Advertisment

காவல் அதிகாரி மூலம் ஹிஸ்புலுக்கு ரூ. 10 லட்சம் கொடுத்த ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதி

இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞரிடம் பேச முற்பட்ட போது பதில் கூற மறுத்துவிட்டார்.

author-image
WebDesk
New Update
PDP’s Waheed Para paid Rs 10 lakh to Hizbul via Davinder Singh

Deeptiman Tiwary

Advertisment

ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியின் (Peoples Democratic Party) தலைவர் வஹீத் உர் ரெஹ்மான் பாரா 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஹிஸ்புஸ் முஜாஹீதீன் அமைப்பின் ஆதரவை உறுதி செய்வதற்காக ரூ. 10 லட்சத்தை அவர்களுக்கு வழங்கியதாக தேசிய விசாரணை முகமை நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விசாரணை நிறுவனமான என்.ஐ.ஏ. பாராவை நவம்பர் மாதம், டி.டி.சி. தேர்தல்கள் ஜம்மு காஷ்மீரில் நடைபெறுவதற்கு முன்பு, காவல்துறை அதிகாரி திக்விந்தர் சிங்கிற்கும் ஹிஸ்புல்லுக்கும் இடையே இருக்கும் தொடர்பில் சம்பந்தப்பட்டதாக கூறி கைது செய்தது.

டி.டி.சி. தேர்தலில் தன்னுடைய தொகுதியான புல்வாமாவில் வெற்றி பெற்ற பாரா தற்போது சிறையில் உள்ளார். பாராவின் வழக்கறிஞர் டி.என். ரெய்னாவை என்.ஐ.ஏவின் குற்றசாட்டு குறித்து தொடர்பு கொண்ட போது அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், அரசியல் காரணங்களுக்காக அவர் கட்டம் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஹிஸ்புலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறினார். ரூ. 10 லட்சம் பணத்ஹ்டை ஹிஸ்புலின் உறுப்பினர் சையத் முஸ்தக் எனப்படும் நவீத் பாபுவிற்கு தவீந்தர் சிங் மூலம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்த பணத்தை தவீந்தர் சிங் தான் பணியாற்றிக் கொண்டிருந்த ஜம்மு விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டதாகவும் பின்னர் அந்த பணத்தை டிபன் பாக்ஸில் வைத்து எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய ஹூண்டாய் ஐ10 காரில் சோபியன் மாவட்டத்தின் ஹிஸ்புல் தளபதியாக இருந்த நவீத் மற்றும் ரஃபி அகமது தாருடன் பயணித்துக் கொண்டிருந்த தவீந்தர் ஜனவரி 11, 2020 கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு என்.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு தன்வீர் அகமது வானி, வழக்கறிஞர் இர்ஃபான் ஷாஃபி மிர், மற்றும் நவீதின் சகோதரர் சயத் இர்பான் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காகவும், ஹிஸ்புல் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்ததிற்காகவும் தவீந்தர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜம்முவில் தவீந்தர் ஏற்பாடு செய்த மறைவிடத்தில் நவீத் பாபு மற்றும் மிர் ஆகியோர் 2019ம் ஆண்டு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாராவிடம் நிதி உதவிகள் செய்யுமாறு மிர் அலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

மிர் மற்றும் பாரா பரஸ்பரம் நன்கு அறிந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் 5 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் தேவை என்று பாராவிடம் மிர் கூறியுளார். தேவையில்லாமல் தேர்தல் சமயத்தில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 10 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தலின் போது ஹிஸ்புல் ஆதரவு வேண்டும் என்று பாராவும் கேட்டுக் கொண்டதாக என்.ஐ. ஏ. தரப்பு கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை ஒருங்கிணைக்கும் பணி 2019 பிப்ரவரி 18 அன்று தனது தொலைபேசியில் பாராவை அழைத்த தவிந்தர் சிங்குக்கு வழங்கப்பட்டது என்று என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த காலகட்டத்தில் பாராவிடமிருந்து அவருக்கு அழைப்புகளும் வந்தன.

அதே ஆண்டு மார்ச் மாதம் பாரா ரூ. 10 லட்சத்தை ஒரு நபரிடம் கொடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட சிங், தன்னுடைய உதவியாளரை அழைத்து அந்த பணத்தை டிஃபன் பாக்ஸில் வைக்க உத்தரவிட்டுள்ளார். பிறகு இந்த பணம் நவீத் பாபுவுக்கு வழங்கப்பட்டது.

விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள், தவீந்தர் சிங்கிடம் தரப்பட்டதாக கூறப்படும் பணத்தை நேரில் பார்த்ததாக மிர் மற்றும் நவீத் கூறியுள்ள ஒப்புதல் வாக்குமூலங்களியும், சாட்சி பதிவு செய்யப்பட்ட அறிக்கைகளையும் மேற்கோள்காட்டியுள்ளனர். பாரா தன்னுடைய ஜாமீன் மனுவில், என்.ஐ.ஏ.விடம் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களை தவிர வேறேதும் இல்லை. ஆனால் அதனை சாட்சியங்களாக கூற முடியாது. அவரின் விண்ணப்பத்தில் மேலும் பாரா விசாரணைக்காகவே ஜூன் மாதம் அழைக்கப்பட்டார் என்றும், விசாரணையில் அவருடைய பதில்கள் திருப்திகரமாக இருந்ததால் தான் அதிகாரிகள் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டி.டி.சி தேர்தல்கள் அறிவிப்புகள் மட்டுமே குறிப்பாக பி.டி.பி.யில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர் போட்டியிருகிறார் என்ற காரணம் மட்டுமே. என்.ஐ.ஏ.., பி.டி.பி.ஐ பழிவாங்க ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்படுள்ளது. மேலும் சுமத்தபட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பது என்.ஐ.ஏவிற்கே தெரியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராவுக்கு எதிரான விசாரணை முடிவடையாத காரணத்தால் ஜூன் மாதம் அவர் கைது செய்யப்படவில்லை என்ன்று என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்தன. தவீந்தர் மற்றும் இதர நபர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஹிஸ்புல்லுடன் நன்கு இணைந்திருப்பதாக கூறியுள்ளது. மேலும் அவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment