Advertisment

மோடியின் நட்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரெம்பிற்கு உதவுமா? கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ன?

10 வருடங்கள் அல்லது அதற்கும் குறைவாக அமெரிக்காவில் வாழ்பவர்களில் 28% நபர்கள் ட்ரெம்பிற்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Only 22% NRIs to vote Trump, support for Modi cuts across divide

 Karishma Mehrotra 

Advertisment

Only 22% NRIs to vote Trump, support for Modi cuts across divide : நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் ஒரு கணக்கெடுப்பு, அனைத்து அமெரிக்க வாழ் இந்தியர்களில் பாதிபேர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் திறனை ஒப்புக்கொண்டாலும், ஜனநாயக கட்சிக்கு வாக்களிப்பதில் தீர்மானமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரெம்பிற்கும் நரேந்திர மோடிக்கும் இடையே இருக்கும் உறவானது வெளிப்படையாக இருக்கின்ற போதிலும் 68% பேர் ஜோ பைடனுக்கும் 22% பேர் ட்ரெம்பிற்கும் வாக்களிக்க உள்ளதாக அந்த சர்வே தெரிவிக்கிறது. இந்த கணக்கெடுப்பு கார்னேஜி எண்டோவ்மெண்ட் ஃபார் இண்டெர்நேசனல் பீஸ், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம், பெனிசல்வேனியா பல்கலைக்கழக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இருப்பினும் ட்ரெம்பிற்கு ஆதரவாக வாக்களிக்க இருக்கும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மோடி பற்றி நற்மதிப்பை கொண்டுள்ள்னர். (100ல் 76% பேர்). அதே நேரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு வாக்களிக்க இருக்கும் அவர்களில் 52 (100க்கு) நபர்கள் மோடிக்கு சாதகமான பார்வையை கொண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு 41.61 லட்சம் மக்களுடன் இருக்கும் வலுவான சமூகத்தின் தேர்வுகளை வெளிப்படுத்துகிறது. ஒன்று, இந்தியாவில் நடைபெறும் அரசியல் குறித்து அவர்களது பார்வை. மற்றொன்று, ஜனநாயக கட்சியின் தேர்வான கமலா ஹாரீஸ் - இது இரண்டும் அவர்களின் தேர்வுகளுக்கான காரணமாக இருக்கிறது.  குடியரசு கட்சியினர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகளை கொண்டிருக்கும் போதிலும், ஜனநாயக கட்சியினர் அவர் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். மோடியின் ஆதரவாளர்கள் ட்ரெம்பின் ஆதரவாளர்கள், மோடியின் எதிர்ப்பாளர்கள் ட்ரெம்பின் எதிர்ப்பாளர்கள் என்ற எளிய கருத்து ஆதரவை இங்கு காணமுடியவில்லை என்று மிலன் வைஷ்ணவ் இந்திய எக்ஸ்பிரஸ் இதழுக்கு தெரிவித்தார். கார்னகியின் தெற்காசியா திட்டத்தின் முன்னணி ஆராய்ச்சியாளராக இவர் பணியாற்றி வருகிறார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாரம்பரியமாக ஜனநாயக கட்சிக்கு தான் வாக்களிக்கின்றனர். பாரக் ஒபாமாவிற்கு 2008ம் ஆண்டு தேர்தலில் 93% பேர் வாக்களித்தனர். ஆனால் அதன் பின்னான தேர்தல்களில் ஜனநாயக கட்சியினர், இவர்களின் வாக்குகளை, குடியரசு கட்சியினரிடம் இழக்கின்றனர்.

to read this article in English

கிட்டத்தட்ட பாதி அமெரிக்க வாழ் இந்தியர்கள் (48%) நரேந்திர மோடியின் செயல்திறனை ஒப்புக் கொள்கின்றனர். 32% பேர் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் மோடியின் சாதகத்திற்கு ஒரு தளம் இருக்கலாம்; டிரம்ப் ஆதரவாளர்கள் மோடியைப் பற்றி உயர்ந்த கருத்தைக் கொண்டிருக்கையில், டிரம்ப்பின் எதிர்ப்பாளர்கள் இந்தியப் பிரதமர் குறித்த அவர்களின் கருத்துக்களில் வேறுபடுகின்றனர். டிரம்பை மறுப்பவர்கள் மோடி மீதான கருத்துகளில் வேறுபடுகின்றனர், ஏறக்குறைய 40 % பேர் அவருக்கு ஆதரவாக உள்ளனர், 40% பேர் அவரை மறுக்கிறார்கள்.

"இந்திய அமெரிக்கர்கள் உண்மையில் இந்தத் தேர்தலில் ஒரு பேசும் பொருளாகவே மாறிவிட்டனர். 2014 ல் மோடி ஆட்சிக்கு வருவது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியான போது இந்திய அமெரிக்க சமூகத்திற்குள் சில பிளவுகளை அது உருவாக்கியது. அந்த பிளவுகளில் ஒன்று இந்திய அமெரிக்கர்கள் பிரதமரைப் பார்க்கும் விதம். ஆனால் இந்தியாவின் அடிப்படையில் இந்திய அமெரிக்கர்கள் எந்த அளவிற்கு இங்கு வாக்களிக்கப் போகிறார்கள்? இது குறித்து எனக்கு மிகவும் சந்தேகம் உள்ளது, ”என்கிறார் வைஷ்ணவ்.

இந்த கணக்கெடுப்பு 1200 இந்திய பிரதிநிதிகளை கொண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது. வளர்ந்து வரும் எதார்த்தற்கு மாறாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜனநாயகக் கட்சியை குடியரசுக் கட்சியையும் இரண்டு முதல் ஒன்று என்ற வித்தியாசத்தில் ஆதரிக்கின்றனர். பைடனுக்கான ஆதரவு (68%), ஹிஸ்பானிக் வாக்களர்கள் தரும் ஆதரவைக் காட்டிலும் (64%) அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாக்கு ஆதரவுக்கு (79%) நெருக்கமாக இருக்கிறது.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் மூன்று சதவீதத்தினர் மட்டுமே அமெரிக்க-இந்தியா உறவுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். , பதிலளித்தவர்களில் பாதி பேர் இந்தியா குறித்த வேட்பாளரின் நிலைப்பாடு தங்கள் வாக்குகளுக்கு “மிக முக்கியமானதாக” அல்லது “ஓரளவு முக்கியமானதாக” இருக்கும் என்று கூறியுள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியர்களில் 22% இந்துக்க்கள், 45% கிறித்துவர்கள், மற்றும் 10% இஸ்லாமியர்கள் ட்ரெம்பிற்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர். பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கமலா ஹாரீஸ் தேர்வு தான் இந்த தேர்தலில் வாக்களிக்க உந்துதலாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்தியவுடனான உறவினை ட்ரெம்ப் எப்படி கையாளுகிறார் என்பதிலும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிளவுறுகிறார்கள். கால்பங்கிற்கும் குறைவானவர்கள் ட்ரெம்பின் செயல்பாடுகளுக்கு ஆதரவினையும், கால்பங்கினர் எதிர்ப்பினையும் பதிவு செய்கின்றனர்.

மூன்றில் இரண்டு பங்கு ஜனநாயக கட்சி அமெரிக்க வாழ் இந்தியர்கள் (67%) ட்ரெம்பின் இஸ்லாமியர்களுக்கான தடையை (இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு மக்கள் வருவதை தடுக்கும் வகையிலான தடை) எதிர்க்கின்றனர். ஆனால் நான்கில் ஒரு பங்கு (28%) குடியரசு கட்சியினர் இந்த எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். ஆனால் இருதரப்பினரும் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விசயத்தில் ஒற்றுமையாக இருக்கின்றனர். இரண்டு தரப்பிலும் பாதிக்கும் மேற்பட்டோர் உயர்கல்வியில் எடுக்கப்பட இருக்கும் உறுதியான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இரண்டு வரையறுக்கும் பண்புகளை இதில் காண முடிகிறது. அமெரிக்காவிலும் அதன் பிராந்தியத்திலும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் செலவழித்த நேரம். 10 வருடங்கள் அல்லது அதற்கும் குறைவாக அமெரிக்காவில் வாழ்பவர்களில் 28% நபர்கள் ட்ரெம்பிற்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மிட்வெஸ்ட்டில் இருக்கும் நபர்களில் 27% நபர்கள் மட்டுமே ட்ரெம்பிற்கு வாக்களிக்க உள்ளனர். தெற்கு பகுதிகளில் இருப்பவர்களில் 24% பேர் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Narendra Modi President Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment