Advertisment

விடைபெறும் ஹெலிகாப்டர் ஷாட்!

விராட் கோலி: உலகம் சாதனைகளைப் பார்த்தது, நான் தோனி என்கிற அந்த நபரைப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் நன்றி!

author-image
WebDesk
New Update
MS Dhoni Retirement, MS Dhoni

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்தார்.

Advertisment

தனது இன்ஸ்டாகிராமில்,” அனைத்து சூழ்நிலைகளிலும் நீங்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றிகள். இன்று மாலை 1929 (07.29) மணி முதல் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கருதி கொள்ளுங்கள்” என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.

தோனியின் ஓய்வு குறித்து பல பிரமுகர்கள் தங்கள் கருத்திக்களைத் தெரிவத்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்:  

தோனி ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் , "இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பு மகத்தானது. ஒன்றாக இனைந்து 2011 உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் " என்று தெரிவித்தார்.

 

 

 

 

விராட் கோலி : 

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒரு நாள் தனது பயணத்தை முடிக்க வேண்டும்.  ஆனால், நமக்கு நெருக்கமான ஒருவர் அந்த முடிவை அறிவிக்கும்போது, அதிகப்படியான உணர்ச்சியை உணர்கிறோம்.  நீங்கள் நாட்டிற்காக செய்த அனைத்தும் மக்கள் இதயத்தில் இருக்கும், ஆனால் உங்களிடமிருந்து நான் பெற்ற பரஸ்பர மரியாதை, அரவணைப்பு எப்போதும் என்னுடையதாகவே இருக்கும். உலகம் சாதனைகளைப் பார்த்தது, நான் தோனி என்கிற அந்த நபரைப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் நன்றி" என்று விராட் கோலி தெரிவித்தார்.

 

 

 

 

 

அஷ்வின்: 

சாதனையாளர்கள் எப்போதும் தனது சொந்த பாணியில் ஓய்வு பெறுவார்கள்.  எம்.எஸ்.தோனி, நீங்கள் நாட்டிற்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். சாம்பியன்ஸ் கோப்பை , 2011 உலகக் கோப்பை, புகழ்பெற்ற சென்னை ஐபிஎல் வெற்றிகள் எப்போதும் என் நினைவில் இருக்கும். உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளார் அஸ்வின் தெரிவித்தார்.

 

 

கிரிக்கெட் அரங்கில் இந்தியாவுக்கு பல கவுரவங்களை பெற்று தந்த ஒரு வீரருடன் விளையாடியது எனது  பாக்கியம் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்தார்.

 

 

ஹர்ஷா போகல்: 

ஹர்ஷா போகல் தனது ட்விட்டரில், " நீல நிற ஜெர்சியில்  உங்களை மறக்க முடியாது. மஞ்சள் நிற செர்சியில்  சந்திப்போம்" என்று தெரிவித்தர்.

 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் எம்.எஸ் தோனி

விரேந்திர சேவாக்: 

வீரர்கள் வருவார்கள், போவார்கள், ஆனால் அவரைப் போன்ற ஒரு அமைதியான மனிதரை காண்பது அரிதான காரியம் என்று விரேந்திர சேவாக் தனது ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

 

 

அமித் ஷா:  

உங்கள் helicopter ஷாட்-களை சர்வதேச கிரிக்கெட் மிஸ் பண்ணும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில் தெரிவித்தார்.  மேலும், "உங்களுக்கு வாழ்த்துக்களை பறை சாற்றும் கோடிக் கணக்கான ரசிகர்களுடன் நானும் ஒருவனாக உள்ளேன். இந்திய கிரிக்கெட் அணியை வலுப்படுத்துவதில் வரும் நாட்களிலும் தோனியின் பங்கு தொடரும் என  நம்புகிறேன்"  எனத் தெரிவித்தார்.

 

 

 

Mahendra Singh Dhoni Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment