Advertisment

பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்.. காங்கிரஸ், தி.மு.க. மிஸ்ஸிங்

மணீஷ் சிசோடியா கைது விவகாரத்தில் பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ள நிலையில், அந்தக் கடிதத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கையெழுத்திடவில்லை.

author-image
WebDesk
New Update
Oppn divisions come to the fore In letter to PM Modi Congress DMK Left missing

எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல்வர் கே. சந்திர சேகர் ராவ், முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் 9 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரிகள் கையெழுத்திடவில்லை.

இது பிஜேபி எதிர்ப்பு முகாமில் உள்ள பிளவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் பிஜேபிக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியைப் பார்க்க விரும்புவோருக்கு சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Advertisment

அந்த 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்-அமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் (ஆம் ஆத்மி), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர் ராவ் (பாரத் ராஷ்டிர சமிதி), மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர் ஆவார்கள்.

இந்தக் கடிதத்துக்கு ஆம் ஆத்மி மற்றும் பிஆர்எஸ் ஆகியவை கடிதத்திற்கு உந்து சக்தியாக இருந்துள்ளன.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிசோடியா கைது செய்யப்பட்டதை டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி மற்றும் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் வரவேற்றனர்.

இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே பிணக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜிதான் காரணம் என காங்கிரசார் வெளிப்படையாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

முதல்வருக்கு எதிராக விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வேறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மறுபுறம் காங்கிரஸூம், கம்யூனிஸ்டுகளும் இணைந்து திரிணாமுல் காங்கிரஸிற்கு பிரச்னை கொடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள திரிணாமுல் காங்கிரஸ், இருவரும் 2021-ல் கூட்டணி வைத்ததையும் சுட்டிக் காட்டியுள்ளது.

டிஎம்சி கடந்த ஆண்டு வரை தேசிய அளவில் பிஜேபிக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டணிக்கு தன்னை ஒரு ஊக்கியாகக் காட்டிக் கொண்டது, ஆனால் கோவா மற்றும் வடகிழக்கு தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து அதன் தேசிய அபிலாஷைகள் பறிபோய்விட்டன. திரிபுரா மற்றும் மேகாலயாவில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து 2024 தேர்தலில் டிஎம்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி கூறியதில் இது பிரதிபலித்தது.

மேலும் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸும் ஒத்துப்போகவில்லை. இதற்கிடையில், கடந்த அக்டோபரில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் போது, கே.சி.ஆர் தலைமையிலான கட்சியுடன் எந்த கூட்டணியும் இல்லை என்றும் அதன் தேசிய லட்சியங்களை நிராகரிப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து, தெலங்கானா முதல்வர் தேசியக் கட்சியை நடத்துவதாக நம்பினால், அதைச் செய்யட்டும் என்று காந்தி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். "அவர் ஒரு உலகளாவிய கட்சியை நடத்துகிறார் என்று அவர் நம்பினால், அதுவும் நல்லது.

அவர் ஒரு சர்வதேச கட்சியை நடத்துகிறார் என்று கற்பனை செய்வது வரவேற்கத்தக்கது, அது அமெரிக்கா அல்லது சீனா அல்லது பிற நாடுகளில் தேர்தலில் போட்டியிடலாம், அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

இதுமட்டுமின்றி பிஆர்எஸ் எங்கு போட்டியிட விரும்பினாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. JD-U தலைவர் நிதிஷ் குமாருடன் BRS பேசினால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஊழல், அணுகுமுறை மற்றும் பிஆர்எஸ் அணுகுமுறையுடன் நாங்கள் நிற்க முடியாது” என்றார்.

இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் மாநில அரசு மற்றும் முதல் அமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

கடந்த மாதம் நடந்த ராய்ப்பூர் முழுக் கூட்டத்தில், காங்கிரஸ் "ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன்" இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தது மற்றும் பிஜேபியை எதிர்கொள்வதற்கான "சாத்தியமான மாற்றை" உருவாக்குவதற்கு விருப்பம் தெரிவித்தது.

காங்கிரஸ் அல்லாத குழுவை உருவாக்குவதில் ஆர்வமுள்ள கட்சிகளுக்கு அனுப்பியுள்ள செய்தியில், ஏதேனும் ஒரு மூன்றாவது சக்தி உருவாவது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

அதற்கு சில நாட்களுக்கு முன்பு, சில எதிர்க்கட்சிகளை குறிவைத்து, காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “பாஜகவுடன் சமரசம் செய்யாத ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ்தான்” என்றார்.

தொடர்ந்து, கார்கே அழைக்கும் கூட்டங்களில் பல்வேறு கட்சிகள் கலந்துகொண்டாலும் அவர்களின் நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே உள்ளன. நாங்கள் இரு முகம் கொண்டவர்கள் அல்ல. ஒரே முகம் கொண்டவர்கள்” என்றார்.

கடந்த வாரம் சென்னையில் நடந்த பேரணியில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினும், காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிரொலித்து, மூன்றாவது அணி யோசனையை நிராகரித்தார்.

டிஎம்சி, பிஆர்எஸ் மற்றும் இடதுசாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அனைத்து பிராந்திய கட்சிகளும் தேசிய அரசியலையும் சிந்திக்க வேண்டும். தேர்தல் வெற்றியின் ரகசியம் ஒற்றுமையே என்பதை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடமும் கூறி வருகிறேன்.

தொடர்ந்து, மூன்றாம் முன்னணியைச் சுற்றியுள்ள வாதங்களும் புறக்கணிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி திட்டங்களும் பாஜகவை தோற்கடிக்க உதவாது. கட்சிகள் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு ஒன்றுபட்டு பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மூன்றாவது அணி பற்றிய பேச்சு அர்த்தமற்றது” என்று கூறினார்.

இதற்கிடையில், கடிதத்தில் காங்கிரஸ் இல்லாதது குறித்த கேள்விக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் பத்திரிகையாளர் சந்திப்பில், “வரலாற்றை உற்றுப் பார்த்தால், காங்கிரஸ் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக நின்றதில்லை. தேசிய பிரச்சனைகளில் குரல் எழுப்பும் போதெல்லாம் காங்கிரஸ் காணாமல் போய்விடுகிறது. இன்றும் காணாமல் போய்விட்டனர்” என்றார்.

மேலும், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதும் தெரியும். எதிர்க்கட்சி கூட்டணி அமைந்தால் தலைமையேற்று நடத்துவேன் என்று தன்னைப் பெரிய அண்ணனாகக் கருதும் காங்கிரஸே எதிர்க் கட்சிகளை எட்டியிருக்க வேண்டும். காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி எங்கே? எனவும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment