Advertisment

அதிகார வரம்பிற்குள் போக்குவரத்து அபராதத்தை திருத்திக்கொள்ளலாம் - நிதின் கட்காரி

Nitin Gadkari : போக்குவரத்து அபராதத்தின் மூலம் வருமானம் மத்திய அரசுக்கு தேவையில்லை. மக்களின் உயிரைக்காப்பது மாநில அரசுகளைவிட மத்திய அரசுக்கே முக்கியமான பணி ஆகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
motor vehicle act, nitin gadkari, Motor Vehicles Act new laws, Motor Vehicles Act new fines, indian express

motor vehicle act, nitin gadkari, Motor Vehicles Act new laws, Motor Vehicles Act new fines, indian express, மோட்டார் வாகன சட்டம், போக்குவரத்து விதிமீறல், அபராதம், குஜராத், மேற்குவங்கம்

போக்குவரத்து விதிகளை மீறுவதால் கிடைக்கும் அபராத தொகையை விட, மக்களின் உயிரே மத்திய அரசுக்கு முக்கியம் என்பதால், புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி மாற்றியமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து அபராதத்தை, மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குள் திருத்தி அமைத்துக்கொள்ளலாம் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

Advertisment

1988ம் ஆண்டிலான மோட்டார் வாகன சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி குடித்துவிட்டு வாகனங்களை இயக்குதல், ராஷ் டிரைவிங், ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டுதல் உள்ளி்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடித்துவிட்டு வாகனங்களை இயக்குபவர்களுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதின் கட்காரி விளக்கம் : தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது, போக்குவரத்து அபராதத்தின் மூலம் வருமானம் மத்திய அரசுக்கு தேவையில்லை. மக்களின் உயிரைக்காப்பது மாநில அரசுகளைவிட மத்திய அரசுக்கே முக்கியமான பணி ஆகும். போக்குவரத்து விதிகளை மீறுவதன் மூலமாகவே அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டே, இந்த அபராதம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது 30 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு உயிரின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கூட இல்லையா. போக்குவரத்து விதிகளை மீறினால் தக்க தண்டனை கிடைக்கும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகள், தங்களது அதிகார வரம்பிற்குள், போக்குவரத்து அபராதத்தினை திருத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ. ஆளும் குஜராத் மாநிலத்தில் அபராதத்தில் 90 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடக அரசு, இந்த அபராதத்தை குறைக்கும்படி மத்திய அரசை நாடியுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்குவங்கம், பஞ்சாப், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், இந்திய புதிய அபராத விதிப்பை தற்போதைக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nitin Gadkari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment