Advertisment

பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு: தேர்தல் ஆணையத்தின் ரிமோட் வாக்களிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை

பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரிமோட் வாக்குப்பதிவு முறை திட்டத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

author-image
WebDesk
New Update
Election Commission shelves remote voting plan for now

Election

புலம்பெயர் தொழிலாளர்கள், மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வாக்களிக்க வகை செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் ரிமோட் வாக்களிக்கும் திட்டதை முன்மொழிந்தது. இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த திட்டத்தை ஆணையம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisment

முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம் இதற்காக பிரத்யேகமாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்து அரசியல் கட்சிகளிடையே கருத்து கேட்க அழைப்பு விடுத்தது. இதில் குளறுபடிகள் ஏற்படும் என்றும் இந்த திட்டத்திற்கான முழுமையான தகவல்கள் ஆணையத்திடம் இல்லை என்றும் கூறி அப்போதே காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், டிசம்பரில் முதன்முதலில் இத்திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்த போதே பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஏறக்குறைய 30 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாத நிலைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று ஒப்புக்கொண்ட போதிலும் பெரும்பாலான கட்சிகள் ஆணையத்தின் இந்த திட்டத்திற்கு கவலை தெரிவித்தனர் என்றார். மேலும் இதன் விளைவாக, இந்த திட்டம் எந்த நேரத்திலும் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று வன்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த திட்டத்தின் நிலை குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்டபோது, ​​மார்ச் 29 அன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், கிட்டத்தட்ட 60 தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணையம் பதில்களைப் பெற்றுள்ளது.

ஆணையத்திடம் பதில் இல்லை

காணாமல் போன வாக்காளர்களுக்கான அவுட்ரீச் செய்ய வேண்டிய அவசியம் முழுவதுமாக நிறுவப்பட்டுள்ள நிலையில், செயல்முறைகள், நிர்வாகப் பகுதி, சட்டப் பகுதி மற்றும் தொழில்நுட்பப் பகுதி ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. அனைவரும் முதலில் அதை உறுதிப்படுத்த பரிந்துரைத்துள்ளனர், இது ஒரு நீண்ட செயல்முறை. இதற்கு நேரம் எடுக்கும். எப்படியிருந்தாலும், அதுவரை, அனைவரையும் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரும் முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, ஆர்.வி.எம் மூலம் 72 தொகுதிகளின் தரவு ஒரே நேரத்தில் கையாள முடியும். மேலும் புலம்பெயர்ந்த மக்கள், தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே வாக்களிக்க முடியும்.

ஜனவரி 16 ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், தேர்தல் ஆணையத்தால் அடிப்படை கேள்விகளுக்கு தீர்வு காண முடியவில்லை. ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து, அந்த மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் மற்றொரு மாநிலத்தில் பரவி இருந்தால், எத்தனை சாவடிகள் அமைக்கப்படும்? சாதாரணமாக அங்கு தேர்தல் நடத்தப்படாவிட்போலி வாக்குகள்டாலும், இரண்டாவது மாநிலத்திலும் மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுமா? தேர்தல் ஆணைய அதிகாரிகளால் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை

என்றார்.

போலி வாக்குகள்

தேர்தல் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின் பேசிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் இது எப்படி சாத்தியம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எப்படி அடையாளம் காணப்படுவார்கள் என்று கேட்டார்.

பிப்ரவரி 3-ம் தேதி மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சகம், தற்போது வரை எந்த தேர்தலிலும் ஆணையம் ஆர்.வி.எம் இயந்திரத்தை பயன்படுத்துவதாக கூறவில்லை. ஆர்.வி.எம் அறிமுகம் செய்வதால் போலி வாக்குகள் அதிகரிக்காது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ECIL உருவாக்கிய ஆர்.வி.எம் இயந்திரம், தற்போதுள்ள இ.வி.எம்களின் அடிப்படையில், தொழில்நுட்ப நிபுணர் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment