Advertisment

மாமல்லபுரம் சந்திப்பு : இந்தியாவுக்கான சீன தூதர் சூசக ட்வீட்

இரு நாடுகளுக்குள் இடையிலான அனைத்து மட்டங்களுக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும், நட்புறவை வலுபடுத்தவும்  தயராகி வருகிறோம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
no official date for China president mamallapuram summit visit : மமால்லபுரத்தில் சீனா அதிபர் வருகைக்கான நாட்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

no official date for China president mamallapuram summit visit : மமால்லபுரத்தில் சீனா அதிபர் வருகைக்கான நாட்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

வரும் அக்டோபர் 12 -ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் இரண்டாவது இன்பார்மல் உச்சிமாநாட்டிற்க்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், இந்தியப் பிரிதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ள விருப்பதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தது .

Advertisment

இதனையடுத்து, மாமல்லபுரத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், கடற்கரை கோயில் கலைசிற்பங்களை சீர்மைப்படுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. ஆனால், சந்திப்புக்கு இன்னும் நான்கு நாட்களே மீதமிருக்கும் நிலையில், இதுகுறித்த அதிகாரப் பூர்வத் தகவலை சீனா இன்னும் வெளியிடப்படாமலே உள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் நேற்று தனது ட்வீட்டில், "வுஹான் உச்சிமாநாட்டில் கிடைத்த உத்வேகத்தை நாம் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். ஆனால், சீன அதிபர் மாமல்லபுரத்திற்கு எப்போது வருகிறார், எந்த நாட்களில் உச்சிமாநாடு நடக்க விருக்கிறது என்ற தகவல்கள் அந்த ட்வீட்டில் இல்லை

மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 2018 ஆம் ஆண்டில் 'வுஹான்' என்ற சீன பிராந்தியத்தில் முதல்    இன்பார்மல் உச்சிமாநாடு நடைபெற்றது.  2018, ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற  இந்த  வுஹான் உச்சிமாநாட்டின் அறிவிப்பை, ஏப்ரல் 22 ஆம் தேதியன்று தான் நரேந்திர மோடியின் பங்கேற்ப்பை அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தததற்கு ஐ.நா சபையில் இந்தியாவுக்கு எதிராக சீனா பேசிய விதம், 'காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைக்காக பணியாற்றுவோம்' என்று கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானுக்காக சீனா தூதர் பேசியத் தன்மை, அருணாச்சல பிரதேசத்தில் ஹிம்கிரி இராணுவ பயிற்சியை சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை மந்திரி கேள்வியாக்கிய விதம், சீனா பாகிஸ்தான் எக்கனாமிக் காரிடார் செயல்பாடுகள் யெல்லாம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் சற்று மனக்கசப்பை ஏற்படுத்துவதாகவே இருந்தன.

இந்த சூழ்நிலையில் தான், இந்தியாவுக்கான சீனா தூதரின் நேற்றைய நாளில் வெளியிடப்பட்ட ட்வீட் முக்கியத்துவம் அடைகிறது. சீன அதிபரின் பயணம் குறித்த அதிகாரப் பூர்வத் தகவல்கள் இல்லை என்றாலும், "வுஹான் உச்சிமாநாட்டில் கிடைத்த உத்வேகத்த்தின் மூலம், இரு நாடுகளுக்குள் இடையிலான அனைத்து மட்டங்களுக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும், நட்புறவை வலுபடுத்தவும்  தயராகி வருகிறோம்"  என்கிற வார்த்தை முக்கியத்துவும் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment