இந்தியா இஸ்லாமிய நாடாக மாறக்கூடாது, அதை மோடி அரசு தான் தடுக்க வேண்டும் என்று மேகாலய உயர்நீதிமன்ற நீதிபதி சுதீப் ரஞ்சன் சென் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலய நீதிபதி:
மேகாலய உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் தீப் ரஞ்சன் சென். கடந்த 2014ம் ஆண்டு தீப் ரஞ்சன் மேகாலயா உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் குடியுரிமை சான்றிதழ் கோரிய வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தீப் ரஞ்சன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் மேகால அமோன் ராணா என்பவர் குடியுரிமை சான்றிதழ் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த் நீதிபதி இறுதியாக தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் நீதிபதி தீப் ரஞ்சன் சென் பேசியதாவது, “ இந்தியா முஸ்லீம் நாடாக மாறாமல் பார்த்துக் கொள்வது மோடி அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. அவர்கள் தான் இதை புரிந்துக் கொள்ள முடியும்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம்கள் அல்லாத பழங்குடியின மக்கள் இந்தியாவில் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வசிக்க அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல், தாமதமே இல்லாமல் இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும்.
இதற்கான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குடியுரிமை கோருவதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த பணிகளில் ஏற்படும் தவறுகளால் வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் இந்தியர்களாகியுள்ளனர். உண்மையான இந்தியர்கள் விடுபட்டுவிடுகின்றனர். இது மிகவும் கவலை தருகிறது.
இந்தியாவை முஸ்லீம் நாடாக மாறாமல் தடுத்து பாதுகாப்பது மோடி அரசினால் மட்டுமே முடியும். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தாஜி -யும் தேசிய நலன் கருதி பிரதமருக்கு ஆதரவாக இருப்பார்.
உண்மையான இந்தியாவை, இந்தியப் பிரிவினையை சுட்டிக் காட்டாமல் நான் தீர்ப்பளித்தால் அது எனது மனசாட்சிக்கு விரோதமானதாகும், எனது கடமையிலிருந்து தவறியதாகும். பாகிஸ்தான் நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது. அதேபோல இந்தியா, தன்னை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் மதச்சார்பற்ற நாடாகவே அது இருக்கிறது.
எனது தீர்ப்பின் நகலை பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோருக்கு கொண்டு சேர்ப்பிக்க வேண்டும். இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தினர், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், காஸிக்கள், ஜைனியாஸ், கரோஸ் ஆகியோரின் நலன்களைக் காக்க உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
61 வயதாகும் நீதிபதி சுதீப் ரஞ்சனின் இந்த சர்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.