'பத்மாவத்' ரிலீஸ் : நாட்டின் பல இடங்களில் வலுக்கும் எதிர்ப்பு போராட்டம்!

பத்மாவத் பட ரிலீசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கே

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவத்’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

ராஜ்புத் வம்சத்து அரசியான ராணி பத்மினியின் கதை இது. ராணி பத்மினியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. தீபிகா படுகோனே தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே, கடந்த மாதம் ரிலீஸாக வேண்டிய படம், பல கட்டப் பிரச்சனைகளுக்கு பிறகு நாளை (ஜன.25) வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், பத்மாவத் பட ரிலீசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கே,

காலை 11.15 – அகமதாபாத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

காலை 11.10 – அகமதாபாத்தில் பத்மாவத் படம் திரையிடப்பட இருந்த மால் ஒன்றில் தீ வைக்கப்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், மிகப்பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

காலை 11.00 – பத்மாவத் திரைப்படத்தின் ஐஇ தமிழ் விமர்சனம் இதோ

காலை 10.30 – பத்மாவத் படத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றி, பத்மாவத் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் ராஜ்புத் இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

காலை 10.00 – பத்மாவத் திரைப்பட ரிலீசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டம் நடைபெற்று வருவதால், குர்கானில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

×Close
×Close