"கெட் மோடிஃபைய்ட்”... மோடிக்காக தூத்துக்குடியில் இயங்கும் புதுவித உணவகம்...

தினேஷ் ரோடி மற்றும் அவருடைய மனைவி சமீபத்தில் அவர்களின் உணவகத்தை மோடிஃபைய்ட் ஆக்கிவிட்டனர்

Modi themed cafe : மோடிக்கு தமிழகத்தில் இருந்து இப்படி ஒரு ஆதரவாளரா என்று அதிர்ந்து போகும் அளவிற்கு தூத்துக்குடி இளைஞர் ஒரு ரெஸ்ட்ராண்டை நடத்தி வருகிறார்.

“ரோடி ரெஸ்டோ” என்ற பெயரில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கோவில்பட்டியில், தினேஷ் ரோடி என்பவர் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்.

பாஜக இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகுத்து வரும் இந்த தினேஷ் ரோடி (30) என்ஜினியர் பட்டதாரி ஆவார்.  மோடி, குஜராத்தின் முதல்வராக பணியாற்ற ஆரம்பித்த காலத்தில் இருந்தே மோடியின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார் தினேஷ்.

Modi themed cafe

2013ம் ஆண்டில் கடலை மிட்டாய் செய்து விற்கும் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்தார். 2017ம் ஆண்டில் அதை ஒரு ரெஸ்டாரண்டாக மாற்றம் செய்தார். அவருடைய கடலை மிட்டாய் வியாபாரம் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

சமீபமாக தினேஷ் மற்றும் அவருடைய மனைவி சௌமியா என இருவரும் இணைந்து அவர்களுடைய ரெஸ்டாரண்ட்டை ”மோடியின் தீம்”கொண்டு மோடிஃபைய்ட் ஆக்கிவிட்டனர்.

மன் கீ பாத், ப்ராதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, ஆவாஸ் யோஜனா, முத்ரா, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பணமதிப்பிழக்க நடவடிக்கை, மற்றும் ஜி.எஸ்.டி என தற்போதைய தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை கொண்டு அந்த உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close