1 மாத விமான செலவு மட்டும் ரூ. 45 லட்சமா? ஆளுநரிடம் அதிரடியாக கேள்வி கேட்கும் அரசாங்கம்!

வாடகைக்கு ஹெலிகாப்டரை எடுத்து, உபியில் உள்ள தனது சொந்த ஊரான சிர்ஸாவுக்குச் சென்றார். 

ஓடிசா மாநில ஆளுநர் கணேஷ் லால் கடந்த மாதம் விமானத்தில் செல்ல  ரூ. 45 லட்சம்   செலவு செய்திருப்பது குறித்து  விளக்கம் தர  நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஓடிசா மாநில ஆளுநராக கணேஷ் லால் நியமிக்கப்பட்டார்.   கணேஷ்  பதவியேற்ற அடுத்த மாதமே  ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி டெல்லிக்குப் பயணித்தார், அங்கிருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை எடுத்து, உபியில் உள்ள தனது சொந்த ஊரான சிர்ஸாவுக்குச் சென்றார்.

கணேஷ் சென்ற ஜெட்விமானத்திற்கு ரூ41.18 லட்சமும், ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்ததில் ரூ.5 லட்சமும் செலவாகியுள்ளது.  இந்நிலையில் ஆளுநரின் விமான செலவுக்கு விளக்கம் கேட்டு முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் பொது நிர்வாகத்துறை சார்பில் இரண்டு  நோட்டீஸ்களை அனுப்பப்பட்டுள்ளன.

இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள ஓடிசா மாநில பொது நிர்வாகத்துறையின் துணை செயலாளர் இந்திரா பேஹ்ரா , “  ஹெலிகாப்டரையும், ஜெட் விமானத்தையும் ஆளுநர் கணேஷ் லால் எந்தச் சூழலில் பயன்படுத்தினார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.ஜெட் விமானத்தை ஜுன் 10-ம் தேதி வாடகைக்கு எடுத்து ஆளுநர் டெல்லிக்குச் சென்று, அங்கிருந்து 13-ம்தேதி புவனேஷ்வர்  வந்துள்ளார்

இதற்காக ரூ.41.18 லட்சம் வாடகை செலுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து ஜுன் 10-ம் தேதி சிர்ஸா நகருக்கு ஆளுநர் சென்றுள்ளார். இந்த வகையில் ரூ.5 லட்சம் செலவாகியுள்ளது. இந்த செலவை உரிய கணக்குடன், அதற்கான விளக்கத்துடன் ஆளுநர் அளிக்குமாறு  நோட்டீஸில் தெரிவித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

×Close
×Close