Advertisment

நீதிமன்றத்தில் அனைவருக்குமான ஆரோக்கியமான நடைமுறைகளை அமைப்பதற்கான வாய்ப்பு - நீதிபதி யு.யு. லலித்

அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி உதய் உமேஷ் லலித் தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

author-image
WebDesk
New Update
நீதிமன்றத்தில் அனைவருக்குமான ஆரோக்கியமான நடைமுறைகளை அமைப்பதற்கான வாய்ப்பு - நீதிபதி யு.யு. லலித்

இந்தியாவின் 49ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு. லலித் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி பொறுப்பேற்கிறார். 74 நாட்கள் பதவி வகிக்க உள்ளார். இந்நிலையில், நீதிபதி உதய் உமேஷ் லலித் தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு கடந்த சனிக்கிழமை பிரத்யேக பேட்டி அளித்தார். அதில், "74 நாட்கள் பதவி காலத்தை குறுகிய நாட்களாக பார்க்கவில்லை.

Advertisment

நீதிமன்றத்தில் அனைவருக்குமான ஆரோக்கியமான நடைமுறைகளை அமைப்பதற்கான வாய்ப்பாக கருதுகிறேன். இதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும், வருங்காலத்திலும் பின்பற்றப்படும்" என்று நம்புவதாக தெரிவித்தார்.

வழக்குகளை பட்டியலிடுவதில் தாமதம் முதல் பல்வேறு சிக்கல்கள் குறித்துப் பேசினார். தலைமை நீதிபதியாக அவரது முன்னுரிமைகள் குறித்து கேட்டதற்கு, இது எனக்கு வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு. ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் என்று நான் கருதும் சில விஷயங்களை முன்னுரிமை படுத்துவேன். நிச்சயமாக, அவை எனது தனிப்பட்ட பார்வையாக இருக்காது.

இருப்பினும் இந்த நடைமுறைகள் குறித்து அவர் விவரிக்கவில்லை என்றாலும், ஒரு நிறுவனமாக உச்ச நீதிமன்றம் கவனம் செலுத்தப் பட வேண்டும் என்றார்.

ஜாமீன் விவகாரம் குறித்து பேசிய அவர், NDPSசட்டம் மற்றும் SC/ST சட்டம் போன்ற சட்ட வழக்குகளில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது. சட்டரீதியான நிர்பந்தங்கள் மற்றும் சமூக நலன்களைக் கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்படும். ஆதனால் ஜாமீன் பெறுவதில் தாமதம் உள்ளது என்றார்.

சமூக ஊடகங்களில் நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு, விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உணவுவில் உப்பு சேர்ப்பதுபோல் எடுத்துக் கொள்ள வேண்டும். வரம்பு மீறினால் கவனிக்கப்பட வேண்டும் என்றார்.

நீதிபதிகள் நியமனங்கள் குறித்த கேள்விக்கு, தற்போதைய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜியம் மற்றும் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் (சமீபத்தில் ஓய்வு பெற்றவர்) ஆகியோர் அடங்கிய கொலிஜியம் எந்தவித இடஒதுக்கீடும் அல்லது கருத்து வேறுபாடும் இல்லாமல் 255 பெயர்களை பரிந்துரைத்தது என்றார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment