Advertisment

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் ; காரை விற்று உதவும் இளைஞர்

தன்னுடைய தங்கைக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைத்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார் என்று எண்ணி வேதனை அடைகிறார் இந்த இளைஞர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mumbai man sells his SUV to buy 250 oxygen cylinders

Mumbai man sells his SUV to buy 250 oxygen cylinders

Mumbai man sells his SUV to buy 250 oxygen cylinders :  கொரோனா வைரஸ் தான் யார் மீது யார் மிகுந்த அக்கறையாக உள்ளார்கள் என்பதை நமக்கு காட்டும் ஒரு முக்கியமான கருவியாக இருக்கிறது என்று கூறலாம். மனிதாபிமானம் என்பது இன்னும் மரித்துவிடவில்லை என்பதை தங்களின் செயல்கள் மூலம் செய்து காட்டுகிறார்கள் பலரும்.

Advertisment

மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய எஸ்.யூ.வி காரை விற்று 250 நபர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

மும்பை மலாட் பகுதியில் ஏற்கனவே குடிபுக தயார் நிலையில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதி அளித்தது தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று. தற்போது அதே பகுதியை சேர்ந்த ஷானவாஸ் ஷேக் என்பவர் தன்னுடைய ஃபோர்ட் எண்டீவர் காரை விற்பனை செய்து இந்த உதவியை மேற்கொண்டுள்ளார். 2011ம் ஆண்டு வாங்கிய இந்த காரை சமீபத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ஆம்புலன்ஸாக மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 28ம் தேதி, அவருடைய 6 மாத கர்ப்பிணி தங்கை கொரோனா வைரஸால் உயிரிழந்தார். 5 ஆட்டோக்கள் வரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி கேட்ட கொண்ட போதும் அவருக்கு ஆட்டோ கிடைக்கவில்லை. இறுதியாக கிடைத்த ஆட்டோவில் மருத்துவமனை சென்று சேரும் போதே அவர் உயிரிழந்தார்.

தன்னுடைய தங்கைக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைத்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார். இந்த எண்ணம் அவரை உறுத்திக் கொண்டே இருக்க தன்னுடைய காரை விற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிக் கொடுத்து ஏழை மக்களுக்கு உதவி வருகிறார் சானவாஸ்.

மேலும் படிக்க : மும்பைக்காரங்களுக்கு தங்கமான மனசு! கொரோனா சிகிச்சைக்கு 13 மாடி குடியிருப்பை கொடுத்த நிறுவனம்

Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment