Advertisment

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலைக்கான தேவை அதிகரிப்பு

சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலைக்கான தேவை அதிகரிப்பு

மத்திய அரசும் மாநில அரசுகளும் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் திறன்சாரா வேலைக்கான தேவை 2021-22 இல் அதிகமாகவே இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்ட போதிலும் தேவை அதிகரித்துள்ளது.

Advertisment

மார்ச் 31 நிலவரப்படி, 2021-22ல் நாடு முழுவதும் உள்ள 7.2 கோடி குடும்பங்கள் 10.55 கோடி மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தினர்.

இத்திட்டம் தொடங்கப்பட்ட 2006 ஆம் ஆண்டில் இருந்து இது இரண்டாவது அதிகபட்சமாகும். கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் ஆண்டான 2020-21 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 7.55 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 11.19 கோடி பேர் இந்தத் திட்டத்தால் பலன் அடைந்தனர்.

2019-20ல் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 5.48 கோடியைத் தொட்டது. முந்தைய ஆண்டுகளில் இருந்து இது மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும். 2018-19ல் 5.27 கோடி; 2017-18ல் 5.12 கோடியாக அது இருந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமப்புற குடும்பமும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உரிமையுள்ளது.

தொற்றுநோயைத் தொடர்ந்து தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்தோருக்கு இந்தத் திட்டம் பாதுகாப்பானதாக இருந்தது.

தரவுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 358.67 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2020-21 இல் 389.09 கோடி வேலை நாட்களாக இருந்தது. 2019-20 இல் 265.35 கோடி வேலை நாட்களாக இருந்தது.

2021-22ல் உருவாக்கப்பட்ட மொத்த 358.67 கோடி வேலை நாட்களில் 54.69 சதவீதம் பெண்கள் செய்தது. 2021-22ல் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட சராசரி வேலை நாட்கள் 49.7 நாட்கள் ஆகும். 2020-21ல் 51.52 நாட்களாக அது இருந்தது; 2019-20ல் 48.4 நாட்களாக இருந்தது. 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தரவுகள் உள்ளன.

இதையும் படியுங்கள்: உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை யாரும் எதிர்க்க முடியாது: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 77.5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பைப் பெற்றது. 2020-21ல் இது 94.34 லட்சமாக இருந்தது. அதேசமயம் பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள், சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் குடும்பங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. மகாராஷ்டிராவில், 2020-21ல் 16.84 லட்சமாக இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 2021-22ல் 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் 2020-21இல் 30.15 லட்சத்தில் இருந்து 2021-22ல் 33.91 லட்சமாக அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment