில், அக்டோபர் 30 வரை 8.57 கோடி தனிநபர்கள் (6.02 கோடி குடும்பங்கள்) பயன் பெற்றுள்ளனர்.

MNREGS இன் கீழ், ஒவ்வொரு கிராமப்புற குடும்பமும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உரிமையுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதிக்குள், நடப்பு நிதியாண்டில் 13.15 லட்சம் குடும்பங்கள் 100 நாள் வேலைவாய்ப்பை முடித்துள்ளன. மொத்தத்தில், இந்த நேரத்தில் 222.16 கோடி மக்கள் நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2021-22 நிதியாண்டில் ரூ. 71,520.69 கோடி இருப்பில், அக்டோபர் 30 வரை ரூ. 71,520.69 கோடி செலவாகியிருப்பதாக MNREGS போர்ட்டலின் தரவு காட்டுகிறது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 30-ஆம் தேதி நிலவரப்படி ஊதியம், பொருள் செலவு மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகியவற்றின் காரணமாக ரூ.10,087.06 கோடி நிலுவையில் உள்ளது, நிகர இருப்பு அல்லது பற்றாக்குறை ரூ.8,701.94 கோடியாக உள்ளது.

நிகர இருப்பு அல்லது பற்றாக்குறை உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், குஜராத், மேகாலயா, மணிப்பூர், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், சிக்கிம், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகியவை ஆகும்.

சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில், ஊரக வளர்ச்சி அமைச்சகம், MNREGS இன் கீழ் ஊதியம் மற்றும் பொருள் செலவுகளுக்கான நிதியை வெளியிட அரசாங்கம் "உறுதியாக" உள்ளது என்று கூறியது. "ஊதியம் மற்றும் பொருளுக்கான நிதி வெளியீடு ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். பட்ஜெட் மதிப்பீட்டின்படி முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகமாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் போது, ​​மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக இதுவரை ரூ.63,793 கோடிக்கும் அதிகமான நிதி வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ரூ.8921 கோடி நிதி உள்ளது, இது தற்போதைய தேவைப்படும் ஊதியத்திற்கு சமமான ஊதியப் பொறுப்பை பூர்த்தி செய்ய முடியும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"கூடுதல் நிதி தேவைப்படும் போதெல்லாம், நிதி அமைச்சகம் நிதியை வழங்குமாறு கோரப்படுகிறது. முந்தைய நிதியாண்டில், நிதி அமைச்சகம் பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக ரூ.50,000 கோடி நிதியை இத்திட்டத்திற்கு ஒதுக்கியது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment