Advertisment

மோடியின் ஒவ்வொரு அசைவையும் நேரலையில் காண ‘நமோ’ டிவி!

நரேந்திர மோடி பெயரிலுள்ள இரண்டு எழுத்துகளை எடுத்து ‘நமோ’ டி.வி என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BJP launched Namo TV

BJP launched Namo TV

Namo TV: பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ‘நமோ தொலைக்காட்சி’யை அறிமுகப்படுத்த இருப்பதாக, பா.ஜ.க அறிவித்துள்ளது.

Advertisment

இத்தொலைக்காட்சி அனைத்து டி.டி.ஹெச்-சிலும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை உடனுக்குடன், நேரலையில் தொண்டர்களும், மக்களும் கண்டுகளிக்கலாம்.

”வண்ணமயமான தேர்தலை காணுங்கள். மக்களாட்சியின் குதூகலத்தைக் கண்டு மகிழுங்கள். மீண்டும் ஒருமுறை நமோ டி.வி-யின் மூலம் ’நமோ’வுக்கு ஆதரவு கொடுங்கள்” என ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறது பா.ஜ.க

தனது நிகழ்ச்சிகளை நமோ டி.வி-யில் பார்த்து ரசிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், ”#MainBhiChowkidar campaign இன்று மாலை நடக்கிறது. நாமெல்லாம் காத்துக் கொண்டிருந்த அந்நாள் வந்து விட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் செளகிதார்கள் கலந்துக் கொண்டு, தங்களது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இந்த கலந்துரையாடலை நீங்கள் நிச்சயம் தவற விடக்கூடாது. இதனை நமோ டி.வி அல்லது நமோ ஆப்பில் கண்டு ரசியுங்கள்” என நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

நமோ டி.வி என்றால் என்ன? 

நரேந்திர மோடி பெயரிலுள்ள இரண்டு எழுத்துகளை எடுத்து ‘நமோ’ டி.வி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில், பிரதமரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும். மோடியின் படம் தான் இந்தச் சேனலின் லோகோவாக டிஸைன் செய்யப்பட்டுள்ளது. மோடியின் ஊர்வலம், மக்களவை தேர்தல் பிரச்சாரம், உள்ளிட்டவைகளும் இதில் இடம்பெறும். தவிர, மோடி பேசியவைகளை மக்கள் படிக்கும் விதத்தில் டி.வி திரையில் ஸ்க்ராலிங்கும் இடம்பெறும். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு உட்பட்டே இந்தச் சேனலில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும்.

தவிர, நமோ என்ற அதிகாரப்பூர்வ ஆப்பையும் வைத்திருக்கிறார். இதில் மோடியின் ஒவ்வொரு அசைவும் உடனுக்குடன் அப்டேட் ஆகும். அதோடு அவரிடமிருந்து நேரடியாக செய்தி மற்றும் இ-மெயிலை சப்ஸ்கிரைபர் பெறும் வாய்ப்பும் உள்ளது.

இதற்கு முன் 2012-ல் குஜராத் தேர்தலின் போதும் நமோ டி.வி-யை வெளியிட முயற்சி செய்தார். 2007 சட்டமன்றத் தேர்தலின் போது, மோடி 'வந்தே குஜராத்' என்ற ஒரு ஐ.பி.டி.வி சேனலைத் தொடங்கினார், ஆனால் புகார்களைத் தொடர்ந்து தேர்தல் கமிஷன் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

எங்கெல்லாம் நமோ டி.வி-யைப் பார்க்கலாம்?

ஏர்டெல், டாடா ஸ்கை, டிஷ் டி.வி போன்ற அனைத்து முன்னணி டி.டி.ஹெச்-சிலும் இதனை கண்டு ரசிக்கலாம்!

Bjp Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment