Advertisment

நர்ஸ் கூட்டு பலாத்காரம்; தேசிய அளவிலான நீச்சல் வீரர்கள் 4 பேர் கைது

பெங்களூரு நர்ஸ் கூட்டு பலாத்கார வழக்கு; தேசிய அளவிலான 4 நீச்சல் வீரர்கள் கைது; நீச்சல் விளையாட்டு உலகம் அதிர்ச்சி

author-image
WebDesk
New Update
நர்ஸ் கூட்டு பலாத்காரம்; தேசிய அளவிலான நீச்சல் வீரர்கள் 4 பேர் கைது

Andrew Amsan , Mahender Singh Manral

Advertisment

Nurse’s gang-rape: Four national-level swimmers’ arrest shocks fraternity: பெங்களூரு கூட்டு பலாத்கார சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு நீச்சல் வீரர்களும், பல மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பயிற்சிக்காக பெங்களூருவுக்கு வந்தவர்கள் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

செவ்வாயன்று, பெங்களூரு போலீசார் தேவ் சரோஹா, ரஜத், ஷிவ் ராணா மற்றும் யோகேஷ் குமார் ஆகியோரை நர்ஸ் ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்தனர்.

ராணா மற்றும் ரஜத், தேசிய அளவில் ஹரியானா சார்பாக கலந்துக் கொண்டதாக அறியப்படுகிறது. நீச்சல் சம்மேளன அதிகாரிகளின் கூற்றுப்படி, இருவரும் கடந்த அக்டோபரில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர். "அவர்கள் எங்களிடம் உள்ள சிறந்த நீச்சல் வீரர்களில் இருவர்" "இருவரும் மாநில அளவில் பதக்கங்களை வென்றனர், இது அவர்களுக்கு தேசிய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது." என்று ஒரு அதிகாரி கூறினார்.

குளிர்காலத்தில் டெல்லி மற்றும் ஹரியானா முழுவதும் உள்ள பல நீச்சல் குளங்கள் செயல்படாததால், ராணாவும் ரஜத்தும் பயிற்சியைத் தொடர பெங்களூரு சென்றுள்ளனர் என்று அதிகாரி கூறினார்.

சரோஹா மற்றும் குமார் ஆகியோரும் அவர்களுடன் சேர்ந்து, நீச்சல் வீரர்கள் பயிற்சி சான்றிதழ் படிப்புகளை மேற்கொண்டு வந்தனர். “கோடை காலத்தில் தனியார் மற்றும் பொதுக் குளங்களில் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. எனவே அவர்கள் பயிற்சி உரிமத்தைப் பெற முயன்றனர், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

போலீஸ் வட்டாரங்களின்படி, ரஜத் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் டேட்டிங் செயலியில் நட்பாக இருந்ததாகவும், பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

புகார்தாரரின் கூற்றுப்படி, அவர் மார்ச் 24 அன்று இரவு உணவின் போது ராஜத்தை சந்தித்தார். மார்ச் 25 அன்று தாக்கல் செய்யப்பட்ட தனது புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், அவர்கள் ஒவ்வொருவராக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

தனது மகன் நிரபராதி என்று கூறிய சுஷில் சரோஹா, தேவ் சரோஹா "தனது நாட்டுக்காக விளையாட" பெங்களூரு சென்றதாக கூறினார்.

டெல்லி காவல்துறையின் தலைமைக் காவலரான சுஷில் சரோஹா கூறியதாவது: எனது மகன் நிரபராதி. செவ்வாய்கிழமை இரவு அவருடன் பேசினேன். கடந்த வாரம் பயிற்சிக்காக பெங்களூரு சென்ற இவர், தனது நண்பர்களுடன் ஒரு குடியிருப்பில் தங்கி இருந்தார். நீச்சல் வீரரான இவர், நாட்டுக்காக விளையாட தயாராகி வந்தார். நான் தற்போது அவருடன் இருக்க பெங்களூரு செல்கிறேன். என்றார்.

இதையும் படியுங்கள்: மதப் பிளவு இந்தியாவின் ஐ.டி. தலைமையை அழிக்கும்: கிரண் மஜூம்தார் ஷா வேதனை!

இச்சம்பவம் நீச்சல் வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்களது சகாக்களின் கூற்றுப்படி, இந்த நால்வர் அணியானது உள்நாட்டு வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டது மற்றும் நாடு முழுவதும் உள்ள பயிற்சி வசதிகளில் பயிற்சி பெற்று போட்டியிட்டு வந்தது.

"அவர்கள் அனைவரும் பல முறை தேசிய மற்றும் மாநில சாம்பியன்கள் மற்றும் மிகவும் திறமையான நீச்சல் வீரர்கள். அவர்கள் அனைவரும் ஐந்து வயதாக இருந்தபோது பயிற்சியைத் தொடங்கினர். அவர்களில் இருவர் ஜூனியர் ஹரியானா மாநில முகாமின் போது எனக்கு கீழ் இருந்தனர். அப்போது அவர்களுக்கு 10 அல்லது 12 வயது இருந்திருக்க வேண்டும். நீச்சல் வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளோம். அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு தகுதியானவர்கள்,” என்று ஹரியானா மாநில மூத்த பயிற்சியாளர் ஒருவர் கூறினார், அவர் பயிற்சியளித்த இரண்டு நீச்சல் வீரர்களின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

2017 ஆம் ஆண்டில் விளையாட்டிலிருந்து விலகிய மற்றொரு முன்னாள் தேசிய சாம்பியன், யோகேஷை ஐந்து வயது சிறுவனாக முதலில் பார்த்ததாகக் கூறினார். யோகேஷ் சமீபத்தில் சிறந்த நீச்சல் வீரராக (மாநில அளவிலான போட்டியில்) தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் அபார திறமைசாலிகள் ஆனால் அவர்கள் செய்தது தவறு தான். அவர்களின் பெயர்களைக் குறிப்பிடவும் விரும்பவில்லை,'' என்றார்.

முன்னாள் நீச்சல் வீரர் கூறினார்: “அவர்கள் விளையாட்டின் நற்பெயரைக் கெடுத்துவிட்டனர். இன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்த்தபோது - 'கூட்டுப் பலாத்காரத்திற்காக நான்கு நீச்சல் வீரர்கள் கைது' - என்னால் நம்பவே முடியவில்லை. சமீபத்தில், மல்யுத்தம் மோசமான காரணங்களுக்காக செய்திகளில் இருந்தது, இப்போது நீச்சல்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Bengaluru Rape Swimming
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment