ராஜஸ்தானில் மோடிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய ஆப்பு.!!!

பாஜக இதுவரை தேர்தலில் அளித்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராஜஸ்தானில் வரும் 2019 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க இருக்ககும் பாரதிய ஜனதா கட்சிக்கு அப்பகுதி மக்கள் மிகப்பெரிய மிரட்டலை விடுத்திருக்கின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியில்  அமர்வதற்கு மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் பல ஏமாற்றங்களை சந்தித்த பொதுமக்கள் பாஜகவுக்கு கைக்கொடுத்தனர். தாமரை மலர்ந்தது. பாஜக சார்பில்  பிரதமர் பதவிக்கு நிறுத்தப்பட்ட மோடி அமோகமாக வெற்றி பெற்றார்.

ஆனால், பாஜக வெற்றி பெற்றத்திற்கு  அவர்கள் அளித்த வாக்குறுதிகள் மிக முக்கியம காரணமாக அமைந்தது. குறிப்பாக 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான வங்கி அரசுக் கடன், பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு,இந்தியாவின் ஜீவ நதிகள் நதிகள் இணைப்பு, வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம், கிராமப்புறங்களில் கம்பியில்லா இணையதள சேவை, அனைவருக்குன் சொந்த வீடு திட்டம், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்  என வண்ண வண்ண  வாக்குகுறுதிகள் பொதுமக்களிஅ வெகுவாக கவர்ந்தன.

அப்போது வெற்றி பெறுவதற்கு இந்த வாக்குறுதிகள் உதவினாலும்,  விரைவில் பாஜக சந்திக்க உள்ள அடுத்த தேர்தலுக்கு இந்த பொய்யான வாக்குறுதிகளே எமனாக அமைந்துள்ளது. தற்போது ராஸ்தானி ஆட்சியில் உள்ள பாஜக  இதுவரை தேர்தலில் அளித்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பொருத்த வரையில்க், பாஜகவின் ஆட்சிக்கு பின்பு, மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாம். 31 வயதாகும் ராகேஷ் குமார் என்பவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள காசா போனில் நகரத்தில்  பெயிண்டராக  வேலை செய்து வருகிறார்.

பட்டதாரியான இவருக்கு இன்று வரை வேலை கிடைக்கவில்லையாம். 8 சகோதர்களுடன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரை, அவரின் பெற்றோர்கள் கடன் வாங்கி கல்லூரியின் படிக்க வைத்துள்ளனர். ஆனால்,  எவ்வளவு முயற்சித்தும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. தற்போது பெற்றோர்கள் வாங்கி கடனை அடைக்க கூலித் தொழிலுக்கு சென்று வருகிறார்.

ராஜேஷை போல் பல இளைஞர்கள் ராஜஸ்தானில் வேலையின்மையால்  சிரமப்பட்டு வருகின்றனர், இதுக் குறித்து ராகேஷ் குமார் கூறியதாவது, “கடந்த 2104 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் நான்  பாஜகவிற்கு ஓட்டு போட்டேன். அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி என்னைப் போல் பல இளைஞர்கள் ஏமாந்தனர். சுமார், 10 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று மோடி கூறினார். ஆனால் இன்று வரை எங்கள் பகுதியில் ஒரு பட்டதாரிக்கு கூட வேலை கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் அனைவரும் மோடிக்கு எதிராக கிளம்பியுள்ளோம்

வரும் 2019 ஆம் ஆண்டிற்குள்  வாக்குறுதியில் கூறியப்படி வேலை வழங்காவிட்டால், கண்டிப்பாக அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு ஓட்டு போட மாட்டோம். இதை நான் மட்டும் எடுத்த முடிவல்ல. என்னை போல் பல இளைஞர்கள், அவரின் குடும்பத்தார்கள என அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு” என்று கூறியுள்ளார்.

சமீபத்தி, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஒன்றில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் ஒன்று வெளியானது. அதில், இந்தியாவில் பாஜகவின் ஆட்சிக்கு பின்பு,  வேலையின்மை பெருமளவில் அதிகரித்துள்ளது. 2013 -2014 காலக்கட்டத்தில்,  35 வயதிற்குள் கீழ் உள்ளவர்களில் 1.3 பில்லியன் பட்டதாரிகள் வேலையின்றி இருந்துள்ளன. ஆனால், பாஜக் ஆட்சி அமைத்த 18 மாதங்களில் இந்த அளவில், 6. 23 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே, வட மாநிலங்களில்  மோடியின் அலை குறைய தொடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் பகுதி மக்கள் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது  பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close