Advertisment

இன்டர்போல் பொதுச் சபை கூட்டம்: முக்கிய வழக்குகள் பற்றி தகவல் பெற இந்தியாவை அணுகிய 14 நாடுகள்

டெல்லியில் நடைபெற்ற இன்டர்போல் பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் இந்தியாவுடன் சந்திப்புகள் நடத்தின.

author-image
WebDesk
New Update
இன்டர்போல் பொதுச் சபை கூட்டம்: முக்கிய வழக்குகள் பற்றி தகவல் பெற இந்தியாவை அணுகிய 14 நாடுகள்

டெல்லியில் நடைபெற்ற இன்டர்போல் பொதுச் சபை கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது. சர்வதேச காவல் துறையான ‘இன்டர்போல்’ அமைப்பின் 90-வது பொதுச் சபைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்டர்போல் கூட்டம் இந்தியாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்தியாவுடன் பல்வேறு நாடுகள் சந்திப்புகள் நடத்தின. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, ஆஸ்திரியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், பூட்டான், நமீபியா, பஹ்ரைன், ரஷ்யா, கனடா, ஓமன், செர்பியா, மலேசியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளுடன் சந்திப்புகள் நடைபெற்றன. முக்கிய வழக்குகளில் தகவல்களைப் பெற இரு தரப்பு சந்திப்புகள் நடைபெற்றன எனக் கூறப்பட்டுள்ளது.

சந்திப்புகள் குறித்து சி.பி.ஐ அதிகாரி கூறுகையில், உள்ளூர் தொடர்புகளுடைய கிரிமினல் வழக்குகள், முக்கிய வழக்குகள், சந்தேகிக்கப்படும் தப்பியோடிய நபர்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இருதரப்பு சந்திப்புகள் நடைபெற்றன. அவர்களுடன் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது, மேலும் அவர்கள் வைத்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன என்று தெரிவித்தார்.

வியாழக்கிழமை இன்டர்போல் பொதுச் சபை கூட்டம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கையில், சி.பி.ஐ இந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் "காவல்துறை ஒத்துழைப்பு தொடர்பானது. குற்றவியல் புலனாய்வு பகிர்வை மேம்படுத்துவது. தப்பியோடியவர்கள் மற்றும் குற்றவாளிகளின் இருப்பிடம், பயங்கரவாதம், பயங்கரவாத நிதியுதவி மற்றும் ஆன்லைன் தீவிரவாத செயல்களை எதிர்த்துப் போராடுதல், சைபர் குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க யூரோபோலுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்துடன் இந்தியா நல்லுறவு கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில், இந்தியா ஏற்கனவே விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களை நாடு கடத்துவது தொடர்பான விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இசையமைப்பாளர் நதீம் சைஃபி (குல்ஷன் குமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்) மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் ரவி சங்கரன் (கடற்படை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்) போன்ற தப்பியோடியவர்களை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த இந்தியா இதுவரை தவறிவிட்டது.

எவ்வாறாயினும், சமீபத்திய காலத்தில் இந்தியா சீன அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஹாங்காங்கில் இருந்து ஜி ஜெங் ஃபாங் என அடையாளம் காணப்பட்ட ஒரு சீன போதைப்பொருள் வியாபாரியை நாடு கடத்துவதில் வெற்றி பெற்றது.

ஃபாங் முன்பு வதோதரா சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் 2008 சூரத் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் உதவியுடன் 2011 இல் தப்பினார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹாங்காங்கில் இருந்து நாடு கடத்தப்பட்ட அவர், குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

"சட்ட அமலாக்க மட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது" என்று சி.பி.ஐ அதிகாரி ஒருவர் கூறினார்.

கனடாவுடனான கலந்துரையாடலின் போது "காலிஸ்தானி" பயங்கரவாதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனுக்கு எதிராக தடை செய்யப்பட்ட சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் மீது சிவப்பு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் சமீபத்தில் நிராகரித்தது.

மலேசியா நாட்டு அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, ​​பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததாகக் கூறப்படும் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை மீறி இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் அந்நாட்டில் தங்கியிருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. நாயக்கிற்கு எதிராக ஆர்.சி.என் வெளியிட இன்டர்போல் மறுத்துவிட்டது.

நைஜீரியாவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தப்பட்டதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ஸ்டெர்லிங் பயோடெக் குழுமத்தின் விளம்பரதாரர்களான நிதின் சந்தேசரா மற்றும் சேத்தன் சந்தேசரா ஆகியோர் எண்ணெய் வணிகத்தை நடத்துவதாக நம்பப்படுவது குறித்து தகவல் கூறவில்லை.

2017ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முன், இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.20,000 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக சண்டேசராக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்களை பிறப்பித்த போதிலும், அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்துவது குறித்து நைஜீரிய அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment