மத்திய அரசும், பாஜகவும் நாகாலாந்து காயத்தை குணப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. ஏனெனில், அங்கு டிசம்பர் 4 அன்று மோன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல் காரணமாக, கட்சிக்கு எதிர்ப்பு இருந்து வந்தது.
தற்போது, மூன்று நாள் பயணமாக அங்கு சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதியாகவும், டெல்லியில் இருக்கும் பாட்னர், நண்பர் என்ற போர்வையில் வந்துள்ளதாக தெரிவித்தார். முதலில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதிக்கு சென்ற ராஜீவ், அங்கிருக்கும் ராஜ்யசபா எம்.பி எஸ் ஃபாங்னான் கொன்யாக்கின் வீட்டில் அப்பகுதி மக்களுடன் நேரத்தை செலவிட்டார். இது, கொன்யாக் சமூகத்தின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான ஒரு முயற்சி என்று கட்சியின் உள்விவகாரர்கள் தெரிவித்தனர்.
இதுதவிர அச்சமூகத்திற்கு பாசிட்டிவ் சிக்னல் அனுப்பும் வகையில் லோங்வா கிராமத்தில் அமர்ந்தப்படியே, மத்திய திட்ட அமலாக்கத்தை மதிப்பாய்வு பணிகளில் அமைச்சர் ஈடுபட்டார். லோங்வா கிராமம் பாதி மியான்மரிலும், பாதி இந்தியாவிலும் உள்ளது.
கனவுகளுடன் ஒட்டியிருங்கள்….
புகழ்பெற்ற கதிரியக்க வல்லுநர்களான டாக்டர் கர்னல் சி எஸ் பான்ட், டாக்டர் வனீதா கபூர் ஆகியோர் இணைந்து எழுதிய புத்தகம் சனிக்கிழமை அன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. அப்போது, மேடையில் இருந்த மருத்துவர் ஒருவர், மருத்துவப் பட்டதாரிகள் பல ஆண்டுகளாகப் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை குறித்து எடுத்துரைத்தார்.
அவரை கூற்றை ஏற்றுக்கொண்டு, புத்தகத்தை வெளியிட்ட தலைமை நீதிபதி என்.வி ரமணா, மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி கொண்டிருந்த தனது மகள் ஸ்ரீ புவனா நூதலபதியிடம், மருத்துவ கனவை கைவிடுமாறு கூறிய நிகழ்வை நினைவுக்கூர்ந்தார். மருத்துவர்களின் போராட்டத்தைப் பார்த்த தலைமை நீதிபதி, மகளிடம் தன்னை போல் வழக்கறிஞராக இருப்பது சிறந்தது என்றேன் ஆனால், அதனை நிராகரித்துவிட்டு, நன்கு படித்து கதிரியக்கவியலில் எம்.டி பட்டத்தை பெற்றுள்ளார். தற்போது, டாக்டர் பந்த் மற்றும் டாக்டர் கபூருடன் பணிபுரிகிறார் என்றார்.
ரிமைன்டர்
அமலாக்க இயக்குனரகத்தின் முன்னாள் இணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங், பதவியை ராஜினாமா செய்த மறுநாளே உ.பி., ட்டசபை தேர்தலில் சரோஜினி நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். அவர், எம்.எல்.ஏ.,வாகப் முழுவதுமாக மாறிட சிறிது காலம் எடுக்கும் என தெரிகிறது. தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நெருக்கமாகப் பின்தொடரும் சிங், சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பதிவிடுவார்.
ஒவ்வொரு முறையும் அவர் தனது தொகுதி பிரச்சினை அல்லது உபி பிரச்சினை இல்லாததை சமூக வலைதளத்தில் பதிவிடும் போது, நீங்கள் சரோஜினி நகர் எம்எல்ஏ என்பதை அவருக்கு நினைவூட்டுவது வழக்கம். அந்த வகையில், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் தஜிந்தர் பக்கா கைது குறித்து ட்வீட் செய்கையில், நீங்கள் உபி எம்எல்ஏ என நெட்டிசஸ்கள் நினைவூட்டினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.