Advertisment

ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் மாநிலங்கள்; மத்திய அரசுக்கு “எமெர்ஜென்சி” சிக்னல் அனுப்பிய டெல்லி

ஞாயிற்றுகிழமை அன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தொழிற்துறை தேவைக்கான ஆக்ஸிஜன் விநியோகம் ஏப்ரல் 22ம் தேதியில் இருந்து தடை செய்யப்பட்டதாக அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் மாநிலங்கள்; மத்திய அரசுக்கு “எமெர்ஜென்சி” சிக்னல் அனுப்பிய டெல்லி

Representational Image

Oxygen shortage hits states, Delhi sends an SOS to Centre: ‘Emergency’ : கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸிற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2, 61,500 என்ற எண்ணிக்கையை எட்டிய நிலையில் போதுமான பாதுகாக்கும் உபகரணங்கள் இல்லை என்று எச்சரிக்கை தந்த மாநிலங்களில் ஒன்றாக டெல்லியும் இணைந்துள்ளது. தேவைகளை கட்டுப்பாட்டில் வைப்போம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Advertisment

அரவிந்த் கெஜ்ரிவால், போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் பற்றாக்குறையை சந்தித்து வருகிறோம் என்று கூறியுள்ளார். அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு டெல்லி அளவுக்கு அதிகமான சப்ளை தேவை என்பதை உறுதி செய்துள்ளது. விநியோகத்தை அதிகரிப்பதற்கு பதிலாக கிடைக்கவேண்டிய அளவுகளை குறைத்து மற்ற மாநிலங்களுக்கு எங்களுடைய பங்குகள் சென்று கொண்டுள்ளது என்று அவர் ட்வீட் பதிவிட்டார்.

ஆக்ஸிஜன் எமெர்ஜென்ஸி என்ற நிலையை எட்டிவிட்டது என்று கெஜ்ரிவால் ட்வீட்டில் தெரிவித்திருந்தார். மகராஷ்ட்ரா முதல் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை பெற முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய ட்வீட் வெளியானது.

அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனித்தனியே கடிதத்தில் தங்களின் தேவைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். ஏ.என்.ஐ.யிடம் பேசிய கோயல், ஆக்சிஜன் தேவையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று கூறினார். விநியோக நிர்வாகத்தை போன்றே தேவை நிர்வாகமும் மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

publive-image

கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பது மாநில அரசுகளின் கடமை. அவர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், நாங்கள் மாநில அரசுகளுடன் இருக்கின்றோம் ஆனால் தேவை மேலாண்மையை அவர்கள் தான் நிர்வகிக்க வேண்டும் என்றும் கோயல் குறிப்பிட்டார். மேலும் சில மாநிலங்களில் ஆக்ஸிஜன் தேவை ஏற்படாத நபர்களுக்கும் ஆக்ஸிஜன்களை வழங்கி அதனை விரயம் செய்கிறார்கள் என்றும், இது போன்ற விவகாரங்களில் அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. மகாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட தேவையை தொடர்ந்து நிறைய ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளையும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்து செல்ல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் இயக்க முடிவு செய்துள்ளது.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (Liquid Medical Oxygen (LMO) டேங்கர்களை எடுத்து செல்ல ரயில்வே துறையால் உதவ முடியுமா என்று மத்திய பிரதேச மற்றும் மகாராஷ்ட்ர அரசு கேட்டுக் கொண்டது. அதனை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் எல்.எம்.ஓவை எடுத்து செல்வதற்கு தேவையான தொழில்நுட்ப சாத்தியங்களை ஆராய்ந்தது என்று பதில் அளித்துள்ளது. திங்கள் கிழமைக்குள் 10 டேங்கர்கள் தேவை என்பதை உறுதி செய்தது மகாராஷ்ட்ர அரசு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ஞாயிற்றுகிழமை அன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தொழிற்துறை தேவைக்கான ஆக்ஸிஜன் விநியோகம் ஏப்ரல் 22ம் தேதியில் இருந்து தடை செய்யப்பட்டதாக அறிவித்தார். தொழிற்துறை வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வணிகத்துறை, தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தேவைகள் ஏற்கனவே 60% நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளது.

தடுப்பு மருந்துகள் வைக்கும் குப்பிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், பார்மசூட்டிகள்,ம் பெட்ரோலியம் ரிஃபைனரி, எஃகு தொழிற்சாலை, அணு சக்தி துறைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்கள், உணவு மற்றும் நீ சுத்தகரிப்பு நிலையங்கள் போன்றவற்றிற்கான விநியோகம் தொடர்ந்து நடைபெறும் என்று பூஷன் கூறினார்.

பிதமருக்கு கடிதம் எழுதிய அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உங்களின் உதவி தேவை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மிகவும் அவதி அடைந்து வருகிறோம். இதனை உடனடியாக நிர்வர்த்தி செய்து தர வேண்டும் என்று குறிப்பிட்டார். இதே விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமும் பேசியுள்ளார் கெஜ்ரிவால்.

மேலும் படிக்க : வாரத்தில் ஒரு நாள் டாஸ்மாக் அடைப்பு: தமிழகத்தில் எதற்கு அனுமதி? எதற்கு அனுமதி இல்லை?

கோயலுக்கு எழுதுகையில், கெஜ்ரிவால் தடையின்றி தினசரி 700 மெட்ரிக் டன் சப்ளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், மேலும் டெல்லி மருத்துவமனைகளுக்கு ஒரு பெரிய ஆக்ஸிஜன் சப்ளையரான எம் / எஸ் ஐனாக்ஸின் வெளியீடு மற்ற மாநிலங்களுக்கு "திருப்பி விடப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

"இந்த முக்கியமான கட்டத்தில், இப்போது டெல்லிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய சப்ளையர்களுடன் மருத்துவமனைகள் ஒப்பந்த ஏற்பாடுகளில் ஈடுபட முடியாது. இந்த இடையூறு ஏற்கனவே பெரிய மருத்துவமனைகளில் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தத் துவங்கிவிட்டது, ”என்றும் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட ரீதியில் கோயல் தலையீடு தேவை என்றும் கூறினார்.

டெல்லி கடந்த இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 50,000 கோவிட் வழக்குகளை பதிவு செய்துள்ளது, இது சுகாதார உள்கட்டமைப்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று துணை நிலை ஆளுநருடன் நடத்தும் கூட்டத்தில் உடனான மறுஆய்வுக் கூட்டத்தில் டெல்லி அரசு சில நாட்களுக்கு இயக்கம் மீதான தடைகளை விரிவாக்குவது குறித்து விவாதிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது. 6.70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அது வெறும் 4.30 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தினமும் ஆக்ஸிஜன் தேவையானது 1200 முதல் 1300 மெட்ரிக் டன்னாக உள்ளது. அதிக பட்ச உற்பத்தி அளவும் 1250 மெட்ரிக்காக உள்ளது. இந்த மாநிலம் கூடுதலாக 150 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை குஜராத்தில் இருந்தும், 50 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை சத்தீஸ்கரில் இருந்தும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமையன்று, ஆறு மும்பை மருத்துவமனைகளில் இருந்து 168 நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை அன்று மகாராஷ்ட்ராவில் மட்டும் 68,631 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் பதிவான அதிகபட்ச வழக்குகள் இதுவாகும். இதற்கிடையில், ஏப்ரல் இறுதிக்குள் 59 பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (பிஎஸ்ஏ) ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்படும் என்று மத்திய அரசு கூறியது - பிஎஸ்ஏ அலகுகள் ஒரு கலவையிலிருந்து சில வாயுக்களைப் பிரிக்கும் திறனைக் கொண்டுள்ளன.

ஒரு குறுகிய கால நடவடிக்கையாக, முறையே ஏப்ரல் 20, ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 30 வரை அவர்களின் திட்டமிடப்பட்ட கோரிக்கையை பூர்த்தி செய்வதற்காக 12 "மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு" 4,880 மெட்ரிக், 5,619 மெட்ரிக் மற்றும் 6,593 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் எஃகு ஆலைகளில் இருந்து பங்கு கிடைப்பதும் அதிகரித்துள்ளது, சிபிஎஸ்யு ஆலைகளில் இருந்து 14,000 மெட்ரிக் டன் வருகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. உதாரணமாக, மகாராஷ்டிரா இப்போது தினசரி அடிப்படையில் உபரி மருத்துவ ஆக்ஸிஜனை டோல்வியில் இருந்தும் (மகாராஷ்டிரா), ஸ்டீலில் இருந்து பிலாய் (சத்தீஸ்கர்) மற்றும் பெல்லாரியில் (கர்நாடகா) ஜே.எஸ்.டபிள்யூ போன்ற எஃகு ஆலைகளிலிருந்தும் பெற்று பயன்படுத்துகிறது.

பிலாய் ஆலையில் இருந்து ஆக்ஸிஜன் வழங்கலுக்கு மத்தியப் பிரதேசம் துணைபுரிகிறது. ஆனால் பல மாநிலங்களின் அறிக்கைகள் அங்கிருக்கும் சவால்களை விளக்குகின்றன. உத்தரபிரதேசத்தில், அடுத்த 15 நாட்களில் நிலைமையையும், ஆக்ஸிஜனைப் பயன்படுத்துவதையும் கண்காணிக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் சுரேஷ் கண்ணாவிடம் கேட்டார். மருத்துவமனைகளுக்கு குறைந்தபட்சம் 36 மணிநேர சப்ளை பேக்-அப் பராமரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக மருத்துவ கல்வி பொது இயக்குநர், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் செயல்படாமல் இருக்கும் ஐ.சி.யூக்களை கொண்ட மருத்துவ நிறுவனங்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 10 ஆக்ஸிஜன் ப்ளாண்ட்டுகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் 20 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆலை லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. ஜார்கண்ட்டில் மொத்தம் 3,802 ஆக்ஸிஜன் சப்ளையுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. அதில் 2,024 படுக்கைகள் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டது.

பஞ்சாபில் உள்ள லூதியானா, ஜலந்தர் அரசு மருத்துவமனைகள் மற்றும் குரு கோபிந்த்நாத் சிங் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அவர்களுக்கென்று சொந்தமாக ஆக்ஸிஜன் ஆலைகளை கொண்டுள்ளன. இதர மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகம் செய்து வருகிறது. இதுவரை எங்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. ஆனால் வருகின்ற காலத்தில் ஏற்படலாம் என்று அம்மாநில தலைமை சுகாதார செயலாளர் ஹுசன் லால் கூறியுள்ளார்.

கர்நாடகா, கேரளா, குஜராத், ஒடிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் போதுமான அளவு விநியோகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை அன்ன்று 292 ஐ.சி.யு வெண்ட்டிலேட்டர்கள் கொண்ட படுக்கைகளில் 96% நிரம்பிவிட்டது. அதே போன்று ஆக்ஸிஜன் வசதி கொண்ட 2,673 எச்.டி.யு படுக்கைகளில் 84%மும் , 17 அரசு மற்றும் 69 தனியார் மருத்துவமனைகளில் உள்ள 342 ஐ.சி.யு படுக்கைகளில் 95%மும் நிரம்பிவிட்டது. (With ENS inputs from Maharashtra, UP, Karnataka, Kerala, Punjab, Gujarat, Jharkhand, Odisha, Goa and J&K)

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment