Advertisment

நரேந்திர மோடி அரசு 325-126 என வெற்றி: மத்திய அரசை எதிர்த்து பேசிவிட்டு ஆதரித்து வாக்களித்த அதிமுக

No-confidence motion in Parliament:, PM Narendra Modi : நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நரேந்திர மோடி அரசு தோற்கடித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
reservation for economically backward classes, judicial scrutiny, Narendra Modi government, 10 சதவிகித இட ஒதுக்கீடு

reservation for economically backward classes, judicial scrutiny, Narendra Modi government, 10 சதவிகித இட ஒதுக்கீடு

PM Narendra Modi,  No Confidence Motion in Parliament: நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியை தழுவியது. மோடி அரசு 325-126 என வெற்றி பெற்றது.

Advertisment

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக சில மாதங்கள் முன்பு வரை கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்தின் மீது ஜூலை 20 அன்று மக்களைவையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடந்தது.

No Confidence Motion in Parliament Live Updates, To Read in English Click Here

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் நாள் முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தொடங்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்த எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சி அமைத்த பின்னர் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீது நடத்தப்படும் வன்முறைகளை காரணமாக காட்டினர்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன? To Read Click Here

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் காட்டிய எதிர்ப்புகளால் நாடாளுமன்றம் முடங்கியது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.

No Confidence Motion, No Trust Vote, PM Narendra Modi, No Trust Vote in Parliament, நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் No Confidence Motion: நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம், லோக்சபா வாக்கெடுப்பு

PM Narendra Modi, No Confidence Motion in Lok Sabha, No Trust Motion India: நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் LIVE UPDATES

11:20 PM: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள்  வாக்களித்தனர். தீர்மானத்தின் மீது அதிமுக எம்.பி.க்கள் வேணுகோபால், ஜெயவர்தன் ஆகியோர் பேசுகையில் மத்திய அரசை குறை கூறியதால், அதிமுக நடுநிலை வகிக்கும் அல்லது வாக்கெடுப்பை புறக்கணிக்கும் என கருதப்பட்டது. கடைசி வரை சஸ்பென்ஸாக வைத்து மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் அதிமுக எம்.பி.க்கள்!

publive-image நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் முடிவுகள்

11.10 PM: மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு எதிராக 325 பேரும், ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர். இதனால், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு 140 - 150  வாக்குகள் வரை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், 126 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

ஆதரவு - 126

எதிர்ப்பு - 325

பங்கேற்காதவர்கள் - 00

மொத்தம் - 451

11.05 PM: வாக்கெடுப்பு குறித்து எம்.பி.க்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

11:00 PM: எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு தொடங்கியது. குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.

10:55 PM: இதன்பிறகு பேசிய தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ், "வழக்கம் போல மிக அட்டகாசமான நடிப்பை வழங்கிவிட்டு சென்று இருக்கிறார் நமது பிரதமர். ஒன்றரை மணி நேரமாக, ஒரு பிளாக்பஸ்டர் பாலிவுட் படத்தை பார்த்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. மிகச் சிறந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார். 'தெலுங்கு எங்களது தாய் போன்றது' என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அவர் மிகச் சிறந்த அகில உலக பேச்சாளர் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

10:50 PM: சரியாக, 10.49 மணிக்கு பிரதமர் மோடி தனது நீண்ட உரையை முடித்தார்.

10.45 PM: வேலைவாய்ப்பு பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. செப்டம்பர் 2017 முதல் மே 2018 வரை 45 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. போக்குவரத்துத் துறை, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

10:40 PM: "நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் வாங்கி வைத்திருந்த வெளிநாட்டு கடன்களை எல்லாம் அடைத்திருக்கிறோம். காங்கிரஸின் தவறான நிர்வாகத்தால் தான் வாராக்கடன்கள் அதிகரித்தன. வாராக்கடன்களை வசூலிக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். வாராக்கடன்கள் வங்கிகளுக்கு வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் போன்றவை" பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

10:30 PM: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றி வருகிறார். தொடர்ந்து பேசிய மோடி, "2009-2014 வரை வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை காங்கிரஸ் கொள்ளை அடித்துள்ளது. பல சட்டங்கள் காரணமாக அரசுக்கு வராமல் இருந்த வரிகள், இப்போது வந்து கொண்டிருக்கிறது. வங்கி வளர்ச்சிக்காக 2.10 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம். நாட்டுப் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக நேற்று கூட சட்டம் கொண்டு வந்திருக்கிறோம்" என்றார்.

10:10 PM: நாட்டில் எப்போதும் நிலையற்ற தன்மையை வைக்கவே காங்கிரஸ் விரும்புகிறது என நரேந்திர மோடி தனது பேச்சில் குற்றம் சாட்டினார். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தனது அரசு தோற்கடிக்கும் என்பதை தனது பேச்சில் உறுதிபடக் கூறினார் மோடி. ஆந்திர மக்களை மதித்து தனது அரசு பணிகளை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

9:55 PM: மோடி தொடர்ந்து பேசுகையில், ‘2024-ம் ஆண்டும் நீங்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர இறைவனை வேண்டுகிறேன். ரபேல் உள்பட எல்லா ஒப்பந்தங்களும் வெளிப்படையாக செய்யப்பட்டிருக்கின்றன. கத்திக் கத்திப் பேசுவதால் எல்லாம் உண்மை ஆகிவிடாது’ என்றார்.

PM Narendra Modi,No Confidence Motion, No Trust Vote in Parliament, நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் PM Narendra Modi Speech, No Confidence Motion: பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக உரை நிகழ்த்திய காட்சி

9:45 PM : காங்கிரஸுக்கு தன் மீது நம்பிக்கை கிடையாது. அதனால்தான் அரசை நம்பவில்லை என்றும் மோடி குறிப்பிட்டார்.

9:35 PM : எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரப் பசி. பாஜக ஆட்சியை பொறுக்க முடியவில்லை என்றும் மோடி குறிப்பிட்டார். தனது அரசு மக்களுக்கு செய்துள்ள செய்துள்ள மின் இணைப்பு, வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களையும் மோடி பட்டியலிட்டார். கடும் அமளிக்கு இடையே பேசி வருகிறார்.

9:30 PM: 'எதிர்கட்சிகள் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வருகின்றன. எதிர்மறை அரசியலை அவை செய்கின்றன. நாட்டின் வளர்ச்சி பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நாட்டில் பலர் பிரதமர் ஆக ஆசைப்படுகிறார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்காக இதன் மூலமாக எதிர்க்கட்சிகளை இணைக்க விரும்புகிறார்’ என மோடி குறிப்பிட்டார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர். கடுமையான அமளிக்கு இடையே மோடி உரையாற்றி வருகிறார்.

9:20 PM: இரவு 9.18 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை தொடங்கினார்.

9:10 PM: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசுகையில், ‘காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பாகிஸ்தானுடன் பேசுங்கள். முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்காதீர்கள்’ என குறிப்பிட்டார்.

8:30 PM: ஆம் ஆத்மி எம்.பி.  பக்வந்த் மான் பேசுகையில், ‘மோடி தனது வாக்குறுதியை மீறியது ஆந்திர பிரச்னையில் மட்டுமல்ல. 2 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்குவது உள்பட பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை’ என்றார்.

7:45 PM: அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேசுகையில், ‘தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு தேவை. தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.

7:30 PM: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி, ‘ஆந்திர மக்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் இருக்கிறது’ என்றார்.

7:15 PM: ஆந்திராவை சேர்ந்த பாஜக எம்.பி. ஹரிபாபு கூறுகையில், ‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மூலமாக கிடைக்கும் பலன்களை விட அதிகமாக மத்திய அரசு வழங்கியிருக்கிறது. 17,500 கோடி ரூபாய் உதவிகள் வழங்கியிருக்கிறோம்’ என்றார்.

6:10 PM: மக்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே பேச ஆரம்பித்தார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார் கார்கே!

No Confidence Motion, No Trust Vote, PM Narendra Modi, No Trust Vote in Parliament, நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் No Confidence Motion: நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசிய காட்சி

6:00 PM: ஆளும் கூட்டணித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் பேசுகையில், ஆந்திர பிரச்னைகளுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என குறிப்பிட்டார்.

5:30 PM: கடந்த 4 ஆண்டுகளில் தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், பெரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் ராஜ்நாத் சிங் பேசினார்.

5:00 PM: பிரதமர் மோடியை அவையில் ராகுல் காந்தி கட்டி அணைத்தது சரியான செயல் அல்ல என்றும், அவையின் மாண்புகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் குறிப்பிட்டார்.

4:20 PM: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் வளர்ச்சியை சர்வதேச ஏஜென்சிகள் அங்கீகரித்திருக்கின்றன என குறிப்பிட்டு ஆவேசமாக பேசினார். அப்போது அமளி ஏற்பட்டதால், மாலை 4.30 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.

4:00 PM: ராகுல் காந்தி மக்களவையில் தவறான புகார்களை பதிவு செய்ததாகவும், அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறினார்.

‘ராகுல் செயல்பாடு குழந்தைத் தனமானது. அவர் பெரியவராக வளர்ந்தும், காங்கிரஸ் தலைவர் ஆன பிறகும் அவரது செயல்பாட்டில் முதிர்ச்சி இல்லை’ என்றார் அனந்தகுமார்.

3:45 PM: சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசுகையில், ‘பாஜக ஆட்சியில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். சொந்தக் கட்சியினரே இந்த ஆட்சியை விரும்பவில்லை’ என்றார்.

3:30  PM: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.  சுகதாராய் பேசுகையில், ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம், எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல. தத்துவ அடிப்படையிலானது.’ என கூறிவிட்டு பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்கள் வெளிநடப்பு காரணமாக காலியாக இருந்த இருக்கைகளை சுட்டிக்காட்டி, ‘இதுவே இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதற்கு உதாரணம்’ என்றார்.

கட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி... மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம் To Read Click Here

3:00 PM : அதிமுக மக்களவைக் குழு தலைவர் வேணுகோபால் கூறுகையில், ‘தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. உரிய நிதி ஒதுக்கீடு தரப்படவில்லை. அணைகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட அம்சங்களில் மத்திய அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால் இந்த அரசை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்’ என குறிப்பிட்ட அவர், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவோ, எதிர்ப்பதாகவோ திட்டவட்டமாக கூறவில்லை.

2:25 PM: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். ‘ரகசியம் காக்கும் வகையில் ஒப்பந்தம் முதலில் போட்டதே காங்கிரஸ்தான்’ என குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.

2:05 PM: ராகுல் காந்தி பேசி முடித்ததும் தனது இடத்தை விட்டுச் சென்று மோடியை சந்தித்து கை கொடுத்தார். மோடி அவரை கட்டித் தழுவி வாழ்த்து கூறினார்.

சபையில் ஆவேசமாக நேரடியாக மோடி மீது தாக்குதல் நடத்தினாலும், அடுத்த வினாடியே மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றது ராகுல் காந்தியின் நாகரீக செயல்பாடாக பார்க்கப்பட்டது, அடுத்து பாஜக சார்பில் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

No Confidence Motion, No Trust Vote, PM Narendra Modi, No Trust Vote in Parliament, நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் No Confidence Motion: நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி, பேசி முடித்ததும் பிரதமர் மோடியை சந்தித்து கட்டியணைத்து வாழ்த்து பெற்ற காட்சி

2:00 PM : அதிகாரத்தை இழக்க மோடியும், அமித்ஷாவும் அச்சப்படுகின்றனர். அதிகாரம் இழந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை தொடங்கும் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, ‘தலித்கள், பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதாக’வும் குறிப்பிட்டார். ‘என்னை பப்பு என கூப்பிடுங்கள். ஆனால் என் மீது வெறுப்பைக் காட்டாதீர்கள். ‘ என குறிப்பிட்ட ராகுல், பிரதமர் தனது கண்களை பார்க்கவே பதற்றமடைவதாகவும் சொன்னார்.

1:40 PM : பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமல் ஆகியவற்றை குறிப்பிட்ட ராகுல் காந்தி, ‘பணக்காரர்களுடன் பிரதமருக்கு உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்’ என்றார். தனது பணக்கார நண்பர்களின் பாக்கெட்டுகளில் பணத்தை வைக்க பிரதமர் விரும்புவதாக கடுமையாக குற்றம் சாட்டினார் ராகுல். இதனால் சபையில் ஆளும் கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளி செய்தனர். எனவே சபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

1:20 PM : அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். ‘வங்கிக் கணக்குகளில் ரூ15 லட்சம் போடுவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பிய ராகுல், மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது சபையில் கடும் கூச்சல்-குழப்பம் நிலவியது.

1:15 PM: பாஜக சார்பில் ராகேஷ் சிங் பேசுகையில், ‘பாஜக அரசு ஊழல்களை மட்டுமே காங்கிரஸ் அரசு நாட்டுக்கு வழங்கியது’ என குறிப்பிட்டார்.

1:00 PM:  ஜெயதேவ் கல்லா தனது பேச்சின் நிறைவில், ‘நாங்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சம் ரூபாய் கேட்கவில்லை. ஆந்திராவுக்கு நீதி கேட்கிறோம். ஆந்திர மக்கள் இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜக அங்கு வாக்குகளை வாங்க முடியாது’ என்றார்.

12:00 PM:  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டும், நரேந்திர மோடி-அமித்ஷா கூட்டணி மீது குற்றம் சாட்டியும் தெலுங்கு தேசம் எம்.பி.  ஜெயதேவ் கல்லா கூறினார்.

NoConfidenceMotion No Confidence Motion, No Trust Vote, PM Narendra Modi, No Trust Vote in Parliament, நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் No Confidence Motion: நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பேசிய தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா.

11:35 AM: பாஜக கூட்டணிக் கட்சியான சிவசேனா பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்ததால், இன்று நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் என்ன நிலை எடுக்க இருக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்று அவையை முழுமையாக புறக்கணிப்பதாக சிவசேனா அறிவித்தது. விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் அந்தக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்க வில்லை.

11:20 AM: தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். ஆந்திர மாநில பிரிவினை தொடர்பாக அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானம் செய்தார்.

11:15  AM: தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜூ ஜனதா தளம் வெளிநடப்பு செய்தது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் ஒடிஸாவுக்கு எதுவும் செய்யவில்லை என பிஜூ ஜனதாதளம் எம்.பி.க்கள் குறிப்பிட்டனர்.

No Confidence Motion, No Trust Vote, PM Narendra Modi, No Trust Vote in Parliament, நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் No Confidence Motion: நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- மழை காரணமாக தண்ணீர் சூழ காட்சியளிக்கும் நாடாளுமன்றம்

11:05 AM: நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் தாக்கல் செய்தது. விவாதம் தொடங்கியதும் காங்கிரஸ் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 38 நிமிடங்கள் போதாது’ என முறையிட்டார்.

10:50 AM: பாஜக தலைவர் அமித்ஷா நாடாளுமன்றம் வந்தார். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மற்றும் விவாதம் தொடர்பாக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

10:45 AM: நம்பிக்கை இல்லாத் தீர்மானம் காரணமாக அரசியலில் அனல் பறக்கும் சூழலில், டெல்லியில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்கிறது. மழைக்கு இடையே எம்.பி.க்கள் சபைக்கு வந்தபடி இருக்கிறார்கள்.

10:15 AM: ராகுல் காந்தி இதற்கு முன்பு ஒருமுறை நாடாளுமன்றத்தில் தான் பேசினால் பூகம்பம் ஏற்படும் என கூறியிருந்தார். அதை நினைவு கூர்ந்து இன்று கருத்து தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், ‘நிஜம்தான். ராகுல் காந்தி பேசினால், அவர்களது கூட்டணிக் கட்சிகளுக்குள் பூகம்பம் உருவாகும்’ என்றார்.

9:45 AM: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா கூறுகையில், ‘இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசின் தோல்விகளை பட்டியல் இடுவோம். உண்மை நிலவரத்தை மக்கள் தெரியும் வகையில் பேசுவோம்’ என்றார்.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி கொடுத்த தினத்தில் பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘அரசை தோல்வியடையச் செய்யும் வகையில் எங்களுக்கு எம்.பி.க்கள் எண்ணிக்கை இல்லை என யார் சொன்னது?’ என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

9:15 AM: நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இட்டார். அதில், ‘நமது ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள். மக்களவையில் இன்றைய விவாதத்தில் ஆக்கபூர்வமான, விரிவான மற்றும் அமளியில்லாத விவாதங்களை எம்.பி.,க்கள் எழுப்புவார்கள் என நம்புகிறேன். மக்களுக்கும், அரசியலுக்கும் இதை அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்தியாவே நம்மை உன்னிப்பாக கவனிக்கிறது' என கூறியிருக்கிறார்.

8:55 AM: இன்று நடைபெறும் இந்த விவாதத்திற்காக காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலில் கொண்டு வந்த தெலுங்குதேசம் கட்சிக்கு 13 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு 29 நிமிடங்களும், திரிணாமூல் காங்கிரசுக்கு 15 நிமிடங்களும், ஆளும் கட்சியான பாஜகவுக்கு 3 மணி நேரம் 33 நிமிடங்களும் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்க்கட்சியினர் பேசி முடித்து அவையை விட்டு வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

8:45 AM: மொத்தம் 545 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் 11 இடங்கள் காலியாக உள்ளன. 534 பேர் கொண்ட அவையில் சபாநாயகர் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ள மாட்டார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ள தெலுங்குதேசத்திற்கு 16 எம்பிக்கள் உள்ளனர். காங்கிரசுக்கு மக்களவையில் 48 உறுப்பினர்களே உள்ளனர்.மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற காங்கிரசுக்கு 268 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அக்கட்சிக்கு தற்போது 147 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. ஆயினும் முக்கிய விவகாரங்களில் மத்திய அரசின் தோல்வியை மக்களிடம் எடுத்துக்காட்டும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்த இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

8:30 AM: பாஜகவுக்கு 273 எம்.பிக்கள் ஆதரவுடன் பலமான கட்சியாக உள்ளது. சிவசேனா போன்ற கூட்டணிக் கட்சிகள், சத்ருகன் சின்ஹா போன்ற அதிருப்தியாளர்களும் மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறாத 37 எம்பிக்கள் கொண்ட அதிமுக மற்றும் 11 எம்பிக்கள் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. இதனால் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது உறுதி என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

PM Narendra Modi , No-confidence motion in Parliament: நரேந்திர மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களைவையில் விவாதம் :

Narendra Modi Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment