scorecardresearch

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு; சென்னையில் ஒருவர் கைது!

2013 -1 4 ஆண்டுகளில் சிரியாவில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இளைஞர்களை, தீவிரவாதிகளுக்கு உதவி புரிய அனுப்ப நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு; சென்னையில் ஒருவர் கைது!

 Deeptiman Tiwary , Ralph Alex Arakal

NIA arrests two from Tamil Nadu, Karnataka for ‘funding’ travel of IS recruits to Syria :  தேசிய விசாரணை முகமை தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு நபர்களை, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்ததற்காகவும், அதற்கு நிதி அளித்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அகமது அப்துல் காதர் (40), மற்றும் பெங்களூருவின் இர்ஃபான் நாசிர் (33) இருவரையும் புதன்கிழமை அன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். ஐ.எஸ் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் இவர்களின் பெயர்கள் எழவும் இந்த கைது நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகள், காதர் வங்கி ஒன்றில் பிஸினஸ் அனலிஸ்டாகவும், இர்ஃபான் நாசிர் அரசி மண்டி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். பெங்களூரு – ஐ.எஸ்.ஐ.எஸ். மாட்யூல் என்ற பெயரில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து செப்டம்பர் மாதம் 19ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது என்.ஐ.ஏ.

ஐ.எஸ்.ஐ.எஸ்., ஐ.எஸ்.ஐ.எல், டயீஷ் போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதற்காகவும், பெங்களூரில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை தீவிரமாக ஐ.எஸ் அமைப்பில் இணைப்பதற்காகவும், அவர்களின் சிரியா பயணத்திற்கு நிதி திரட்டியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது என்.ஐ.ஏ.

to read this article in English

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பது மற்றும் சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டத்தில் சந்தேகம் கொள்ளும் வகையில் இருந்த காஷ்மீரை சேர்ந்த ஹீனா பெக் (39) மற்றும் அவருடைய கணவர் ஜஹன்ஜெய்ப் சமி (36) இருவரை ஜாமியா நகரில் கைது செய்தது டெல்லி காவல்துறை. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த இரண்டு நபர்களின் பெயர்களும் வெளியானது. ஐதராபாத் இளைஞர் அப்துல்லா பாசித் சம்பந்தப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாத சதி தொடர்பான விசாரணை தொடர்பாக பின்னர் என்.ஐ.ஏ அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையின் போது டாக்டர் ப்ரேவ் என்று அழைக்கப்படும் மருத்துவர் அப்துர் ரெஹ்மான் கைது செய்யப்பட்டார். ரெஹ்மான் கண்மருத்துவர் ஆவார். மார்ச் மாதம் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக, 2014ம் ஆண்டு, மிக குறுகிய காலம் பணியாற்றியதாக இஸ்லாமிக் ஸ்டேட் கொராசன் மாகாணம் மாட்யூலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை விசாரணை செய்த போது, 2013 -2014 ஆண்டுகளில் சிரியா சென்ற அவரது கூட்டாளிகளின் பெயர்கள் வெளிவந்தனர். மேலும் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட அப்துல் காதர் மற்றும் இர்ஃபான் நாசிர் மற்றும் அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஹிசாப் – உத் – தெஹ்ரிர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் குரான் சர்க்கிள் என்ற குழு ஒன்றை துவங்கி, சிரியாவில் போர் சூழல் நிறைந்திருக்கும் பகுதிகளுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டியதும் தெரிய வந்துள்ளது. காதர் மற்றும் நசிர் பல்வேறு மூலங்கள் மூலம் நிதிகளை திரட்டி ரெஹ்மானை சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரெஹ்மானை மட்டுமல்லாமல் பல்வேறு இளைஞர்களுக்கும் இவ்வாறு நிதி உதவி அளித்துள்ளனர். அது போன்று சென்ற இரண்டு நபர்கள் கொல்லப்பட்டனர் என்று என்.ஐ.ஏ கூறியுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 120 பி (கிரிமினல் சதி), மற்றும் 125 (இந்திய அரசாங்கத்துடன் கூட்டாக எந்தவொரு ஆசிய சக்திக்கும் எதிராக போர் தொடுப்பது) மற்றும் 17 வது பிரிவுகள் (பயங்கரவாதச் செயலுக்காக நிதி திரட்டுதல்), 18 ( சதி) மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ இவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டது. மேலும் குற்றச்சாட்டுகளுக்குரிய பொருட்கள், எலெக்ட்ரானிக் டிவைஸ்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பெங்களூரு சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 10 நாட்கள் என்ஐஏ காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Nia arrests two from tamil nadu karnataka for funding travel of is recruits to syria