Advertisment

தமிழ்நாட்டில் ரூ6 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதமாகியுள்ளது - நிதின் கட்கரி

அண்மையில், தமிழகத்தில் சாலைகள் அமைக்கும் பணி தடைபட்டுள்ளது என்பது உண்மைதான். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட்டு ஒத்துழைப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்நாட்டில் ரூ6 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதமாகியுள்ளது - நிதின் கட்கரி

தமிழ்நாட்டில் ரூ6,137 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள், நிலம் கையகப்படுத்துதல், கோவிட்-19, அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆகிய காரணங்களால் “மிக நீண்ட காலமாகத் தாமதமாகிவிட்டன” என்று மத்திய நெடுஞ்சாலை துறை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Advertisment

மத்திய பட்ஜெட் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றபோது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகள் தாமதம் தொடர்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் சுமார் 384 கிமீ நீளமுள்ள திட்டங்களின் பணிகள் தாமதமாகியுள்ளதாக பட்டியலிட்டார். இந்த திட்டங்கள், சம்ந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு 2016,2017,2018 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. இதன் பணியை இரண்டு ஆண்டுகளில் முடித்திட உத்தரவிடப்பட்டிருந்தது.

உதாரணமாக, வில்லுக்குரி முதல் கன்னியாகுமரி வரையிலான 43 கிமீ வரை நான்கு வழிச்சாலை மற்றும் நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரையிலான நான்கு வழிச்சாலை திட்ட பணிகள் ஜூலை 2016 இல் வழங்கப்பட்டது. 544 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை 2018 இல் முடித்திட திட்டமிடப்பட்டிருந்தது.

அதேபோல், கேரளா/தமிழ்நாடு எல்லையில் இருந்து வில்லுக்குரி பகுதி வரை NH-47 வழிப்பாதை ஆகஸ்ட் 2016 இல் வழங்கப்பட்டது. 27 கிமீ நீளம் கொண்ட இத்திட்டத்தின் செலவு 519 கோடி ஆகும்.

இதுதவிர 33 கிலோ மீட்டருக்கு சென்னை - தடா இடையிலான ஆறு வழி சாலை, 30 கிலோ மீட்டருக்கு செட்டிகுளம் - நந்தம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டம், 65 கிலோ மீட்டருக்கு விக்கிரவாண்டி- சேத்தியாதோப்பு இடையிலான நெடுஞ்சாலை திட்டம், மதுரை-செட்டிகுளம் சாலை பணி, சோழபுரம் - தஞ்சாவூர் இடையிலான நான்கு வழி சாலை திட்டம், ,சேத்தியாத்தோப்-சோழபுரம் பிரிவு சாலை பணி, காரைக்குடி-ராமநாதபுரம் இடையிலான 80 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை திட்டம் என மொத்தம் 9 திட்டப்பணிகள் நிலுவையில் உள்ளது என்றார்.

அண்மையில், தமிழகத்தில் சாலைகள் அமைக்கும் பணி தடைபட்டுள்ளது என்பது உண்மைதான். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒத்துழைப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் கடிதம் அனுப்பிய ஸ்டாலின், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தனது அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

திட்ட தாமதங்களை ஏற்படுத்தும் தற்போதைய சிக்கல்கள், பல கடந்த தசாப்தத்தின் பாரம்பரிய சிக்கல்கள் ஆகியவற்றை தலைமைச் செயலாளரின் கீழான அதிகாரிகள் குழுவினர் விரைவில் தீர்த்து வைப்பதற்கு முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க முதல்வர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், தலைமைச் செயலர், நெடுஞ்சாலைத் துறைச் செயலர் ஆகியோர் துறைகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சேவை நிறுவனங்களுடன் தொடர் கூட்டங்களை நடத்தியதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநில அரசு திட்டங்களை விரும்புகிறது. தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு மிகுந்த ஆதரவை வழங்கும்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Nhai Nitin Gadkari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment