Advertisment

கொரோனா தடுப்பூசி; அடுத்த 4 வாரம் மிக முக்கியம்: மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் அதிகபட்சமாக 43,00,966 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Next 4 weeks critical… Covid-19 vaccine first to those who need it, not want it: Centre

 Kaunain Sheriff M

Advertisment

Next 4 weeks critical : Covid-19 vaccine first to those who need it, not want it Centre : கொரோனா தடுப்பூசியை மேலும் சில பிரிவுகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் செவ்வாய் கிழமை அன்று மத்திய அரசு பாதிக்கப்பட கூடிய மக்களை பாதுகாக்கவும், விருப்பப்படுபவர்களுக்கு அல்லாமல் தேவைப்படுபவர்களுக்கு தடுப்பூசியை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

அதி முக்கியத்துவம் பெறும் Covid-19 vaccine நிர்வாகம்

கடந்த முறையைக் காட்டிலும் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார், இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிக்குழுவிற்கு தலைவராக இருக்கும் டாக்டர் வி.கே. பால். அவர் மேலும் இந்த நான்கு வாரங்கள் மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் 96,982 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக 7,88,223 நபர்கள் கொரோனா தொற்றிற்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்றின் அடர்த்தி அதிகரித்துள்ளது என்றும் கடந்த முறையைக் காட்டிலும் தற்போது மிக அதிகமாக பரவி வருகிறது என்றும் கூறினார். இன்னும் சில மாநிலங்களில் இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ளது.

இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மக்களின் ஈடுபாடு மிகவும் முக்கியமானது. அடுத்த நான்கு வாரங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மொத்த நாடும் ஒன்றிணைந்து கொரோனா தொற்றிற்கு எதிராக போராட வேண்டும் என்று அவர் கூறினார். மிகவும் மோசமான பாதிப்பினை சந்தித்திருக்கும் மாநிலமான மகாராஷ்ட்ரா மத்திய அரசிடம், கொரோனா தடுப்பு மருந்து பெறும் நபர்களின் வயது வரம்பை 25 ஆக குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. டெல்லி அரசு அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

தொற்று அதிகரிக்கும் போது அனைவருக்கும் தடுப்பூசி வேண்டும் என்ற வாதம் முன் வந்துவிடுகிறது. இதனை நாம் அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும். முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக தடுப்பூசிகள் தயாரிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை அற்பமாக மாற்றக் கூடாது. எப்போது ஹெர்ட் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பது நம் யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் ஹெர்ட் இம்யூனிட்டியை தடுப்பூசி நிர்வாகம் மட்டுமின்றி பல்வேறு நிர்ணயிக்கும் காரணிகள் உள்ளன என்று பால் கூறினார்.

இந்த தடுப்பூசிகள் இறப்பு விகிதத்தை குறைக்கின்றன. நோய்யின் கடும் தன்மையை குறைக்கின்றன என்பது நமக்கு தெரியும். இது மக்களை பாதுகாக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கி வருகின்றோம். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள் தெளிவாக உள்ளது. இறப்பு மற்றும் நோயின் சுமையை குறைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உலக அளவில் தடுப்பூசிகள் மிகவும் வரையறுக்கப்பட்டவையாகவே உள்ளன. நாம் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கிவிட்டோமா என்று நம்மை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் முதலில் தற்போதைய மூலோபாயத்தை பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில், தயக்கத்தை நாம் குறைக்க வேண்டும், ”என்றார். செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் அதிகபட்சமாக 43,00,966 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கடவுள் இடதுசாரிகள் பக்கம் துணை நிற்கிறார் - கேரள முதல்வர்

அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கின்றனர். தொற்றின் போது நாம் தடுப்பூசிகளை வழங்குகின்ற போது நம் கருத்தில் நிற்பது பாதிக்கப்பட கூடிய மக்கள் தொகையில் இறப்பு விகிதத்தை குறைப்பதும், சுகாதாரத்துறையை பாதுகாப்பதும் தான். யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு தடுப்பூசி தருவது இலக்கு அல்ல. யாருக்கு தேவையோ அவர்களுக்கு வழங்குவது தான் தற்போதைய இலக்காக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

எழுச்சி பெறும் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்க மாநில அரசிற்கு நெகிழ்வு தன்மை வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்கள் அதிக அளவு எழுச்சியை கண்டால் மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பூசிகளை வழங்க இந்த இரண்டு பகுதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். மிகவும் குறைவான அளவு மாநிலம் முழுவதும் தடுப்பூசிகளை வழங்குவதற்கு பதிலாக இந்த மாவட்டங்களில் அவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று பூஷன் கூறினார்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் 11 மாநிலங்களில் தொற்று நிலையை மறு ஆய்வு செய்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன். மக்கள் மிகவும் தளர்வான நடைமுறைகளை பின்பற்றியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்க மாநில அரசுகள் வெகுஜன பிரச்சாரத்தை மீண்டும் மேற்கொள்ளுமாறு மாநில சுகாதாரத்துறை அலுவலர்களிடம் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

மகாராஷ்ட்ராவின் 30 மாவட்டங்கள், சத்தீஸ்கரின் 11 மாவட்டங்கள் மற்றும் பஞ்சாபின் 9 மாவட்டங்களுக்கு 50 உயர்மட்ட பொது சுகாதாரத்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சோதனை,தடம் அறிதல், செயற்கை சுவாசம், ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பு, கோவிட் கட்டுப்பாடு பொருத்த நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் தினசரி அறிக்கைகள் சமர்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

டி.ஜி. ஐ.சி.எம்.ஆரில் இருக்கும் மருத்துவர் பல்ராம் பார்கவா உலக அளவில் 1% மறு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மறு தொற்று தொடர்பான தரவுகளை ஆராய்ந்து வருகின்றோம். முதல் சோதனை நேர்மறை முடிவுகள், இரண்டாம் சோதனை எதிர்மறை முடிவு, மூன்றாம் சோதனை 102 நாட்களுக்கு பிறகு நேர்மறை என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment