Advertisment

சட்டமன்ற தேர்தல் 2021 : மேற்கு வங்கத்தில் பாஜக அடித்தளம் அமைக்க உதவிய முகுல் ராய்!

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்ற தந்த பெருமை இவருக்கே உரியது.

author-image
WebDesk
New Update
சட்டமன்ற தேர்தல் 2021 : மேற்கு வங்கத்தில் பாஜக அடித்தளம் அமைக்க  உதவிய முகுல் ராய்!

Santanu Chowdhury 

Advertisment

Mukul Roy: The pied piper in West Bengal Assembly elections :  மமதா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் இருந்த முகுல் ராய், தற்போது மேற்கு வங்கத்தில் பாஜகவின் அடித்தளத்தை வலுப்படுத்தும் முக்கியமான நபர்களில் ஒருவராக இருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தலைவர்களை சேர்ப்பதும் இந்த வேலையில் அடங்கும்.

இக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருக்கும் ராய், பாஜகவின் மேற்கு வங்க பிரச்சாரத்தை முழுமையாக வடிவமைத்திருக்கிறார். 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று ராய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் இளைஞரணியில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதே நேரத்தில் தான் மமதா பானர்ஜியின் அந்த அமைப்பில் ஒரு உறுப்பினராக பங்காற்றினார். 1998ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸை மமதா உருவாக்கிய போது அக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக அவரும் இருந்தார். பின்பு ராய் அக்கட்சியின் டெல்லியின் முகமாக மாறினார். 2006ம் ஆண்டு அக்கட்சியின் பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ராஜ்யசபை உறுப்பினராகவும் தேர்வானார். காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் ஆட்சியில் கப்பல் துறையின் இணை அமைச்சராக பணியாற்றினார். பின்பு ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

மேலும் படிக்க : உஜ்வாலா டு ஜூம்லா… மோடி- அமித்ஷா கூட்டணியின் பொய்கள்: மமதா கடும் தாக்கு

ஆனால் அவருடைய பதவி காலம் குறைந்த நாட்களுக்கு மட்டுமே இருந்தது. 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது திரிணாமுல். 2015ம் ஆண்டு சாரதா நிறுவன மோசடி வழக்கில் ராயின் பெயர் அடிபடவும் மமதாவிற்கும் அவருக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2017ம் ஆண்டு, 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். அதே ஆண்டு நவம்பரில் அவர் பாஜகவில் இணைந்தார்.

மேற்கு வங்க அரசியலின் சாணக்கியா என்று அழைக்கபப்டும் அவர் பாஜகவிற்கான அடித்தளத்தை அம்மாநிலத்தில் உருவாக்கி வருகிறார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்ற தந்த பெருமை இவருக்கே உரியது. எம்.எல்.ஆ. சுப்ரங்க்சு ராய், சோவன் சாட்டர்ஜி, சப்யசாச்சி தத்தா, சுனில் சிங், பிஸ்வஜித் தாஸ், வில்சன் சம்பமரி மற்றும் மிஹிரி கோஸ்வாமி உள்ளிட்டோர்களை பாஜகவிற்கு அழைத்து வந்ததில் இவருடைய பங்கு முக்கியமானது. சுவேந்து அதிகாரி, ரஜிப் பானர்ஜி, ஜித்தேந்திர திவாரி உள்ளிட்ட பலரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு அழைத்து வந்ததை மிகப்பெரிய வெற்றியாக பாஜக பார்க்கிறது.

திங்கள் கிழமை அன்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சோனாலி குஹா (மமதாவின் நெருங்கிய வட்டத்தில் ஒருவராக காணப்பட்டார்), ரபிந்திரநாத் பட்டாச்சார்யா, ஜது லாஹிரி, சிதால் சர்தார், மற்றும் திபெந்து பிஸ்வாஸ் உள்ளிட்டோர் பாஜகவிற்கு அணி மாறினார்கள். . “முகுல் டா” கோரிக்கையின் பேரில் தான் பாஜகவுக்கு செல்வதாக குஹா கூறினார். கட்டார் ராய் மற்றும் கட்சி தாவிய மற்றவர்கள் குறித்து பேசிய மமதா, புலிக்குட்டி எலிகள் மற்றும் பூனைகளை பார்த்து பயப்படுவது இல்லை என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

West Bengal Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment