Advertisment

முஸ்லீம் மக்களை மாட்டுடன் ஒப்பிட்டு பேசிய பிஜேபி எம்.எல்.ஏ.. வெடித்தது சர்ச்சை!

90 சதவீத முஸ்லீம்கள் பாஜக-வுக்கு ஓட்டு போடவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bjp wins karnataka

Assam BJP MLA

அசாம் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பிரசாந்த் பூகன் முஸ்லீம் மக்களை மாட்டுடன் இணைத்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.

Advertisment

நேற்றைய தினம் அசாமில் நடைப்பெற்ற பாஜக பிரச்சாரக் கூடத்தில் எம்.எல். ஏ பிரசாந்த பூகன் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை விமர்சித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ”முஸ்லீம் மக்கள் பசு மாடு போன்றவர்கள். ஆனால் பால் தராத பசுமாடுகள்” என்று கூறினார்.

பிரசாந்த் பூகனின் இந்த பேச்சு கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இதுக் குறித்து விவாதங்கள் அரங்கேறின. இந்நிலையில், இதுக் குறித்து விளக்கமளித்த எம்.எல்.ஏ பிரசாந்த் பூகன், “என்னுடைய கருத்து தவறாக பரபரப்பட்டுள்ளது. நான் கூற வந்தது 90 சதவீத முஸ்லீம்கள் பாஜக-வுக்கு ஓட்டு போடவில்லை. அப்படி இருக்கையில் பால் தராத மாட்டிற்கு ஏன் தீவனம் வைக்க வேண்டும்” என்ற முறையில் தான் நான் அத்தகைய கருத்தை கூறினேன்.

நான் பழமொழியை முன்னிறுத்தி தான் இப்படி கூறினேன். முஸ்லீம்களை மாடுகள் என்று கூறவில்லை. என்னுடைய கருத்து தவறாக பார்க்கப்பட்டு வருகிறது. என தெரிவித்தார். எம்.எல்.ஏ பிரசாந்த் பூகனின் இந்த கருத்திற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு குரல்கள் கிளம்பியுள்ளன. முஸ்லீம் சமூகத்தினர் பலரும் பிரசாந்த் மன்னிப்பு கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாஜக எம்.எல்.ஏ வின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுக் குறித்து காங்கிரஸ் வேட்பாளர் சய்கியா எழுதியிருக்கும் கடிதத்தில் “பாஜக எம்.எல்.ஏ பிரசாந்த் பூகன் முஸ்லீம் மக்களை மாட்டுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெரும்பாலான முஸ்லீம் மக்கள் பாஜகவிற்கு ஓட்டு போடவில்லை. இதை ஏற்ற்றுக் கொள்ள முடியாத அவர்கள் முஸ்லீம் மக்கள் மீது தங்களது வெறுப்பை பதிவு செய்து வருகின்றன.

ஓட்டு போடாத காரணத்தினால், பால் தாராத மாட்டிற்கு ஏன் தீவனம் வைக்க வேண்டும் என்று கேவலான கருத்தை பதிவு செய்துள்ளனர். பாஜக அரசு முஸ்லீம் சமூகத்தினருக்காக எந்தவித நலத்திட்டங்களை செய்யவில்லை அதனால் அவர்கள் தேர்தலில் பாஜக அரசை புறம் தள்ளியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Bjp Assam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment