Advertisment

ப. சிதம்பரத்திற்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சியினர்... பாஜக அரசுக்கு ட்விட்டரில் கண்டனம்

சி.பி.ஐ தரப்பு நியாயங்களை கேட்காமல் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என சி.பி.ஐ தரப்பு கேவியட் தாக்கல் செய்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
P Chidambaram INX Media Case CBI ED Probe

P Chidambaram INX Media Case CBI ED Probe

P Chidambaram INX Media Case CBI ED Probe : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருகின்றன. இவ்வழக்குகளில் இருந்து முன் ஜாமீன் மற்றும் கைதுக்கு இடைக்கால தடை கோரிய மனுவை நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதன் பின்பு அவரை கைது செய்ய சி.பி.ஐ அதிகாரிகள் 4 முறை முயற்சி செய்துள்ளனர். அவருடைய டெல்லி வீட்டில் அவர் இல்லை. இந்நிலையில் இவ்வழக்கு இன்று காலை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, தலைமை நீதிபதி அடங்கிய அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கை தொடர்ந்து விசாரணை செய்வதால் தற்போது அவசர வழக்காக இவ்வழக்கை விசாரிக்க முடியாது என்றும், அருண் மிஸ்ரா அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் அமலாக்கதுறை அனைத்து விமான நிலையங்களிலும் சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் பிறப்பித்துள்ளது. சி.பி.ஐ தரப்பு நியாயங்களை கேட்காமல் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என சி.பி.ஐ தரப்பு கேவியட் மனு வழங்கியுள்ளது. இந்நிலையில் மோடி அரசின் இந்த செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் இதுவரை நடைபெற்றது என்ன?

ப்ரியங்கா காந்தி ட்வீட்

இந்தியாவின் நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக பணியாற்றிய ஒருவர், மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ராஜ்யசபா உறுப்பினர், இந்நாட்டிற்காக பல ஆண்டுகளாக பணியாற்றியவர். ஆனால் ஆளும் அரசுக்கு எதிராக உண்மையை பேசியதற்காக இப்படி நடத்தப்படுகிறார் என்று ட்வீட் செய்து, காங்கிரஸ் தரப்பில் இருந்து முதல் குரலாக தன்னுடைய ஆதரவை பதிவு செய்தார் பிரியங்கா காந்தி.

காங்கிரஸ் ட்வீட்

ஒரு அரசு, உண்மை பேசும் குடிமக்களை துன்புறுத்துவது அவ்வரசின் கோழை தனத்தையே காட்டுகிறது. இந்நாட்டிற்காக பணியாற்றிய ஒரு மரியாதைக்குரிய தலைவருடனும், உண்மையுடனும் நாங்கள் என்றும் துணை நிற்போம் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

அதிகார துஷ்ப்ரயோகம் செய்கிறது மோடி அரசு - ராகுல் காந்தி

மோடி அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் ஊடகத்தினை பயன்படுத்தி சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்குகிறது என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். இதற்கான கண்டன குரல்களை பதிவு செய்துள்ளார் ராகுல்.

காங்கிரஸ் தலைவர் அஷ்வானி குமார்

சிதம்பரம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் நடந்து கொண்ட விதமே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க போதுமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சய் நிருப்பம்

சிதம்பரத்திற்கு லுக்-அவுட் நோட்டீஸா?

இது கொஞ்சம் மிகவும் அதிகமானதாக தோன்றுகிறது. நாட்டின் மிக முக்கியமான அரசியல்வாதி, நாட்டின் முன்னாள் உள்துறை மட்டும் நிதி அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஆனால் அவரை ஒரு திருடன் போல் நடத்துகின்றார்கள். இது மிகவும் மோசம் என்று ட்வீட் செய்துள்ளார்.

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment