Advertisment

7 பேர் விடுதலை : நீண்ட கால பரோல் குறித்து தமிழக அரசு ஆலோசனை

4 இலங்கை பிரஜைகள் தொடர்பாக எழும் கேள்விகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவர்களை இலங்கைக்கு அனுப்ப முடியாது. அவர்களுக்கு அகதிகள் சான்று வழங்கப்படும்.

author-image
WebDesk
New Update
Rajiv Gandhi assassination convicts

 Arun Janardhanan

Advertisment

Rajiv Gandhi assassination convicts : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள 7 நபர்களை நீண்ட நாள் பரோலில் அனுப்ப தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முக ஸ்டாலின், இவர்களின் விடுதலை தொடர்பாக கடிதம் எழுதி ஒரு மாத காலம் ஆன நிலையில் இந்த புதிய வழி குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. 2018ம் ஆண்டு அதிமுக அரசின் பரிந்துரைப் படி 7 நபர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று முக ஸ்டாலின் அவருக்கு கடிதம் எழுதினார். 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடியரசு தலைவருக்கு எடுத்துக் கூறினார்.

முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களின் விடுதலை குறித்த சீர்திருத்த நிலையை கருத்தில் கொண்டு நீண்ட கால பரோல் நடவடிக்கைக்கு சிறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை பிரஜைகளின் நிலை குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைத்த பிறகு இதில் ஒரு முடிவு எட்டப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

பேரறிவாளன் (வேலூர்), நளினி (சென்னை) மற்றும் ரவிச்சந்திரன் (மதுரை) ஆகியோரை தவிர மீதம் உள்ள முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை பிரஜைகள். நளினியின் கணவர் முருகன். மற்றும் ஜெயக்குமாரின் மனைவி இந்திய பிரஜை. அவரும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பிறகு 1999ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதில் எந்த ஒரு முடிவும் எடுக்காமல், உச்ச நீதிமன்றம், தாமதம் குறித்து மேற்கோள்காட்டிய பிறகு ஆளுநர் இது தொடர்பான ஆவணங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது மிகவும் சிக்கலான விவகாரம். மத்திய அரசின் ஆலோசனைப்படி குடியரசு தலைவர் நடந்து கொள்கிறார். இங்கு எந்தவிதமான அரசியல் சாசன நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நீதித்துறை இது தொடர்பாக முடிவு எடுக்கும் வரை மனித நேய அடிப்படையில், அவர்களுக்கு நீண்ட கால பரோல் வழங்குவது ஒன்று மட்டுமே நம் கையில் உள்ள ஒரே வழி என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.

உயர்மட்ட அளவில் நடைபெற்ற ஆலோசனையை உறுதிப்படுத்திய நம்பத்தகுந்த வட்டாரங்கள், பல ஆண்டுகளாக உள்துறை அமைச்சக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, குற்றவாளிகளை பரோலில் அனுப்புவதில் அச்சுறுத்தல் இல்லை என்பதை கூறியுள்ளனர். மேலும் இந்த முடிவு முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகாரங்களுக்கு கீழே உள்ளது.

இதற்கு முன்பு அவர்களில் சிலர் காவல்துறையினர் உதவியோடு அல்லது உதவி இல்லாமல் பரோலில் வெளியே வந்துள்ளனர். அதில் பிரச்சனை ஏதும் இல்லை. அவர்களின் நடத்தை சான்றிதல் மூலம் , குற்றவியல் நோக்கங்களை யாரும் கூற முடியாது. முப்பது ஆண்டுகள் சிறைவாசம், பலர் தனிமைச் சிறையில் உள்ளனர். அவர்கள் இப்போது ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டும், ”என்று மூத்த அதிகாரி கூறினார்.

4 இலங்கை பிரஜைகள் தொடர்பாக எழும் கேள்விகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவர்களை இலங்கைக்கு அனுப்ப முடியாது. அவர்களுக்கு அகதிகள் சான்று வழங்கப்படும். அவர்கள் பரோலில் இலங்கை அகதிகள் முகாமுக்கு சென்று இயல்பு வாழ்க்கையை வாழ அனுமதிக்க முடியும் என்று அவர் கூறினார். தனது மகனின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய 2019 ஆம் ஆண்டில் பரோல் வழங்கப்பட்ட பயாஸின் வழக்கை சுட்டிக்காட்டி, வேலூர் சிறையில் உள்ள ஒரு அதிகாரி, பரோல் காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

இந்த வழக்கின் போது வழக்கறிஞராகவும், பின்னாளில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பொறுப்பு வகித்த, ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு இந்த 7 நபர்களின் விடுதலைக்கான முட்டுக்கட்டையை உடைக்க மாநில அரசுக்கு ” நீண்ட கால பரோல் சாத்தியமானது தான். எளிமையான வழியும் கூட” என்று கூறினார்.

மத்திய அரசு மற்றும் ஆளுநர் தரப்பில் ஏற்படும் கால தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர்கள் தண்டனை அனுபவித்த இந்திய குற்றவியல் நடைமுறை விதித்தொகுப்பின் (Code Of Criminal Procedure) கீழ், 7 பேரும் குறைந்த காலத்திற்கு மன்னிப்பு பெற தகுதியுடையவர்கள். இதற்கான தீர்வு மிகவும் எளிதாக இருக்கிறது. ஆனால் இந்த வழக்கில் முக்கியமானது சட்டமல்ல என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil.

Perarivalan Rajiv Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment