Advertisment

‘தரம் சன்சாத்’ நிகழ்ச்சியில் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன்!

ஹரித்வாரில் நடைபெற்ற ’தரம் சன்சாத்’ நிகழ்வில், காஜியாபாத்தில் உள்ள தஸ்னா கோவிலின் பூசாரியான சர்ச்சைக்குரிய யதி நரசிங்கானந்த், "முஸ்லீம்களுக்கு எதிரான போருக்கு" அழைப்பு விடுத்து "இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

author-image
WebDesk
New Update
India Pakistan

Pakistan summons Indian embassy official for hate speech on Dharam Sansad event

ஹரித்வாரில் நடைபெற்ற ‘தரம் சன்சத்’ நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்குப் பிறகு அசாதாரணமான ஒரு தலையீட்டில், முஸ்லிம்களைக் குறிவைத்து வன்முறை மற்றும் படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் தொடர்ச்சியான வெறுப்புப் பேச்சுகளைக் கண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை, இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் ஆணையத்தின், மூத்த இந்திய தூதரக அதிகாரிக்கு அழைப்பு விடுத்து, அவர்களின் "தீவிரமான கவலைகளை" தெரிவிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார்.

Advertisment

இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்று, இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு இந்திய பொறுப்பாளர் வரவழைக்கப்பட்டு, இந்திய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய இந்துத்துவா ஆதரவாளர்களால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட வெளிப்படையான அழைப்புகள் குறித்து, பாகிஸ்தான் அரசாங்கத்தின் தீவிர கவலைகளை இந்திய அரசுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்தியாவின் பொறுப்பாளர் எம் சுரேஷ் குமாருக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் திங்கள்கிழமை மதியம் சம்மன் அனுப்பியுள்ளனர்.

வெளியுறவு அமைச்சகங்களின் விமர்சன அறிக்கைகள் பொதுவானவை என்றாலும், இந்தியாவில் சிறுபான்மையினர் தொடர்பான சம்பவங்கள் குறித்து இந்திய தூதர்களை அழைப்பது அரிது.

உண்மையில், பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து கடந்த காலங்களில் இந்தியாதான் பல விமர்சன அறிக்கைகளை வெளியிட்டது மற்றும் இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதர்களை இந்தியாதான் வழக்கமாக வரவழைத்தது. சமீபத்தில் ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் கிராமப்புற பஞ்சாப் பகுதியில் உள்ள ரஹீம் யார் கான் பகுதியில் உள்ள இந்து கோவில் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 17 முதல் 19 வரை நடைபெற்ற ஹரித்வார் நிகழ்ச்சியில், உ.பி.யில் பல எஃப்.ஐ.ஆர்களை எதிர்கொண்டுள்ள காசியாபாத்தில் உள்ள தஸ்னா கோவிலின் பூசாரியான சர்ச்சைக்குரிய யதி நரசிங்கானந்த், "முஸ்லீம்களுக்கு எதிரான போருக்கு" அழைப்பு விடுத்து, "இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.  2029ல் முஸ்லீம் பிரதமராக கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் டெல்லி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாடு தழுவிய சீற்றத்தைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்து மதத்திற்கு மாறிய பிறகு ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்ற பெயரை ஏற்றுக்கொண்ட வசீம் ரிஸ்வியுடன் சுவாமி தரம்தாஸ் மற்றும் சாத்வி அன்னபூர்ணா ஆகியோர் மீது கடந்த வியாழன் அன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. IPC இன் பிரிவு 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இனச் சுத்திகரிப்புக்கு அழைப்பு விடுத்தவர்கள் மீது,  எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை அல்லது அல்லது இந்திய அரசாங்கம் இதுவரை கண்டிக்கவில்லை அல்லது அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது.

"பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் சிவில் சமூகத்தால் கடுமையான கவலையுடன்"  பதிவான வெறுப்பு பேச்சுக்கள் பார்க்கப்படுகின்றன என்று இந்திய தரப்புக்கு தெரிவிக்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கதைகள்... வழக்கமாகிவிட்டன" என்று கூறிய பாகிஸ்தான், இந்த வெறுப்புப் பேச்சுகளை இந்தியா விசாரித்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment