Advertisment

ராகுலுடன் சந்திப்பு: நிதிஷ் திட்டமிடும் எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரசுக்கும் இடம்

சிறிய கட்சிகள் காங்கிரஸை ஒதுக்கி வைத்து தங்கள் கைகளை எரித்துக் கொண்டன. காங்கிரஸ் கட்சிதான் இன்னும் பாஜகவின் பிரதான எதிரியாக உள்ளது என்று ஜேடியு தேசிய செய்தி தொடர்பாளர் கே சி தியாகி கூறினார்.

author-image
WebDesk
New Update
nitish-rahul

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், செப்டம்பர் 5, 2022 திங்கட்கிழமை, புது தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் சந்தித்தார். (PTI)

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சி அமைப்பில் இருந்து காங்கிரசை விலக்கி வைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்ற தெளிவான சமிக்ஞையை அனுப்பும் வகையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.

Advertisment

காங்கிரஸ் இல்லாமல் பாஜக அல்லாத எதிர்க்கட்சி உருவாக்கம் சாத்தியமில்லை என்று நிதீஷ் தெளிவாகக் கூறினாலும், எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்ப்பது சுலபம் இல்லை. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி  போன்ற கட்சிகள் காங்கிரஸின் முதன்மையை ஏற்கத் தயாராக இல்லை.

மறுபுறம், 1990களில் ஐக்கிய முன்னணியும், 2004ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் என்று அடிக்கடி வாதிட்டதால், இடதுசாரிகள் தேர்தலுக்கு முந்தைய முன்னணியில் ஆர்வம் காட்டவில்லை.

நிதிஷ், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரித் தலைவர்களான சீதாராம் யெச்சூரி மற்றும் டி ராஜா ஆகியோரை செவ்வாயன்று சந்தித்து, எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குறித்த ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் மோதிக்கொள்ளும். உண்மையில், காங்கிரஸை பிரதான எதிர்க்கட்சியாக மாற்றுவது பற்றி ஆம் ஆத்மி அடிக்கடி பேசுகிறது மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக குஜராத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது, ”என்று ஒரு மூத்த எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தனித்தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ போட்டியிடும். கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸும் போட்டியாளர்களாக உள்ளன, எனவே எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது பெரும்பாலும் ஒரு தத்துவார்த்த கட்டமைப்பாகும்.

தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை "வெவ்வேறு கட்சிகள், அவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒன்றாக வரலாம்" என்று இந்த தலைவர் ஒப்புக்கொண்டார். திமுக, என்சிபி, சிவசேனா ஆகிய கட்சிகள் காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி உருவாக்கம் சாத்தியமில்லை என்று ஏற்கனவே சூசகமாகத் தெரிவித்துள்ளன.

டெல்லி செல்வதற்கு முன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நல்ல சமன்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளும், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தை, நிதிஷ் குமார் சந்தித்து பேசினார்.

ராகுலுடனான நிதிஷின் சந்திப்பு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைத் திட்டங்களுக்கு, அவர்கள் தரப்பில் இருந்து காங்கிரசை மையமாக கருதுகிறார்கள் என்ற தெளிவான செய்தி என அவரது ஜேடியு சகாக்கள் தெரிவித்தனர்.

ஜேடியு தேசிய செய்தி தொடர்பாளர் கே சி தியாகி கூறுகையில், சிறிய கட்சிகள் காங்கிரஸை ஒதுக்கி வைத்து தங்கள் கைகளை எரித்துக் கொண்டன. காங்கிரஸ் கட்சிதான் இன்னும் பாஜகவின் பிரதான எதிரியாக உள்ளது. காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி ஒற்றுமை சாத்தியமில்லை. வி.பி. சிங் காலத்திலிருந்து எச்.டி.தேவேகவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் வரையிலான மூன்றாவது அணிக்கான எங்கள் சோதனை தோல்வியடைந்தது. ஆதிக்கம் செலுத்தும் பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸும் அதைச் சுற்றி மற்ற சிறிய கட்சிகளும் திரள வேண்டும்,” என்றார்.

வரும் மாதங்களில் தன்னால் முடிந்தவரை எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் சந்திப்பார் என்று தியாகி கூறினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கும். நிதிஷ்- பீகார் முதல்வராக உயர்ந்த நற்சான்றிதழ்களுடன் கூடிய ஒருங்கிணைக்கும் நபராக இருந்து வருகிறார் மற்றும் எதிர்க்கட்சிகள் பொதுவான நோக்கத்துடன் ஒன்றிணைவதை நாங்கள் மிகவும் நம்புகிறோம், என்று அவர் கூறினார்.

டெல்லி செல்லும் முன் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியத்தை வலியுறுத்தினார். தான் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக வரலாம் என்ற செய்திக்கு, தனக்கு அப்படி எந்த விருப்பமும் இல்லை. இன்னும் பல எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்பதே எனது ஒரே விருப்பம் என்றார்.

இதற்கிடையே பாட்னாவில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, நிதிஷுக்கு பாஜகவின் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாகக் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment