இந்தியா செய்திகள்

8 வயதில் திருமணமான பெண்: கடும் போராட்டத்திற்கு பின் ’நீட்’ தேர்வில் சாதனை

ராஜஸ்தானில் 8 வயதில் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண், தற்போது கடும் போராட்டங்களுக்கு மத்தியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ். படிக்க இருக்கிறார். ராஜஸ்தானை சேர்ந்த 20 வயது பெண் ரூபா என்பவருக்கு 3-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துவிட்டனர்....

12 சிங்கங்களுக்கு மத்தியில் குழந்தை பெற்ற பெண்

குஜராத்தில் உள்ள ’கிர்’ காட்டின் அருகே ஆம்புலன்ஸில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதுல ஒன்னும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லன்னு சொல்ல வர்றீங்களா? ஆனால், அது விஷயமில்லை. அந்த ஆம்புலன்ஸை சுற்றியிருந்த 12 சிங்கங்களுக்கு மத்தியில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் குழந்தை பிறந்ததுதான் ஆச்சரியம். குஜராத்தை சேர்ந்த 32 வயது...

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கொலை: பசு பாதுகாவலர்கள், பஜரங் தள் அமைப்பினருக்கு தொடர்பு

ஜார்க்கண்டில் வாகனத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பசு பாதுகாவலர்கள் சமிதி மற்றும் பஜரங் தள் அமைப்பினருக்கு தொடர்ப்பிருப்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாடு, எருது உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்ததையடுத்து, மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் பசு பாதுகாவலர்கள்...

நாடு முழுவதும் அமலானது ஜி.எஸ்.டி!

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மணியடித்து ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை அமல்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் முதல் ரத்தன் டாடா வரை பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து...

Meira Mumar

ஐனாதிபதி தேர்தல்: காந்தியவாத கொள்கையின்படியே இந்த யுத்தம் : மீரா குமார்

காந்தியின் கொள்ளையின்படியே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மீராகுமார் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார், இன்று அகமதாபாத்தில் உள்ள சபர்பதி ஆசிரமத்தில் இருந்து, ஆதரவு கோரி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மீராகுமார் சமர்பதி ஆசரமத்தில் சுமார் 40 நிமிடங்கள்...

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தங்கநகைகள் விலை உயருமா?

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட 3% வரியால் தங்க நகைகளின் விலை நாளை முதல் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தங்கத்தின் மீது 3% ஜி.எஸ்.டி....

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஜார்க்கண்டில் ஒருவர் படுகொலை

”’பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை காந்தி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்” என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், ஜார்க்கண்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக மாடு, எருது உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்வதற்கு மத்திய பா.ஜ.க....

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் நாளை தமிழகம் வருகை

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வரவுள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல்...

நடிகர் திலீப்பை 13 மணிநேரம் வறுத்தெடுத்த காவல் துறை

பிரபல மலையாள திரைப்பட நடிகை பாவனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, நடிகர் திலீப்பிடம் புதன்கிழமை 13 மணிநேரம் கேரள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தன்னுடைய காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும்,...

பானை போல வயிறு வீங்கி அவதிப்படும் சிறுவன்! அறுவை சிகிச்சை செய்தால் தான் வாழ்க்கை!

அஸ்ஸாம் மாநிலம் பர்பெட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் சலிம் உத்-தின், ஷமீலா தம்பந்தியினர். அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். தற்போது 7 வயதாகும் அந்த சிறுவனுக்குத் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஷாகனுர் அலம் என்ற அந்த சிறுவனின் கைகள்,...

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X