போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்… ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பணி தீவிரம்…

5 இந்திய ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப். கார்னல் தேவேந்தர ஆனந்த் கூறியுள்ளார்.

Pakistan violates Indian airspace
Pakistan violates Indian airspace

Pakistan violates Indian airspace : நேற்று பாலகோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நவ்ஷேரா பகுதியில் ராணுவ தாக்குதலை நடத்தியுள்ளது.

ராஜௌரி மற்றும் பூஞ்ச் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு இந்திய விமானப்படையும் தாக்குதல் நடத்தியது.

Pakistan violates Indian airspace

ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லெஹ் பகுதியில் அமைந்திருக்கும் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. அவசரகால நடவடிக்கைகளாக இது மேற்கொள்ளப்பட்டது என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா கூறியுள்ளது. ஆனால் புத்காம் பகுதியில் இந்திய விமானம் இன்று காலை விபத்தில் சிக்கியதின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று மாலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவம், எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் காஷ்மீர் குடியிருப்புப் பகுதிகளில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன. இன்று நடைபெற இருந்த அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரஜௌரி பகுதியில் 120 எம்.எம். மோர்டர்கள் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. க்ருஷ்ணா கேட், பாலகோட், கர்மாரா, மான்கோட்,. தர்கொண்டி, பூஞ்ச், பாபா கோரி, கல்சியான், லாம், மற்றும் ஹாங்கர் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் போர் விமானங்கள் வெடி குண்டுகளை குடியிருப்புப் பகுதியில் வீசியதில் இரண்டு வீடுகள் சேதாரமடைந்துள்ளன.

எதிர்தாக்குதலில் ஈடுபட்ட இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஐந்து ராணுவ போஸ்ட்களை தாக்கி அழித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப். கார்னல் தேவேந்தர ஆனந்த் இது குறித்து கூறும் போது, எதிர்தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், 5 இந்திய ராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : இது தொடர்பான லைவ் அப்டேட்டுகளை படிக்க 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pakistan violates indian airspace in rajouri

Next Story
Pakistan Violates Indian Airspace: விமானப்படை வீரரின் ‘தாக்கப்பட்ட முகம்’! இந்தியா கடும் கண்டனம்!Count of dead at Balakot: Within BJP, some de-escalation
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com