Advertisment

5 கோடி ஃபைசர்; 2022ல் கிடைக்கும் மாடர்னா; வெளிநாட்டு தடுப்பூசிகள் இந்தியாவிற்கு எப்போது கிடைக்கும்?

எதிர்மறையான விளைவுகள் குறித்த குறிப்பிடத்தக்க அறிக்கைகள் இல்லாமல் உலகளவில் 14.7 கோடி டோஸ்களை ஃபைசர் நிறுவனம் வழங்கியுள்ளது

author-image
WebDesk
New Update
Moderna Single Dose Covid 19 vaccine

Moderna Single Dose Covid 19 vaccine and Pfizer vaccine availability in India : இந்தியாவில் அடுத்த ஆண்டு மாடர்னா நிறுவனம் தங்களின் ஒற்றை டோஸ் தடுப்பூசிகளை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்லா மற்றும் இதர மருந்தாக்க நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது அந்த நிறுவனம். ஃபைசர் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவிற்கு 5 கோடி மருந்துகளை வழங்க முன்வந்துள்ளது.

Advertisment

இந்த ஆண்டில் பகிர்ந்து அளிக்க தங்களிடம் கூடுதலான மருந்துகள் இல்லை என்பதை இந்திய தரப்பினரிடம் மாடர்னா நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவைத் தவிர இதர நாடுகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்வதற்கான சூழலில் இல்லை என்பதை நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

உலக மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து அமைச்சரவை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவின் இரண்டு சுற்று ஆலோசனைக் கூட்டங்கள் கடந்தவாரம் நடைபெற்றது. கொரோனா இரண்டாம் அலையில் சிக்கிக் கொண்டிருக்கும் நாட்டில் தற்போது உடனடியாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும், கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கு இடையேயான இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும் அக்குழு விரும்பியது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் மருந்துகள் மட்டுமே தற்போது மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாத மையத்தில் உலகெங்கும் தடுப்பூசிகள் அளிக்கும் பணி தீவிரமாக ஆரம்பித்த நிலையில், அப்போதில் இருந்து இன்று வரை இந்தியா மொத்தம் 20 தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது.

இந்த உயர்மட்ட கூட்டத்தில் வெளியுறவுத்துறை, நிதி ஆயோக், பயோடெக்னாலஜி, நிதி அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாடர்னா தடுப்பூசிகள் 2021ம் ஆண்டு கிடைக்காது. அதன் ஒற்றை-டோஸ் தடுப்பூசியை 2022ஆம் ஆண்டில் மட்டுமே இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் விவாதிக்கப்பட்டது, அதற்காக அவர்கள் சிப்லா மற்றும் பிற இந்திய நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்றனர் என்று கூறப்பட்டது.

சிப்லா ஏற்கனவே 2022 ஆம் ஆண்டில் மாடர்னாவிலிருந்து 5 கோடி டோஸ் வாங்குவதில் ஆர்வம் காட்டியதாகவும், ஒழுங்குமுறை தேவைகள் / கொள்கை ஆட்சியில் ஸ்திரத்தன்மை குறித்து மத்திய அரசிடமிருந்து உறுதிப்படுத்த கோரியுள்ளதாகவும் அறியப்படுகிறது. மாடர்னா தடுப்பூசிகளை வாங்குவதற்கு அவர்களுக்குத் தேவையான ஆதரவு குறித்து சிப்லாவின் கோரிக்கையை தொடர்பாக முன்கூட்டியே முடிவெடுக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஜூலை மாதத்தில் 1 கோடி, ஆகஸ்டில் 1 கோடி, செப்டம்பரில் 2 கோடி மற்றும் அக்டோபரில் 1 கோடி என 2021 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வழங்குவதாக அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் கூறியுள்ளது. இது நேரடியாக இந்திய அரசாங்கத்திடம் மட்டுமே டீல் செய்யும் என்றும், இந்திய அரசாங்கம் இதற்கான பணத்தை ஃபைசர் இந்தியா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளை மேலும் பிரித்து வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஃபைசர் ஒழுங்குமுறை ஆட்சியில் சில தளர்வுகளை கோரியுள்ளது, இதில் ஒப்புதலுக்குப் பிந்தைய சோதனைகள் தேவைப்படுவதில் தளர்வு கோரியுள்ளது.

இந்தியாவுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்காக, ஃபைசர் இந்திய அரசிடம் நட்டத்தை ஈடுசெய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கோரியுள்ளது. அமெரிக்கா உட்பட உலகில் சுமார் 116 நாடுகள் இழப்பீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளன.

உலகில் மற்ற நாடுகளுடன் இந்நிறுவனம் கொண்டுள்ள ஒப்பந்தம் மற்றும் தற்போதைய சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியா அந்நிறுவனத்திற்கு இழப்பீட்டு தொகையை வழங்க முன்வரலாம். ஆனால் இந்த செயல்பாட்டை கருத்தில் கொண்டு மற்ற நிறுவனங்களும் இவ்வகை இழப்பீடுகளை கோரலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

எதிர்மறையான விளைவுகள் குறித்த குறிப்பிடத்தக்க அறிக்கைகள் இல்லாமல் உலகளவில் 14.7 கோடி டோஸ்களை ஃபைசர் நிறுவனம் வழங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டும், இந்தியாவில் தடுப்பூசிகளின் இருப்பை உறுதி செய்யவும் இந்த இழப்பீடு குறித்து யோசிக்க வேண்டும் என்று அதிகாரிகள் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளனர்.

ஃபைசர் இன்க் பிரச்சினை குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படலாம் என்றும், NEGVAC (COVID-19 க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு) இந்த பிரச்சினைகள் குறித்து உடனடியாக ஒரு கூட்டத்தை நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Vaccine Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment