Advertisment

ஜனாதிபதி குறித்த அமைச்சர் கருத்து; பழங்குடியின வாக்குகளை குறி வைக்கும் பா.ஜ.க… திணறும் திரிணாமுல் காங்கிரஸ்

ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்; பழங்குடியின வாக்குகளை கவர பா.ஜ.க திட்டம்; திணறும் மம்தா கட்சி

author-image
WebDesk
New Update
ஜனாதிபதி குறித்த அமைச்சர் கருத்து; பழங்குடியின வாக்குகளை குறி வைக்கும் பா.ஜ.க… திணறும் திரிணாமுல் காங்கிரஸ்

Atri Mitra

Advertisment

ஜனாதிபதி திரௌபதி முர்முவைப் பற்றி திரிணாமுல் காங்கிரஸின் அமைச்சர்களில் ஒருவரது புறக்கணிப்புக் கருத்து, மேற்கு வங்கத்தில் கணிசமான பழங்குடியின மக்கள் பா.ஜ.க.,வை நோக்கிச் செல்வதைத் தடுக்க திரிணாமுல் காங்கிரஸின் நன்கு வகுக்கப்பட்ட திட்டங்களைத் தடம் புரட்டுவதாக அச்சுறுத்துகிறது.

திரௌபதி முர்மு, நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடித் தலைவர் ஆவார். கிழக்கு மிட்னாபூர் தலைவரும் டி.எம்.சி அமைச்சருமான அகில் கிரி, ஜனாதிபதி தோற்றம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த பிரச்சினையை விட்டுவிடக்கூடாது என்பதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது, மேலும் ஞாயிற்றுக்கிழமை, அவர் ராஜினாமா செய்யக் கோரி மாநிலம் முழுவதும் பழங்குடியின அமைப்புகளுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியது.

இதையும் படியுங்கள்: மோடி, அமித்ஷா: பா.ஜ.க இந்த இரு நபர்களை பெரிதும் சார்ந்திருப்பது ஏன்?

வங்காளத்தின் எண்ணிக்கையில் பழங்குடியினர் 7-8% என்று நம்பப்படுகிறது. பங்குரா, புருலியா, ஜார்கிராம் மற்றும் மேற்கு மிட்னாபூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஜங்கிள்மஹால் பகுதியில் உள்ள நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளிலும், டார்ஜிலிங், கலிம்போங், அலிபுர்துவார், ஜல்பைகுரி, கூச்பெஹார், வடக்கு மற்றும் தெற்கு தினாஜ்பிர் மற்றும் மால்டா போன்ற வடக்கு வங்காள மாவட்டங்களில் உள்ள எட்டு தொகுதிகளிலும், பழங்குடியினர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 25% வரை உயரும்.

2019 மக்களவைத் தேர்தலில், 22 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.க 18 இடங்களில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை திகைக்க வைத்தபோது, பழங்குடியினப் பகுதிகளில் பா.ஜ.க நல்ல ஆதரவைப் பெற்றது. ஜங்கிள்மஹாலில் உள்ள அனைத்து இடங்களையும், வடக்கு வங்காளத்தில் ஆறு தொகுதிகளையும் கைப்பற்றியது.

TMC 2021 சட்டமன்றத் தேர்தலில், குறிப்பாக ஜங்கிள்மஹால் மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் போராடி வெற்றி பெற்றது, இது கட்சியின் மகத்தான வெற்றிக்கு பங்களித்தது.

திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக நியமிப்பதில் மோடி அரசாங்கத்தின் திறமையை டி.எம்.சி மேலிட தலைவர் மம்தா பானர்ஜி உணர்ந்துள்ளார். ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு, பா.ஜ.க எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்திருந்தால், திரௌபதி முர்மு "ஒருமித்த வேட்பாளராக" இருந்திருக்கலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

டி.எம்.சி தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்க ஒருமித்த கருத்தைக் கட்டியெழுப்புவதில் மம்தா முக்கிய பங்கு வகித்த போதிலும் இது நடந்தது.

“அவர்கள் (என்.டி.ஏ) பழங்குடியினப் பெண் அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தால், நாங்கள் அதைப் பற்றி (ஒருமித்த கருத்து) யோசித்திருக்கலாம். பழங்குடியின மக்கள் மீதும் பெண்கள் மீதும் எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது,” என்று கூறிய மம்தா, யஷ்வந்த் சின்ஹா ​​ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டதால், அவருடன் செல்வதாக கூறினார்.

திரௌபதி முர்முவை முன்னிறுத்துவதைத் தவிர, பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மற்றொரு சைகையுடன் சந்தால் பழங்குடியினரை அணுகினார். நாட்டில் உள்ள மொழிகள் மற்றும் எழுத்துகளின் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் அதே வேளையில், அரசியலமைப்பை சந்தாலி மொழியின் ஓல் சிகி ஸ்கிரிப்ட்டில் மொழிபெயர்த்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீபதி டுடுவின் பணியைப் பாராட்டினார்.

பழங்குடியின போராளியான பிர்சா முண்டாவின் பிறந்தநாளான செவ்வாயன்று ஜார்கிராமிற்கு மம்தா திட்டமிட்டிருந்த வருகைக்கு சில நாட்களுக்கு முன்னதாக, பழங்குடியினரை நோக்கிய மற்றொரு நடவடிக்கையாக கிரியின் தவறான கருத்துக்கள் வந்துள்ளன. அன்றைய தினத்தை பொது விடுமுறையாக டி.எம்.சி அரசு முன்னதாக அறிவித்தது.

கிரியின் அறிக்கை தொடர்பாக டி.எம்.சி.,யை குறிவைத்து, பா.ஜ.க மாநிலத் தலைவர் சுகந்தா மஜூம்டர், அமைச்சர் இதற்கு முன்பும் இதே போன்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளார், மேலும் கட்சி "பழங்குடியினருக்கு எதிரானது" என்று குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க.,வின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளரும், மேற்கு வங்கத்தின் இணைப் பொறுப்பாளருமான அமித் மால்வியா ட்வீட் செய்ததாவது: “மம்தா பானர்ஜி எப்போதும் பழங்குடியினருக்கு எதிரானவர், ஜனாதிபதி திரௌபதி முர்முவை பதவிக்கு ஆதரிக்கவில்லை, இப்போது இது. சொற்பொழிவின் வெட்கக்கேடான நிலை."

வெள்ளிக்கிழமை தகராறு வெடித்தவுடன் கிரியின் கருத்துக்களில் இருந்து டி.எம்.சி விலகிக் கொண்டது. கிரி கூறியது "பொறுப்பற்றது" என்றும், கட்சியின் கருத்துகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் கட்சி கூறியது. "இந்திய ஜனாதிபதியைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம், அவர் மற்றும் அவரது பதவியை மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்துகிறோம்" என்று டி.எம்.சி செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே ட்வீட் செய்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை, TMC ஆதிவாசி தலைவரும் அமைச்சருமான ஜோத்ஸ்னா மண்டி, "ஒரு பெண் ஜனாதிபதி குறித்து கிரி கூறியதை என்னால் ஆதரிக்க முடியாது." என்று கூறினார்.

கிரியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த டி.எம்.சி தலைவர் குணால் கோஷ், பா.ஜ.க தனது சொந்த தலைவர்களின் சில கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார். “நாட்டின் ஒரே பெண் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிரான கருத்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பா.ஜ.க தலைவர்களிடமிருந்து எந்த விதமான கண்டனத்தையும் நாங்கள் இன்னும் காணவில்லை.” 2021 பிரச்சாரத்தின் போது, ​​மம்தாவை குறிவைத்து “தீதி, ஓ தீதி!” என்று மோடி விமர்சித்தார்.

மேலும், “(எதிர்க்கட்சித் தலைவர்) சுவேந்து அதிகாரி, மாண்புமிகு முதல்வரை ‘பேகம்’ என்று தொடர்ந்து குறிப்பிடும்போது பா.ஜ.க தலைவர்களிடமிருந்து கண்டனம் எங்கே? பெண் தலைவர்களுக்கு எதிராக அதன் தலைவர்கள் கண்டிக்கத்தக்க கருத்துக்களைப் பயன்படுத்தும்போது பா.ஜ.க.,வின் ‘நாரி சம்மன்’ பலகை எங்கே? என்றும் குணால் கோஷ் கூறினார்.

பழங்குடியினர் பா.ஜ.க.,வின் கூற்றுகளுக்கு விழுவதை விட நன்றாக விஷயம் தெரிந்தவர்கள் என்று கோஷ் கூறினார். “பா.ஜ.க என்ன சொல்கிறது என்பது திரிணாமுலுக்கு முக்கியமல்ல, பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். பழங்குடியினர், ஜங்கிள்மஹாலில் வசிப்பவர்கள்... திரிணாமுல் மற்றும் மம்தா பானர்ஜி அவர்களுக்காக என்ன செய்தார்கள் என்பதையும், ஆதிவாசிகளை அவர்கள் எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள். துர்கா பூஜையின் போது, ​​'ஜங்கிள் கன்யா' தீம் பூஜை இருந்தது, அதன் பிராண்ட் தூதராக பழங்குடியின அமைச்சர் பிர்பாஹா ஹன்ஸ்தா இருந்தார். முதல்வர் மம்தா பானர்ஜி மேடையில் இருந்து இறங்கி தனது நிலத்தின் பழங்குடியினருடன் நடனமாடினார். மரியாதை என்றால் என்ன என்பதை பா.ஜ.க தலைவர்கள் எங்களுக்குக் கற்றுத் தர வேண்டியதில்லை” என்று குணால் கோஷ் கூறினார்.

இருப்பினும், TMC மூத்த தலைவர் ஒருவர் கூறியது போல், இது தவறான துணிச்சலாக இருக்கலாம். “பள்ளி வேலை மோசடி காரணமாக நாங்கள் ஏற்கனவே பின்வாங்குகிறோம். இப்போது இந்த அறிக்கை எங்கள் பழங்குடியினரின் வாக்குகளைப் பாதிக்கும்,” என்று கூறினார்.

செவ்வாய் கிழமை மம்தா என்ன செய்கிறார் என்பதில்தான் அனைவரின் பார்வையும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mamata Banerjee West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment