Advertisment

ஜனாதிபதி தேர்தல்: மம்தா அணியில் இணையாத 4 கட்சிகள்; காரணம் என்ன?

ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, டி.ஆர்.எஸ், ஆம் ஆத்மி கட்சி பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மம்தா பானர்ஜி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்துள்ளன. ஆனால், அவர்கள் தங்கள் கருத்தை வெளியிடக் கூடாது என்று முடிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Presidential race, Presidential election, Opposition meet, Presidential polls, ஜனாதிபதி தேர்தல், மம்தா பானர்ஜி, டிஆர்எஸ், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பிஜேடி, Mamata banerjee, Mamata Oppn meet, TRS, BJD, YRS Congress, political Pulse, Tamil Indian express

ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, டி.ஆர்.எஸ், ஆம் ஆத்மி கட்சி பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மம்தா பானர்ஜி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்துள்ளன. ஆனால், அவர்கள் தங்கள் கருத்தை வெளியிடக் கூடாது என்று முடிவு செய்துள்ளனர்.

Advertisment

ஜனாதிபதி தேர்தல் போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் புதன்கிழமை மாலை கூடி, இன்னும் அறிவிக்கப்படாத தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளருக்கு எதிராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசித்தனர். இருப்பினும், மம்தா பானர்ஜி தலைமையிலான இந்த கூட்டத்தில் சில முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்திற்கு அழைக்கப்படாத நிலையில், ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) ஆகிய கட்சிகள் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், ஒடிசாவில் பிஜேடி கட்சியும், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியும் ஆட்சியில் உள்ளன.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், இந்த கட்சிகள் இல்லாதது எதிர்க்கட்சி முகாமில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்துகிறது. பாஜக ஜனாதிபதி தேர்தலில் எளிதில் வெற்றிபெறும் என்று கூறும்போது ஆளும் பாஜகவின் நம்பிக்கையை தெளிவுபடுத்துகிறது.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. பாஜகவை எதிர்த்துப் போராட விரும்பாத கட்சிகள் இந்த கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் அம்பலமாவார்கள் என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால், அது அவ்வளவு எளிதல்ல - அவர்களின் நிலைப்பாட்டைக் கூறும் பிற நிர்பந்தங்கள், முரண்பாடுகள் மற்றும் கணக்குகளும் உள்ளன.

பிஜு ஜனதா தளம்

நவீன் பட்நாயக்கின் பிஜேடி கட்சி இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் எந்த பிரதிநிதியையும் அனுப்ப மாட்டார் என்பது திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும்.

பிஜேடி, பிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து சம அளவில் விலகி இருக்கும் கொள்கையை வெளிப்படையாகப் அறிவிக்கும் அதே வேளையில், அரசாங்கத்துடன் முரண்படாத பாதையை பின்பற்றி வருகிறது. பிஜேடி நாடாளுமன்றத்தில் சில முக்கிய மசோதாக்களுக்கு ஆதரவளிக்கிறது. ஒடிசாவில் காலடி எடுத்து வைக்க பாஜக கடுமையாக முயற்சித்து வந்த போதிலும் - 2019 மக்களவைத் தேர்தலில் ஓரளவு வெற்றியை அவர்கள் ருசித்துள்ளனர்.

ஆனால் பிஜேடி மாநில அரசியலையும் தேசிய அரசியலையும் வித்தியாசமாக பார்க்க விரும்புகிறது.

பிஜேடி 2017 இல் ராம் நாத் கோவிந்தை ஆதரித்தது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாகவும், மத்திய பாஜக அரசாங்கத்திற்கு எதிராக மோதலில்லா அணுகுமுறையை அவரால் ஏற்க முடியும் என்றும், அதனுடன் சமநிலையைத் தொடர்ந்து கோர முடியும் என்றும் பிஜேடி தலைவர்கள் கூறுகிறார்கள்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிலை வேறு. அவர் மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்துள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக அவர் பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆந்திராவில் இப்போது காங்கிரஸ் கட்சி வலுவாக இல்லை. ஜெகனைப் பொறுத்தவரை, அவரது முக்கிய எதிரி தெலுங்கு தேசம் கட்சிதான். கடந்த காலங்களில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் இருந்தது. அவருடைய கட்சி மத்திய அரசை சமரசமாக அணுகினால், பாஜகவும், தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்று சேராமல் இருப்பதை உறுதி செய்யும். பாஜக பிரிந்து இருப்பதுதான் ஜெகனுக்கு ஏற்ற சூழ்நிலை.

நவீன் பட்நாயக் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி இருவரும் கடந்த பதினைந்து நாட்களில் பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியாக சந்தித்தனர். மேலும், இருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று பாஜக நம்புகிறது.

தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்)

சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ் விவகாரம் மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.

இத்தனைக்கும் பாஜக பக்கம் சாய்ந்து பாதுகாப்பாக இருந்தது. ஆனால், தெலங்கானாவில் தனக்கென ஒரு இடத்தை அமைத்துக் கொள்ள பாஜகவின் தீவிர முயற்சியால், அந்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவைப் போலல்லாமல், தெலங்கானாவில் காங்கிரஸ் பலமாகத் தொடர்கிறது. இதனால், காங்கிரஸ் இருக்கும் இடத்தை அவரால் பகிர்ந்து கொள்ள முடியாது. அதே சமயம், முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தேசிய அளவில் லட்சியங்கள் உள்ளன. அதற்காக அவர் சில பிராந்திய கட்சிகளுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும்.

எனவே அவரது கட்சி காங்கிரஸ் இருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் கலந்து கொள்ளாது. ஆனால், பாஜகவுக்கு எதிராக குற்றம்சாட்டுவதைத் தொடரும். எதிர்க்கட்சி கூட்டங்களில் இருந்து விலகி பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான பெரிய தேசிய ஆர்வம் உள்ளதாக கூறி எதிர்க்கட்சி வேட்பாளருக்கு அவர் ஆதரவளிப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்புகிறார்கள். டிஆர்எஸ் 2017ல் என்.டி.ஏ வேட்பாளரை ஆதரித்தது.

ஆம் ஆத்மி கட்சி

டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இதே போன்ற இக்கட்டான நிலை உள்ளது. அக்கட்சி தனக்கு ஒரு சுதந்திரமான அணுகுமுறை இருப்பதைக் குறிக்க எதிர்க்கட்சி குழுக்களின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், பா.ஜ.க.வை எதிர்த்தும் காங்கிரசுடன் மோதலிலும் உள்ளது. உண்மையில், அது பல மாநிலங்களில் காங்கிரஸின் இடத்தைப் பிடிக்க விரும்புகிறது. ஆனால், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மம்தா பானர்ஜியுடன் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்கிறார். மேலும், சில எதிர்க்கட்சிகளுடன் மறைமுகமாக தொடர்பில் இருப்பார். அதன் வேட்பாளருக்கு ஆதரவை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mamata Banerjee Tmc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment