Advertisment

தாயகம் திரும்பிய அபிஜித்துக்கு சென்ற இடமெல்லாம் மரியாதை... நெகிழ்ச்சியில் மேற்கு வங்கம்!

Nobel Laureate’s home trip : இந்துஸ்தான் பார்க் துணிக்கடைக்கு சென்று தன்னுடைய மனைவி, மகள்களுக்கு உடைகளை வாங்கினார் அபிஜித்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nobel Laureate Abhijit Banerjee's home trip, Nobel Laureate Abhijit Banerjee’s home trip

Nobel Laureate Abhijit Banerjee’s home trip

Nobel Laureate Abhijit Banerjee's home trip :  ப்ரெஸிடென்ஸி அலும்னி அசோசியேசன் உறுப்பினர்கள் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை அவருடைய பல்லிகுங்கே வீட்டில் சந்தித்து பேசினர். அவர் படித்த பல்கலைக்கழகம் சார்பில் பானர்ஜிக்கு உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படும் என்றும் அதற்காக முறையாக அழைக்க வந்திருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

Advertisment

பானர்ஜி அந்த விருதினை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். ஜனவரி மாதம் ப்ரெஸிடென்ஸி பல்கலைக்கழகத்திற்கு  வரும் பானர்ஜி அந்த விருதினை பெற்றுக் கொள்கிறார். இந்த முக்கியமான  தருணத்தில் அபிஜித்துக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள் அனைவரையும் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  ப்ரஸிடென்ஸி பல்கலைக்கழகத்திலிருந்து அபிஜித்தை காண சென்ற உறுப்பினர்கள் கல்லூரியின் ஆண்டு மலர், மேகசின், மலர்க்கொத்து, இனிப்புகள் வழங்கி மரியாதை செய்தனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

விருது வழங்க காத்திருக்கும் ப்ரெஸிடென்ஸி பல்கலைக்கழகம்

ப்ரெஸிடென்ஸி  பல்கலைக் கழகத்தின் தற்போதைய ப்ரெசிடெண்ட் மற்றும் அம்ரித்யா சென்னின் முன்னாள் மனைவியுமான வங்க எழுத்தாளர் நபநீதா தேவ் சென் பானர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.  பானர்ஜி அந்த கல்லூரியில் படித்த போது அவருக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள், கேண்டீன் வைத்து நடத்தியவர்கள், அவர்களின் நண்பர்கள் என அனைவரையும் வர வழைத்து 2020ம் ஆண்டுக்கான அதுல் சந்திர குப்தா அலும்னஸ் விருதுகளை அவருக்கு வழங்க இருப்பதாக  பிரிசிடென்ஸி பல்கலைக்கழகத்தின் செயலாளர் பிவாஸ் சௌத்ரி அறிவித்தார்.

பொருளாதாரத்தில் ஹானர்ஸ் படிப்பை 1981ம் ஆண்டும் பிரெசிடென்ஸி பல்கலைக்கழகத்தில் படித்தார் பானர்ஜி. பானர்ஜியுடன் சேர்ந்து நோபல் பரிசு பெற்ற இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு செய்யவும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நபநிதா செனை சந்தித்து பேசிய பானர்ஜி

பானர்ஜீ, நபநிதா தேவ் செனை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவருடன் நபநிதாவின் மகள்கள் அந்த்ராவும் நந்தனாவும் உடன் இருந்தனர். பானர்ஜி நபநிதாவுக்கு ”குட் எக்கனாமிக்ஸ் ஃபார் ஹார்ட் டைம்ஸ்” ( Good Economics for Hard Times) என்ற புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார். நபநீதா, பானர்ஜீக்கு பலோபசர் பரந்தா (A balcony of love) என்ற புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

பின்பு இந்துஸ்தான் பார்க் அருகில் இருந்த துணிக்கடைக்கு சென்று தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சுடிதார் மற்றும் குர்த்திகளை வாங்கிக் கொண்டு சென்றார்.

முஹுன் பகன் அத்லெட்டிக் க்ளப்பில் வாழ்நாள் உறுப்பினருக்கான மெம்பெர்ஷிப்பை பானர்ஜிக்கு வழங்கி கௌரவப்படுத்தினர் அந்த கிளப்பின் துணை பொதுச்செயலாளர் ஸ்ரீன்ஜோய் போஸ் மற்றும் நிதிச்செயலாளர் தெபாசிஸ் தத்தா. அப்போது அவருக்கு கெர்சி மற்றும் Sona-e-Lekha Itihase என்ற புத்தகத்தையும் அன்பளிப்பாக வழங்கினர். மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர் பானர்ஜியை சந்திக்க தன்னுடைய விருப்பதை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment