முத்தலாக் தீர்ப்பில் கிரிக்கெட் வீரர் கைஃப் கருத்து: குவியும் பாராட்டுகளும், கண்டனங்களும்

முத்தலாக், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இது, இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும்.

Mohammad Kaif‏, triple talaq

முத்தலாக் தீர்ப்பு குறித்து கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் டுவிட்டரில் கூறிய கருத்துக்கு பாராட்டுகளும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

இஸ்லாமிய மதத்தில் தலாக் என மூன்று முறை கூறி, தனது மனைவியை ஒருவர் விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதனால், பாதிப்படைந்த பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த 7 மனுக்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான நீதிபதிகள் ரோஹின்டன் நரிமன், உதய் லலித், ஜோசப் குரியன், அப்துல் நசீர் ஆகிய ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். மூன்று நீதிபதிகள் ஒரு கருத்தையும், இரு நீதிபதிகள் வேறொரு கருத்தையும் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் ரோஹின்டன் நரிமன், உதய் லலித், ஜோசப் குரியன் ஆகியோர் முத்தலாக் விவகாரம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக்கிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.

முத்தலாக் என்பது இஸ்லாமியர்களின் தனிச் சட்டத்தின் ஒரு பகுதி, அது அவர்களது அடிப்படை உரிமை என்ம தெரிவித்த தலைமை நீதிபதி கெஹர், இதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் ஆறு மாதத்துக்குள் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மூன்று நீதிபதிகள் ஒரே கருத்தை தெரிவித்துள்ளதால், பெரும்பான்மை அடிப்படையில் அதுவே செல்லுபடியாகும். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சியை சேர்ந்த தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதேபோல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “முத்தலாக், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இது, இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும். பாலின சமத்துவம் அதி முக்கியமானது” என பதிவிட்டுள்ளார். முகமது கைஃபின் இந்த கருத்துக்கு சிலர் வரவேற்பும், சிலர் கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Web Title: Mohammad kaif%e2%80%8f welcomes decision by supreme court to declare triple talaq unconstitutional gets condemns and greets

Next Story
ரூ.200 நோட்டு நாளை முதல் புழக்கத்துக்கு வருகிறது: ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்புPPF rate cut, covid 19 news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com