Advertisment

24 மணி நேரத்தில் 3 லட்சம் கொரோனா டெஸ்ட் - அசுர வேகத்தில் இந்தியா

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்கள் சோதனை வேகத்தை அதிகரித்துள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
24 மணி நேரத்தில் 3 லட்சம் கொரோனா டெஸ்ட் - அசுர வேகத்தில் இந்தியா

அரசு ஆய்வகங்கள் 865, தனியார் ஆய்வகங்கள் 358 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1223 ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 3,20,161 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Advertisment

“கோவிட்-19-ஐ கருத்தில் கொண்டு பொது சுகாதாரம் மற்றும் சமுதாய நடவடிக்கைகளுக்கு ஏற்ப பொது சுகாதார அளவுகோலை சரி செய்தல்” என்ற தலைப்பிலான நெறிமுறை அறிவிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கோவிட்-19 தொற்றைக் கண்காணிப்பது மற்றும் பரிசோதிப்பது தொடர்பாக விளக்கும் போது, 10 லட்சம் மக்கள் தொகைக்கு நாளொன்றுக்கு 140 பரிசோதனைகளை, ஒரு நாடு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நம் நாட்டில் உள்ள 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், நாளொன்றுக்கு 10 லட்சம் மக்கள் தொகைக்கு 140க்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள எண்ணிக்கைக்கும் அதிகமான பரிசோதனைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

கொரோனா குணமடைந்தவருக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகள்: மத்திய அரசு ஆலோசனை

இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கோவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 865, தனியார் ஆய்வகங்கள் 358 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1223 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்கள் சோதனை வேகத்தை அதிகரித்துள்ளன.

· உடனடி RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 633 (அரசு: 391 + தனியார்: 242)

· TrueNat அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 491 (அரசு: 439 + தனியார்: 52)

· CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 99 (அரசு: 35 + தனியார்: 64)

இந்தியாவில் உள்ள ஆய்வகங்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு ஆய்வகமாக இருந்தது, மார்ச் மாதத்தில் 121 ஆக அதிகரித்து, இன்று 1223 ஆகக் கூடியுள்ளது.

முக்கிய கட்டத்தை எட்டிய இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் !

நாள்தோறும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,20,161 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தம் 1,24,12,664 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஜூலை 14, 2020 அன்று நிலவரப்படி ஒரு நாளில் மட்டும் 3.2 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment