Advertisment

கொரோனா வார்டில் ஆண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: பணியில் சேர்ந்த மறுநாளே சிக்கிய டாக்டர்

மும்பை வோக்ஹார்ட் மருத்துவமனையின் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்ட 44 வயது ஆண் நோயாளியை பாலியல் தொந்தரவு செய்ததாக 34 வயது மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
madras high court, central government, covid 19, corona virus, சென்னை ஐகோர்ட், சானிடைசர், முகக் கவசம்

மும்பை வோக்ஹார்ட் மருத்துவமனையின் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்ட 44 வயது  ஆண் கொரோனா நோயாளிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 34 வயது மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர், கைது செய்து விசாரிக்கப்படவில்லை என்று அக்ரிபாடா போலீசார் தெரிவித்தனர். தானே நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  மருத்துவர் கண்காணிக்கப் பட்டுவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

இதற்கிடையே, குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவரை பணிநீக்கம் செய்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. குற்றம் நடந்ததாக கூறப்படும் ஒரு நாளைக்கு முன்னதாகத் தான் அவர் மருத்துவமனையில் பணியமர்த்தபட்டார். தவறான நடத்தை பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன், நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது. மருத்துவரின் பணிகள்  நிறுத்தப்பட்டன,” என்று வோக்ஹார்ட் மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"நவி மும்பை மருத்துவக் கல்லூரியில் எம்.டி. மருத்துவ படிப்பை முடித்துள்ளார். சம்பவம் மே 1 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் நடந்ததாக அறியப்படுகிறது" என்று காவல்துறை வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனை மனிதவள மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்), ஐபிசி பிரிவு 269 ( உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல் ) ஐபிசி பிரிவு 270 (உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய தீய எண்ணத்திலான செயல்) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

" மருத்துவமனை மனிதவள மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் வழக்கை பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்.  ஏப்ரல் 30 அவர் மருத்துவமனையால் பணியமர்த்தப்பட்டார். பணியில் சேர்ந்த இரண்டாவது நாளே இந்த குற்ற செயலை செய்துள்ளார்,”என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மே 1 அன்று மருத்துவமனையின் 10 வது மாடியில் உள்ள ஐ.சி.யு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியின் அறைக்குள் குற்றம் சாட்டப்பட்டவர் நுழைந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் பாலியல் ரீதியாக தாக்குதல் செய்தவுடன், நோயாளி கூச்சல் எழுப்பியுள்ளார். வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஊழியர்கள் உடனடியாக ஐ.சி.யு அறைக்குள் நுழைந்தனர், என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நாங்கள் மருத்துவரை இன்னும் கைது செய்யவில்லை. நோயாளியுடன் தொடர்பு கொண்டதால், அவருக்கும் கொரோனா தொற்று ஏற்ப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்,”என்று அக்ரிபாடா காவல் நிலையத்தின் மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சவ்லாரம் அக்வானே தெரிவித்தார். மேலும், குற்றம் தொடர்பாக இன்னும் யாரிடம் எந்த வாக்கு மூலத்தையும் பெறவில்லை,"என்று  விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோயால் பாதிக்கப்பட்ட  60 வயது நிரம்பிய  மருத்துவர்கள், வீட்டிலேயே இருந்து பணி புரிந்து வருகின்றனர்.  இதனால், அவசரமாக இளைய மருத்துவர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

வோக்ஹார்ட் மருத்துவமனையின் 80 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த மருத்துவமனை ஒரு மாதத்திற்கு மேல் மூடப்பட்டது.  பிரத்யேக கொரோனா மருத்துவமனையாக இந்த மருத்துவமனை மீண்டும் ஏப்ரல் 23 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக 30 படுக்கைகளை கொண்டுள்ளது என்று மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment