Advertisment

முஸ்லிம்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள், ஆனால்; கட்சிக்கு பிரதமர் மோடி விடுத்த செய்தி

வழக்கமான அரசியலுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும், என்று கட்சித் தலைவர்களுக்கு மோடி அறிவுறுத்தினார். நேர்மறையான சூழல் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பலத்தை அதிகரிக்க உதவும் என்று அவர் நம்புகிறார்.

author-image
WebDesk
New Update
bjp

In PM Modi’s message to BJP, the subtext: To find another gear, create soft power and goodwill

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு நிறைவுக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில்- பாஜகவின் தேர்தல் வெற்றி பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல- 2024 பொதுத் தேர்தலில் கட்சியை விரிவுபடுத்துவதற்கும் அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நல்ல எண்ணத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற தெளிவான செய்தி இருந்ததாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்

Advertisment

விளிம்புநிலை, சிறுபான்மையினர் மற்றும் சிறு சமூகங்களைச் சென்றடையவும், மத்தியிலும், பல முக்கிய மாநிலங்களிலும் பாஜக ஆளும் கட்சி என்பதை ஏற்றுக்கொண்டு, “வழக்கமான அரசியல் மற்றும் தேர்தல் அரசியலுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும்” என்று மோடி பாஜக தொண்டர்களை வலியுறுத்தினார்.

அனைத்து தரப்பு மக்களிடையே மென் சக்தியையும் நல்லெண்ணத்தையும் உருவாக்க பாஜக புதிய பாணி அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி என்னிடம் கூறினார். பாஜக நேர்மறையான சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நல்லெண்ணமும் மென்மையான சக்தியும் அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும், என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

மோடி உரையில் 18-25 வயதிற்குட்பட்டவர்களைப் பற்றிய குறிப்பு, கட்சி அந்த வயதினருக்கும் கவனம் செலுத்தும் என்று சுட்டிக்காட்டியது - அந்த வயது இளைஞர்கள் வளர்ச்சி மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தில் ஆர்வமாக உள்ளனர். மோடியின் கருத்துப்படி - அதை வலுவான விசுவாசமான பாஜக ஆதரவு தளமாக மாற்ற வேண்டும்.

தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி ஆற்றிய உரையில், "தேர்தல் பரிசீலனைகள் இல்லாமல்" ஒதுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்கள் உட்பட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடையுமாறு கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். பாஸ்மாண்டா, போராஸ், முஸ்லீம் தொழில் வல்லுநர்கள் மற்றும் படித்த முஸ்லீம்களிடம் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக, வாக்குகளை எதிர்பார்க்காமல் பாஜக தொண்டர்கள் அணுக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

பேசும் போது குறிப்புகள் எழுதப்பட்ட குறிப்பேட்டை வைத்திருந்த மோடி, ஹைதரபாத் தேசிய செயற்குழு கூட்டத்திலும் ,சிறுபான்மையினரிடையே உள்ள ஓரங்கட்டப்பட்ட குழுக்களை சென்றடைய வேண்டும் என்ற தனது செய்தியை மீண்டும் வலியுறுத்தினார்.

பஞ்சாபிற்கு வெளியே உள்ள பல மாவட்டங்களிலும் சீக்கிய சமூகம் இருப்பதாகவும், தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு அவர்கள் சிறிய சமூகம் என்று நினைத்து பாஜக தொண்டர்கள் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் பேசியதை நினைவுகூர்ந்த பாஜக தலைவர் ஒருவர், “எப்போதும் வாக்குகளைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் என்று அவர் கூறினார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் சிறு குழுக்களையும் குறிப்பிட்ட அவர், ஜனசங்க காலத்தில் இருந்து அவர்கள் எப்போதும் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறினார். போஹ்ராஸ் போன்ற சிறிய சமூகங்கள் இருப்பதாகவும், அவர்களில் பல படித்த முஸ்லிம்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காமல் இருந்தாலும், பல நடவடிக்கைகளில் அக்கட்சிக்கு ஒத்துழைக்கிறார்கள். முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்,, ஆனால் அது அவர்களை அணுகுவதில் இருந்து நம்மை தடுக்கக் கூடாது.

கட்சித் தலைவர் ஒருவர் கூறும்போது, ​​பாஜகவின் எண்ணிக்கையை 303ல் இருந்து அதிகரித்து, மேலும் பெருமையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவதே இலக்கு. ஏனெனில் நேர்மறையான சூழல், வளர்ச்சிப் பணிகளைப் பற்றி பேசுவதற்கும் எங்கள் தளத்தை விரிவுபடுத்துவதற்கும்- நமக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.

பிரதமர் கூறிய மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், ‘இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாடு’. மோடியின் கூற்றுப்படி, கோவிட்க்கு பிந்தைய உலகளாவிய சூழ்நிலையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன, G-20 தலைவர் பதவிக்கான தேசிய நிர்வாக அறிக்கை கூட கடந்த ஒன்பது ஆண்டுகளில் மாறிய உலக ஒழுங்கைக் குறிப்பிட்டுள்ளது.

பாஜக துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: G-20 மற்றும் பொதுவாக, இந்தியா கோவிட் நெருக்கடியைக் கையாண்டது மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் உதவியும் சென்றடைந்ததால் உலகின் மதிப்பில்  உள்ளது.

50 க்கும் மேற்பட்ட இடங்களில் 200 க்கும் மேற்பட்ட G20 தொடர்பான நிகழ்வுகளை நாடு நடத்துவதால், பாஜக தொண்டர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் சமூகத்தை இணைக்க வேலை செய்வார்கள் என்று பாண்டா கூறினார். 20 முன்னணி பொருளாதாரங்களின் உயரடுக்கு கூட்டங்கள் மட்டுமின்றி சர்வதேச நாணய நிதியம் போன்ற பலதரப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தருவதால், சமூகத்தை இணைக்கவும், இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் அதன் வளமான பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment