Advertisment

இந்தியாவில் அதிகரிக்கும் தினக்கூலிகள் தற்கொலை.. சமீபத்திய அறிக்கை என்ன சொல்கிறது?

2021 ஆம் ஆண்டில் தற்கொலையால் இறப்பவர்களில், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழில் வாரியாக மிகப்பெரிய குழுவாக இருந்தனர்.

author-image
WebDesk
New Update
labourer

செவ்வாயன்று பாட்டியாலாவில் உள்ள தானிய சந்தையில் ஒரு தொழிலாளி தனது தாகத்தைத் தணிக்கிறார்.

2014 ஆம் ஆண்டிலிருந்து ஒரு நிலையான அதிகரிப்பைக் குறிக்கும் வகையில், நாட்டில் தற்கொலையால் இறப்பவர்களில் தினசரி கூலிகளின் பங்கு முதன்முறையாக நான்கில் ஒரு பங்கை தாண்டியுள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது - 2021 ஆம் ஆண்டில் 1,64,033 தற்கொலை செய்துகொண்டவர்களில், நான்கில் ஒருவர் தினசரி ஊதியம் பெறுபவர்.

Advertisment

"இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்" என்ற அறிக்கையின்படி – 2021 ஆம் ஆண்டில் தற்கொலையால் இறப்பவர்களில், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழில் வாரியாக மிகப்பெரிய குழுவாக இருந்தனர்.  42,004 தற்கொலைகள் (25.6 சதவீதம்) இதில் அடங்கும்.

publive-image

"விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள நபர்கள்" என்ற வகையின் கீழ் துணைப்பிரிவில் தொகுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் தினசரி ஊதிய எண்களை அறிக்கை தனித்தனியாக பட்டியலிடுகிறது. (எக்ஸ்பிரஸ்)

2020 ஆம் ஆண்டிலும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட 1,53,052 தற்கொலைகளில் 37,666 (24.6 சதவீதம்) பேர் உடன்,  தினசரி ஊதியம் பெறுபவர்கள் அதிகப் பங்கைப் பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டில், கொரோனா பரவலுக்கு முன்பு, பதிவுசெய்யப்பட்ட 1,39,123 தற்கொலைகளில், தினசரி ஊதியம் பெறுபவர்களின் பங்கு 23.4 சதவீதமாக (32,563) இருந்தது.

2021 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டவர்களில், தினசரி ஊதியம் பெறுபவர்களின் பங்கு அதிகரித்தது மட்டுமல்லாமல், தேசிய சராசரியை விட வேகமாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.

தேசிய அளவில், 2020 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை தற்கொலைகளின் எண்ணிக்கை 7.17 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் தினசரி ஊதியக் குழுவில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை 11.52 சதவீதம் அதிகரித்துள்ளது.

"விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள நபர்கள்" என்ற வகையின் கீழ் துணைப்பிரிவில் தொகுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் தினசரி ஊதிய எண்களை அறிக்கை தனித்தனியாக பட்டியலிடுகிறது.

அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள நபர்கள் குழுவில், 5,318 "விவசாயி " மற்றும் 5,563 "விவசாயத் தொழிலாளர்கள்" உட்பட 10,881 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

publive-image

என்.சி.ஆர்.பி தற்கொலைத் தரவுகளை ஒன்பது தொழில் வாரியான குழுக்களின் கீழ் வகைப்படுத்துகிறது

குறிப்பிடத்தக்க வகையில், விவசாயி  தற்கொலைகள், 2019 இல் 5,957 இருந்து, 2020 இல் 5,579 ஆக குறைந்துள்ளது. ஆனால் அதேநேரம் விவசாயத் தொழிலாளர் தற்கொலை எண்ணிக்கை, 2019 இல் 4,324 ஆகவும், 2020 இல் 5,098 ஆகவும், கடுமையாக உயர்ந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த தற்கொலைகளில் “விவசாயம் துறையில் ஈடுபட்டுள்ள நபர்களின்” ஒட்டுமொத்த பங்கு 6.6 சதவீதமாக இருந்தது என்று அறிக்கை காட்டுகிறது.

விவசாயி என்பது, சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்களையும், குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில்/பிறருடைய நிலத்தில் விவசாயத் தொழிலாளர்களின் உதவியோடு அல்லது உதவியின்றி விவசாயம் செய்பவர்களையும் உள்ளடக்கியவர்" என்று அறிக்கை வரையறுக்கிறது.

விவசாயத் தொழிலாளி என்பது "முதன்மையாக விவசாயத் துறையில் (விவசாயம்/தோட்டக்கலை) வேலை செய்பவர், அவர்களின் முக்கிய வருமானம் விவசாய உழைப்புச் செயல்பாடுகளின் மூலமாகும்" என வரையறுக்கப்பட்டுள்ளது.

என்.சி.ஆர்.பி தற்கொலைத் தரவுகளை ஒன்பது தொழில் வாரியான குழுக்களின் கீழ் வகைப்படுத்துகிறது: மாணவர்கள், தொழில்/சம்பளம் பெறுபவர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வேலையில்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள், மனைவி, விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் பிற நபர்கள்.

இந்தக் குழுக்களில், சுய தொழில் செய்பவர்களின் தற்கொலை,16.73 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது 2019 இல் 16,098- 2020 இல் 17,332 மற்றும் 2021 இல் 20,231 ஆக உள்ளது. நாட்டில் மொத்த தற்கொலைகளில் "சுய தொழில் செய்பவர்களின்" பங்கு ஒரு வருடத்திற்கு முன்பு 11.3 சதவீதத்திலிருந்து 2021 இல் 12.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

"வேலையில்லாத நபர்கள்" குழு மட்டுமே தற்கொலைகளில் சரிவைக் கண்டது, 2020 இல் 15,652 ஆக இருந்த எண்ணிக்கை 12.38 சதவீதம் குறைந்து, 2021 இல் 13,714 தற்கொலைகளாக உள்ளது.

2021 ஆம் ஆண்டில் மொத்த தற்கொலைகளில் 14.1 சதவிகிதம் " மனைவி" பிரிவில் உள்ளது - அவர்களின் எண்ணிக்கை 2020 இல் 22,374 இல் இருந்து 2021 இல் 23,179 ஆக 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

2020ல் 12,526 ஆக இருந்த மாணவர்களின் தற்கொலைகள் 2021ல் 13,089 ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. 2021 ஆம் ஆண்டில், "ஓய்வு பெற்றவர்களின்" தற்கொலைகளின் எண்ணிக்கை 1,518 ஆக இருந்தது, அதே நேரத்தில் 23,547 தற்கொலைகள் "மற்ற நபர்கள்" பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அறிக்கையின்படி, குடும்பப் பிரச்சனைகள்- 33.2 சதவிகிதம், திருமணம் தொடர்பான பிரச்சனைகள்- 4.8 சதவிகிதம் மற்றும் நோய்- 18.6 சதவிகிதம் ஆகியவை சேர்ந்து 2021 ஆம் ஆண்டில் நாட்டில் நடந்த மொத்த தற்கொலைகள் 56.6 சதவிகிதம் ஆகும்

"இந்த தரவு தற்கொலை செய்து கொண்ட நபர்களின் தொழிலை மட்டுமே சித்தரிக்கிறது, தற்கொலைக்கான காரணம் தொடர்பாக எந்த தொடர்பும் இதில் இல்லை" என்று அறிக்கை கூறியது.

தற்கொலை செய்த ஆண்களில் கிட்டத்தட்ட 68.1 சதவீதம் பேர் திருமணமானவர்கள், அதே சமயம் பெண்களின் விகிதம் 63.7 சதவீதமாகும். தற்கொலையால் இறந்தவர்களில் 11.0 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள் 15.8 சதவீதம் பேர் ஆரம்ப நிலை வரை படித்தவர்கள், 19.1 சதவீதம் பேர் நடுநிலை வரை படித்தவர்கள், 24.0 சதவீதம் பேர் மெட்ரிக் வரை படித்தவர்கள். மொத்த தற்கொலை செய்து கொண்டவர்களில் 4.6 சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரி மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

2021 ஆம் ஆண்டில் தற்கொலையால் இறந்தவர்களில் ஒட்டுமொத்த ஆண்-பெண் விகிதம் 72.5:27.5 என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

அறிக்கையின்படி, தற்கொலை விகிதம் (ஒரு லட்சம் மக்கள்தொகையில்) 12 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது - இது 2020 இல் 11.3 மற்றும் 2019 இல் 10.4 ஆக இருந்தது.

2021 ஆம் ஆண்டில் நாடு தழுவிய எண்ணிக்கையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,207 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (18,925), மத்தியப் பிரதேசம் (14,956), மேற்கு வங்கம் (13,500) மற்றும் கர்நாடகா (13,056) ஆகியவை பதிவாகியுள்ளன. யூனியன் பிரதேசங்களில், டெல்லியில் அதிகபட்சமாக 2,840 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

2020 ஐ விட 2021 இல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தற்கொலைகள் அதிக சதவீதம் அதிகரித்துள்ளன, தெலுங்கானா (26.2 சதவீதம்), உபி (23.5 சதவீதம்), புதுச்சேரி (23.5 சதவீதம்), ஆந்திரா (14.5 சதவீதம்), கேரளா (12.3 சதவீதம்), தமிழ்நாடு (12.1 சதவீதம்), மகாராஷ்டிரா (11.5 சதவீதம்) மற்றும் மணிப்பூர் (11.4 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அதேநேரம், லட்சத்தீவுகள் (50.0 சதவீதம்), உத்தரகாண்ட் (24.0 சதவீதம்), ஜார்கண்ட் (15.0 சதவீதம்), ஜம்மு & காஷ்மீர் (13.9 சதவீதம்) மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் (11.7 சதவீதம்) ஆகியவற்றில் தற்கொலை எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment