Advertisment

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லை - உச்ச நீதிமன்றத்தில் அறிவித்த மத்திய அரசு

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டிக்களைத் தவிர மற்ற சாதி வாரியான மக்கள்தொகையை பட்டியலிடக் கூடாது என்று இந்திய அரசு கொள்கையாக முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
No caste census, conscious policy decision: Govt to Supreme Court

Ananthakrishnan G

Advertisment

Caste census 2021 : 2021ம் ஆண்டில் சாதிரிதியான கணக்கெடுப்பை திறம்பட புறம் தள்ளி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அத்தகைய கணக்கெடுப்பு சாத்தியமில்லை என்றூம், பட்டியல் இன, பட்டியல் பழங்குடி மக்கள் தொடர்பான தகவல்கள் தவிர இதர சாதியினரினர் தகவல்கள் பெறுவதில் இருந்து மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு நனவான கொள்கை முடிவில் இருந்து விலக்குவதாகவும் அறிவித்துள்ளது.

2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பின் தங்கிய (BCC) பிரிவினரின் தகவல்களை சேகரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்ட்ரா அரசு தாக்கல் செய்த மனுவிற்கு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த சமூக நீதி அமைச்சகத்தின் முக்கியமான சமர்பிப்பு இதுவாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான கணக்கீடு 1951 முதல் கொள்கை அடிப்படையில் கைவிடப்பட்டது, எனவே எஸ்சி மற்றும் எஸ்டி தவிர மற்ற சாதியினர் 1951 முதல் இன்று வரை எந்த கணக்கெடுப்பிலும் கணக்கிடப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இந்திய அரசு சாதியை அதிகாரப்பூர்வமாக ஊக்கப்படுத்தக் கூடாது என்ற கொள்கையை வகுத்தது. அது பொதுவாக இனம், சாதி போன்ற விசாரணைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடிகளாக இந்திய குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பின் 341 மற்றும் 342 வது பிரிவின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரிவினர்களின் தகவல்களை மட்டும் சேர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது என்று இந்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், பல எதிர்க்கட்சியினரும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்ற நிலையில் இத்தகைய பதிலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ஜூலை 20 அன்று, மக்களவையில் ஒரு கேள்விக்கான எழுத்துப்பூர்வ பதிலில், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பின்வருமாறு கூறினார்.

“மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டிக்களைத் தவிர மற்ற சாதி வாரியான மக்கள்தொகையை பட்டியலிடக் கூடாது என்று இந்திய அரசு கொள்கையாக முடிவு செய்துள்ளது”.

உச்ச நீதிமன்றத்தில், இதன் சாத்தியக் கூறுகளை மேற்கோள்காட்டி, மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதி வாரியான தகவல்களை சேகரிப்பதற்கு சிறந்த கருவி அல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், செயல்பாட்டு சிரமங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால், மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவின் அடிப்படை ஒருமைப்பாடு சமரசம் செய்யப்படலாம் மற்றும் அடிப்படையே சிதைந்து போகும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மத்தியப் பட்டியலில் இருக்கும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பட்டியல் போன்று அது இருக்காது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை கொண்டுள்ளது. சில மாந்லங்களில் ஆதரவு அற்றோர்கள் மற்றும் அநாதைகள் ஓ.பி.சி. பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் கிறித்துவ மதத்திற்கு மத மாற்றம் செய்து கொண்ட பட்டியல் இனத்தவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்துள்ளனர். கணக்கீட்டாளர் OBC மற்றும் SC பட்டியல்களைச் சரிபார்க்க வேண்டும், இது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது, என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு 2,479 ஆக உள்ளது. ஆனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் இந்த எண்ணிக்கை 3150 ஆக உள்ளது. ஓ.பி.சியை மட்டும் எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கான சாதி மற்றும் சாதி உட்பிரிவுகளை தரும். மேலும் இது போன்ற குறிப்பிடப்படாத பிரிவை வகைப்படுத்துவது மிகவும் சவாலான காரியமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதி பெயர்களின் உச்சரிப்பில் இருக்கும் ஒலி ஒற்றுமை மற்றும் கோத்ரங்களின் பயன்பாடு போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளை மேற்கோள்காட்டி, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பின்தங்கிய வகுப்புகளைப் பற்றிய தரவு சேகரிப்பு கணக்கீட்டாளர்களுக்கு கடுமையான சவாலாக இருக்கும் என்று அரசு தெரிவித்தது. பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களின் தொகுப்பிலிருந்து பெறப்பட்ட இவர்களுக்கு பெறப்பட்ட தகவல்களின் உண்மையை சரிபார்க்கும் வழியை கொண்டிராதவர்கள்.

"சாதி/ SEBCs/ BCs/ OBC க்கள் அரசியலின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளதால், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் இரகசியமான வழிகளில் ஊக்கமளிக்கும் ஆதரவுகளை நிராகரிக்க முடியாது. இத்தகைய ஊக்கமளிக்கும் ஆதரவு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை தீவிரமாக பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கட்டங்கள் ஏற்கனவே தீவிர கலந்துரையாடல்களுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டுவிட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளும் 2019ம் ஆண்டு கள அளவில் நடைபெற்ற சோதனைகளுக்கு பிறகு உறுதி செய்யப்பட்டுவிட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்பாடுகள் 3-4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கும் என்றும், மத்திய அரசு 2020 ஜனவரி 7 அன்று கேட்க வேண்டிய கேள்விகளுக்கு தேவையான அறிவிப்பை வெளியிட்டது-மொத்தம் 31 கேள்விகள் உள்ளன. இந்த கட்டத்தில் ஒருமித்த அட்டவணையில் ஏதேனும் கூடுதல் கேள்வியைச் சேர்ப்பது சாத்தியமில்லை என்றும் பிரமாணபத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் கடந்த காலங்களில் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கைகளை நிராகரித்ததை மத்திய அரசு சுட்டிக்காட்டியது.

2010ம் ஆண்டு சாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த சென்சஸ் துறையை கேட்டுக் கொண்டது சென்னை உயர் நீதிமன்றம். ஆனால் உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டில் இதை முற்றிலும் நிலைநிறுத்த முடியாதது என்று கண்டறிந்தது மற்றும் உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கை நீதித்துறை மதிப்பீட்டின் மிகப்பெரிய மீறல் என்று கூறியது.

Socio Economic and Caste Census (SECC) 2011 சேகரித்த இதர பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான தகவல்களை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்ட்ர அரசு உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டது. ஆனால் ஆனால் எஸ்இசிசி 2021 என்பது ஓபிசி கணக்கெடுப்பு அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது.

தரவு சேகரிப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளை சுட்டிக்காட்டி, இந்த பயிற்சி 46 லட்சம் சாதியினரை பட்டியலிட்டுள்ளது. மொத்த எண்கள் இந்த அளவுக்கு அதிவேகமாக உயர முடியாது. சாதிக் கணக்கீடு என்பது தவறுகளால் நிறைந்திருக்கிறது. இதில் நன்பகத்தன்மை இல்லை என்று கூறியது மத்திய அரசு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Caste Census
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment