Advertisment

பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக புகார்; தடுப்பூசி சோதனைகளை தொடர அரசு ஒப்புதல்!

இந்த அறிக்கையை ஆராய்ந்து பாதகமான நிகழ்வுக்கும் தடுப்பூசிக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும்.

author-image
WebDesk
New Update
பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக புகார்; தடுப்பூசி சோதனைகளை தொடர அரசு ஒப்புதல்!

Kaunain Sheriff M

Advertisment

Covid19 vaccine Trial : கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி. எனவே 5 கோடி இழப்பீடு வேண்டும் என்று சென்னையில் நடத்தப்பட்ட தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் கோரினார். இதனை அடுத்து மத்திய அரசு, இந்த தடுப்பூசியை பரிசோதிக்க பல்வேறு நிலைகள் இருக்கின்றன. எனவே தற்போது இந்த சோதனைகளை நிறுத்த வேண்டாம் என்று செவ்வாய்கிழமை கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக தன்னுடைய கருத்தை பொதுமக்களுக்காக முதன்முறை அறிவித்த அரசு, இது போன்று நாட்டில் எங்கும் வைக்கப்படும் உரிமைக் குரல்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதி செய்தது. நாட்டில் எங்கும் தாக்கல் செய்யப்படும் சட்டப்பூர்வ கோரிக்கையை அங்கீகரிப்பதில் அல்லது ஒப்புதல் அளிப்பதில் ஐசிஎம்ஆருக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார்.

ஐ.சி.எம்.ஆர் தலைவர் டாக்டர் பால்ராம் பார்கவா, சுயாதீன கண்காணிப்பு அமைப்புகளால் அனுப்பப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கட்டுப்பாட்டாளரால் நடத்தப்பட்ட ஆரம்ப மதிப்பீட்டினை ஆய்வு செய்த பிறகு “இந்த சோதனைகளை நிறுத்த வேண்டிய அவசியமில்லை” என்றார்.

ஐ.சி.எம்.ஆர் மற்றும் எஸ்.ஐ.ஐ ஆகியவை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்படும் தடுப்பூசியின் இந்திய கூட்டாளிகள். பங்கேற்பாளரின் இந்த குற்றச்சாட்டு பெரிய தீங்கினை விளைவிக்கும் என்று கூறிய சீரம், அவருடைய மருத்துவ நிலை தடுப்பூசி சோதனையுடன் இணைக்கவில்லை என்று கூறியது. மேலும் 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரும் என்றும் கேட்டுக் கொண்டது.

"நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், மருந்துகள், தடுப்பூசிகள் அல்லது வேறு ஏதேனும் சுகாதார தலையீட்டால் பாதகமான நிகழ்வுகள் நிகழ்கின்றன.எல்லா தரவையும் தொகுத்தபின், நிகழ்வுக்கும் தலையீட்டிற்கும் ஒரு காரணமான இணைப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிவது அல்லது மறுப்பது என்பது கட்டுப்பாட்டாளரின் பங்கு. ஆகவே, அந்த காரணத்தை உறுதிப்படுத்துவது அல்லது மறுப்பதனை , டி.சி.ஜி.ஐ (இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல்) செய்ய வேண்டும். இது முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் செய்யப்படுகிறது மற்றும் மதிப்பீடு புறநிலை அடிப்படையிலான அளவுகோல்களுடன் செய்யப்படுகிறது, ”என்று பார்கவா கூறினார் .

விசாரணையை கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளில் முதலாவது, பாதகமான நிகழ்வுகளை பட்டியலிடும் “முன்பே கூறப்பட்ட ஒப்புதல் படிவம் (prior informed consent form)” ஆகும், இதில் அவர்கள் கையெழுத்திட வேண்டும். "இது ஒரு உலகளாவிய நடைமுறை ... இந்த விஷயத்தின் கையொப்பம் இல்லாமல், அவர் ஒரு மருத்துவ பரிசோதனையில் பங்கேற்க முடியாது" என்று பூஷண் கூறினார்.

இரண்டாவதாக இந்த தடுப்பூசிகள் பல மையங்களில் பல தளங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் நபர்களுக்கு மருத்துவ கவனிப்பின் கீழ் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் நிறுவன நெறிமுறை குழுக்கள் உள்ளது. எப்போது பாதகமான நிலை ஏற்படுகிறதோ அப்போது நெறிமுறை குழு அதனை கட்டுப்பாட்டாளாருக்கு 30 நாட்களில் அனுப்பி விடுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

டேட்டா சேஃப்டி அண்ட் மானிட்டரிங் போர்ட் (DSMB) அரசு மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் தலையீடு ஏதும் இல்லாமல் சுதந்திரமாக பணியாற்றுகிறது. நாளுக்கு நாள் நடைபெறும் சோதனைகள் குறித்த தரவுகளை பதிவு செய்கிறது. அவர்களும் இது போன்ற பாதகமான சூழல் குறித்து புகார்கள் அளிப்பார்கள். தற்காலிகமாக சோதனைகளை நிறுத்துவது அல்லது விசாரணை மேற்கொள்வது குறித்து அவர்களும் பரிந்துரைகளை வழங்குவது உண்டு.

நான்காவதாக, பாதகமான சூழல் நிலவும் போது படிவம் 5-ஐ தலைமை கண்காணிப்பாளர் பதிவு செய்து கட்டுப்பாட்டாளாருக்கு அனுப்பி வைப்பார். நெறிமுறை குழு மற்றும் டி.எஸ்.எம்.பி.யும் இந்த அறிக்கையை ஆராய்ந்து பாதகமான நிகழ்வுக்கும் தடுப்பூசிக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும். அதன் பின்னரே கட்டுப்பாட்டாளர் தேவையான பிரிவுகளுக்கு இந்த அறிக்கைகளை வழங்குவார்கள். தற்போது சோதனைகளில் முன்னேறி செல்லுமாறு கூறியுள்ளது என்றார் அவர்.

தற்போது இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது சீரம். இந்த தகவல்களின் அடிப்படையில் மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு-சீரம் உருவாக்கிய தடுப்பூசி வழக்கில் குறிப்பிடப்படும் பாதகமான நிகழ்வு அக்டோபரில் நடந்தது. இந்த ஐந்து செயல்முறைகளும், தயவுசெய்து இணங்கவில்லை என்று கருத வேண்டாம், ”என்று பூஷண் கூறினார்.

ரூ .100 கோடி இழப்பீடு கோருவதற்கான எஸ்ஐஐ நடவடிக்கைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, சுகாதார செயலாளர் கூறினார்: “சாதாரண சூழ்நிலைகளில், தடுப்பூசி வளர்ச்சிக்கு பொதுவாக 8-10 ஆண்டுகள் ஆகும். ஆனால் தொற்றுநோயின் அளவையும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, நாங்கள் அந்த காலவரிசையை 16-18 மாதங்களாக குறைக்க முயற்சிக்கிறோம்… உங்களுக்கு இந்த சூழல் இருக்கும்போது, வணிக ஆர்வம், வணிக நிறுவனங்களின் ஒரு பகுதியாக சில மூலோபாய நடவடிக்கைகளை ஆணையிடும் சாத்தியம் உள்ளது. எனவே அன்றைய அரசாங்கத்திற்கும் இதற்கும் எந்த சம்ப்ந்தமும் ஈல்லை. தடுப்பூசியின் தேவை ” தடுப்பூசியின் தேவை மற்றும் "தடுப்பூசி பாதுகாப்பு" குறித்து மக்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் பூஷன் அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vaccine Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment