பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம், மாணவர்களுக்கு இ-வித்யா திட்டம் : பிரஸ்மீட் ஹைலைட்ஸ்

5 கட்ட அறிவிப்புகள், ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகை, ஏழைகளுக்கான நலத்திட்ட உதவி என மொத்த மதிப்பு ரூ.20 லட்சத்து 97 ஆயிரத்து 053 கோடி பொருளாதார நடவடிக்கைகள் திர்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.     

By: Updated: May 17, 2020, 02:48:16 PM

சுயசார்பு இந்தியா கோட்பாட்டின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  ஐந்தாம் கட்ட பொருளாதார நடவடிக்கையை அறிவித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள், கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் வெளியாகின.

இதன் மூலம், 5 கட்ட அறிவிப்புகள், ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகை, ஏழைகளுக்கான நலத்திட்ட உதவி என மொத்த மதிப்பு ரூ.20 லட்சத்து 97 ஆயிரத்து 053 கோடி பொருளாதார நடவடிக்கைகள் திர்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.

கல்வித் துறையில் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்: 

PM eVIDYA- பல முனை அணுகுதல் வசதி கொண்ட டிஜிட்டல்/ ஆன்லைன் கல்வித் திட்டம் உடனே தொடங்கப்படும் .இந்த திட்டத்தின் கீழ், 1 முதல் 12-ஆம் வகுப்புவரை தனித்தனியாக 12 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும் (ஒரே நாடு ஒரே சேனல் திட்டம் ). செவித்திறன் & பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, மின்- பாடங்கள் (இ-புக்) உருவாக்கப்படும்.

உயர்நிலை வரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் 2020 மே 30 தேதியில் இருந்து ஆன்லைன் படிப்புகளை தொடங்க தானாக அனுமதிப்படும். ஏர்டெல், டாட்டா ஸ்கை போன்ற டிடிஎச் நிறுவனங்கள் தினமும் 4 மணிநேரம் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கேட்டுக் கொள்ளப்படுவர்கள். 2025க்குள் கிரேடு 5முடிக்கும் மாணவர்கள் உரிய கற்றலைப் பெறுவதை உறுதி செய்ய தேசிய அடிப்படை நிலை எழுத்தறிவு மற்றும் என்னறிவு லட்சிய நோக்குத் திட்டம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தொடர்ங்கப்படும்.

திவால் நடவடிக்கை தொடங்கும் பணி ஓராண்டுக்கு நிறுத்திவைப்பு :  திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மூலம், ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மட்டும் நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்படும். சட்டத்தின்பிரிவு 240 ஏ- வின்கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு திவால் தீர்வு வழிமுறைகள், விரைவில் அறிவிக்கப்படும். நோய் தொற்று சூழல் அடிப்படையில் , புதிதாகத் திவால் நடவடிக்கைகளைத் தொடங்கும் பணிகள் ஓராண்டுவரை நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்தார்.

பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான புது கொள்கையை அரசு அறிவிக்கும்:  புது ஒத்திசைவுக் கொள்கையாக, பொதுநலன் கருதி பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் குறைந்தபட்சம் ஒரு நிறுவனம், பொதுத் துறையின் கீழ் இயங்கும். ஆனால், இதில் தனியார் துறையினரும் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற துறைகளில், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் . தேவையில்லாத நிர்வாக செலவுகளை குறைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை ஒன்று முதல் நான்கு வரை இருக்கும், மற்றவை தனியார்மயமாக்கப்படும்/ இணைக்கப்படும்/ மற்ற நிறுவனங்களின் கீழ் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.

4.28 லட்சம் கோடி கூடுதல் கடனாக மாநிலங்களுக்கு கிடைக்க ஏற்பாடு:  மத்திய அரசைப் போலவே, மாநில அரசும் வருவாய் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது. இருப்பினும்,  கடந்த ஏப்ரல் மாதத்திற்கான மாநில வரிப்பங்கீடு ரூ. 46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் . மேலும், வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக ரூ 12,390 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்,  தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலங்களுக்கு ரூ. 11,092 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14% மட்டுமே இதுவரை  பயன்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்கள் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் கடன் வாங்கும் திறன் 3% இல் இருந்து 5 % ஆக உயர்த்தப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநிலங்கள் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் ரூ 4.28 லட்சம் கோடி கூடுதல் கடனாக மாநிலங்களுக்கு கிடைக்கும்.

பொது சுகாதாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கப்படும்:   அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று மருத்தவமனை வளாகங்கள் உருவாக்கபப்டும். அனைத்து மாவட்டங்கள்/ வட்டார அளவில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள்உருவாக்கப்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மூலம் ஒருங்கிணைந்த சுகாதாரத்துக்காக தேசிய நிறுவன தளம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

 40,000 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு :  100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக 40,000 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் இந்த திட்டத்தின்கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88 %e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d %e0%ae%a4

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X