சபரிமலையில் போராட்டம் நடத்தக் கூடாது … கண்காணிப்புக் குழு நியமனம்…

ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ்.சிரி ஜகன், பி.ஆர்.ராமன் மற்றும் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைத்தது கேரள உயர் நீதிமன்றம்

By: Updated: November 28, 2018, 11:52:51 AM

சபரிமலை போராட்டம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து பந்தளம் ராஜ குடும்பத்தினர் மற்றும் தலைமை தந்திரி குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இவர்களைத் தொடர்ந்து, பொது மக்களும் போராட்டத்தில் இறங்கினர். அக்டோபர் மாதம் மண்டல பூஜைகளுக்காக கோவில் திறக்கப்பட்டது.

ரெஹானா பாத்திமா மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். ஆனால் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள், அவர்களை கோவிலுக்குள் நுழைய விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள், அங்கு செய்திகள் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களின் வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தடியடி தாக்குதல்கள் நடத்தினர் காவல் துறையினர்.

மேலும் படிக்க : பக்தர்களின் மனதை புண்படுத்திய முகநூல் பதிவு… கைது செய்யப்பட்ட ரெஹானா பாத்திமா

சபரிமலை போராட்டம் நடத்த தடை

இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்று உத்தரவிட்டிருக்கிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது காவல் துறையின் கடமையாகும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

சபரிமலை விவகாரத்தை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ்.சிரி ஜகன், பி.ஆர்.ராமன் மற்றும் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைத்து உத்தரவிட்டிருக்கிறது கேரள உயர் நீதிமன்றம்.

மேலும் படிக்க : மத்திய அமைச்சரையே நிறுத்தி விதிமுறைகளை விளக்கிக் கூறிய யதீஷ் சந்திரா

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:No one protests in sabarimala says kerala high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X