Advertisment

10 நிமிட டெலிவரி காலக்கெடு; அபராதம், ஊதிய குறைப்பால் அவதிப்படும் ஊழியர்கள்

10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்யாவிட்டால் அபராதம், ஊதிய குறைப்பு; மறுபுறும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு; ஆபத்தில் டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கை

author-image
WebDesk
New Update
10 நிமிட டெலிவரி காலக்கெடு; அபராதம், ஊதிய குறைப்பால் அவதிப்படும் ஊழியர்கள்

Soumyarendra Barik

Advertisment

Penalties for delays, cuts in weekly pay: Life gets riskier for 10-minute delivery executives: விரைவான வர்த்தக தொடக்க நிறுவனங்களின் முக்கிய மையமாக வேகம் இருப்பதால் சாலைப் பாதுகாப்பைப் பற்றிய கவலைகள் அதிகரித்து வந்தாலும், Blinkit மற்றும் Zepto போன்ற நிறுவனங்கள் புதிய ஊக்கத்தொகை அடிப்படையிலான ஊதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன, இதில் சில சந்தர்ப்பங்களில் தாமதமாக டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

புதிய விதிமுறைகள் ஆர்டர்களுடன் இன்னும் வேகமாக சவாரி செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், மேலும் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், தங்களையும் மற்றவர்களையும் ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் டெலிவரி ஊழியர்கள் கூறுகிறார்கள்.

மளிகைப் பொருட்கள், பழங்கள், ஐஸ்கிரீம், காய்கறிகள், பால் மற்றும் சிற்றுண்டிகளை 10 நிமிடங்களில் டெலிவரி செய்வதாக உறுதியளிக்கும் Zepto நிறுவனம், டெலிவரி ஊழியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டெலிவரி செய்யத் தவறினால் அது "மீறலாக" கருதுகிறது. மேலும் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகும் டெலிவரி செய்யத் தவறினால், இது ஒரு "கூடுதல் மீறல்" ஆகும், அதற்காக டெலிவரி ஊழியர்கள் நிறுவனத்தால் தண்டிக்கப்படுகிறார்கள்.

மேலும், மார்ச் மாதம் Zepto நிறுவனம் ஊழியர்களின் குறைந்தபட்ச வார ஊதியத்தை 20 சதவீதம் குறைத்துள்ளது என டெலிவரி ஊழியர்கள் கூறுகின்றனர். முன்னதாக, வாரத்தில் ஏழு நாட்களும் அவர்கள் செயலியில் உள்நுழைந்திருந்தால், நிறுவனம் அவர்களுக்கு வாரத்திற்கு ரூ. 3,500 தருவதாக உத்தரவாதம் அளித்தது; இது, தற்போது 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக டெலிவரி ஊழியர்கள் தெரிவித்தனர். "எனவே நான் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுப்பு எடுக்க முடிவு செய்தால், வாராந்திர குறைந்தபட்ச உத்தரவாத ஊதியம் எனக்கு வழங்கப்படாது," என்று ஒரு Zepto டெலிவரி நிர்வாகி பெயர் வெளியிட விரும்பாத நிலையில் கூறினார்.

Zepto CEO மற்றும் இணை நிறுவனர் Aadit Palicha கூறுகையில், அனைத்து தாமதமான டெலிவரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படாது. டெலிவரி ரைடர்கள் "மோசடியில்" ஈடுபடும்போது மட்டுமே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றன, என்று அவர் தி சண்டே எக்ஸ்பிரஸிடம் கூறினார். மேலும், அபராதம் நியாயமற்றவை என்று ஊழியர்கள் கருதினால், அவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய ஒரு ஹெல்ப்லைன் உள்ளது என்றும் அதித் பாலிச்சா கூறினார்.

அதித் பாலிச்சாவின் கூற்றுப்படி, ஒரு நாளில் அதிக ஆர்டர்கள் வராத புதிய கிடங்குகளில் பணிபுரியும் ரைடர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாத தொகை உதவியாக இருக்கும். "கடைகள் நல்ல ஆர்டர்களைச் செய்யத் தொடங்கியதும், நாங்கள் அவர்களின் (டெலிவரி ரைடர்களின்) வழக்கமான ஊதியங்களை வழங்குவோம்," என்று அவர் கூறினார்.

சமீபத்தில், வடமேற்கு டெல்லியில் உள்ள துவாரகாவில் அடையாளம் தெரியாத வாகனம் ஜெப்டோ டெலிவரி ஊழியரின் இரு சக்கர வாகனத்தின் மீது பின்னால் மோதியதில் 19 வயது ஜெப்டோ டெலிவரி ஊழியர் இறந்தார். அரசு தரப்பு மற்றும் காவல்துறை உட்பட பல பங்குதாரர்கள், டெலிவரி ஊழியர்கள் முடியாத டெலிவரி காலக்கெடுவை முடிப்பதற்கு விரைவதால், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து பலமுறை கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Zepto இன் முக்கிய போட்டியாளரான Blinkit, தொழிலாளர்களுக்கு ஒரு டெலிவரி கட்டணத்தை ரூ. 50ல் இருந்து ரூ.25 ஆக குறைத்துள்ளது, மேலும் Zomato ஐ போல இன்சென்டிவ் அடிப்படையிலான ஊதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தி சண்டே எக்ஸ்பிரஸ் அணுகிய ரைடர்-சைட் பயன்பாட்டின் படி, பிளிங்கிட் ஒரு நாளைக்கு 15 ஆர்டர்களை டெலிவரி செய்வதற்கு ரூ. 100 மற்றும் ஒரு நாளைக்கு 32 ஆர்டர்களை டெலிவரி செய்வதற்கு ரூ.150 ஊக்கத்தொகையாக வழங்குகிறது.

Blinkit ஊழியர்கள் தங்கள் தினசரி வருமானம் கிட்டத்தட்ட 15-20 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், தினசரி இலக்குகளை அடைவதற்கான முயற்சியில் முடிந்தவரை விரைவாக ஆர்டர்களை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர். "பழைய சம்பள மாடலின் கீழ், நான் ஒரு நாளைக்கு 32 ஆர்டர்கள் டெலிவரி செய்தால், நான் 1,600 ரூபாய் சம்பாதித்தேன், ஆனால் புதிய மாடலின் கீழ், பீக் ஹவர்ஸின் கூடுதல் கட்டணம் உட்பட, அதே அளவு வேலைக்காக சுமார் 1,350 ரூபாய் சம்பாதிக்கிறேன்" என்று பெயர் வெளியிட விரும்பாத பிளிங்கிட் ஊழியர் கூறினார். தி சண்டே எக்ஸ்பிரஸ் எழுப்பிய விரிவான கேள்விகளுக்கு பிளிங்கிட் நிறுவனம் பதிலளிக்கவில்லை.

பண நெருக்கடி காரணமாக பிளிங்கிட் சமீபத்திய வாரங்களில் 50 க்கும் மேற்பட்ட கடைகளை மூடியுள்ளது, மற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதற்கிடையில், Zepto, $900 மில்லியன் மதிப்பீட்டில் இந்த மாத தொடக்கத்தில் $200 மில்லியன் நிதியுதவியை மூடியது.

Zepto போன்ற இயங்குதள நிறுவனங்கள் டெலிவரி ஊழியர்களை வேலைக்கு அமர்த்த மூன்றாம் தரப்பு சேவைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த வழங்குநர்களில் ஒருவர் Zypp ஆகும், இது Zepto நிறுவனத்திற்கு 18,000 ரூபாய் மாதாந்திர ஊதியத்தில் ரைடர்களை வேலைக்கு அமர்த்துகிறது, மேலும் அவர்களுக்கு மின்சார ஸ்கூட்டரையும் வழங்குகிறது. இருப்பினும், ஒரு மாதத்தில் 28 நாட்களுக்கு குறைவாக ஒரு நாள் வேலை செய்தால், Zypp அவர்களின் மாத ஊதியத்தில் இருந்து 3,000 ரூபாய் பிடித்தம் செய்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

பிளிங்கிட் மற்றும் செப்டோவில் உள்ள இரண்டு டெலிவரி ஊழியர்கள் தி சண்டே எக்ஸ்பிரஸிடம், ரைடர்ஸ் ஆர்டரை வழங்க 10 நிமிடங்களுக்கு மேல் எடுத்தால், அவர்களின் உடனடி மேற்பார்வையாளர்கள் திட்டுவதாக தெரிவித்தனர். எவ்வாறாயினும், அனைத்து ஹைப்பர்லோகல் டெலிவரி சேவைகளிலும் Zepto இன் அட்ரிஷன் வீதம் மிகக் குறைவாக இருப்பதாகவும், அதன் உடனடி போட்டியாளரை விட 7 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் அதித் பாலிச்சா கூறினார்.

கிடங்கு மேலாளர்களுக்கு தனிப்பட்ட ஆர்டர்களின் நிலை குறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார். "ஒரு ரைடரின் ஆர்டர் சந்தேகத்திற்குரியதாகக் சுட்டிக்காட்டப்பட்டால், ரைடருடன் யார் உரையாடி வருகிறார்கள் என்று கிடங்கு மேலாளர் எச்சரிக்கப்படுவார்" என்று பாலிச்சா கூறினார்.

இதையும் படியுங்கள்: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு தொடர்பில்லை; குற்றப்பத்திரிக்கை தாக்கல்

போக்குவரத்து விதிகளை மீறும் டெலிவரி ரைடர்களுக்கு எதிரான சிறப்பு அமலாக்க இயக்கத்தின் போது, ​​​​சென்னை போக்குவரத்து காவல்துறை சமீபத்தில் Swiggy, Zomato மற்றும் Dunzo போன்ற தளங்களில் பணிபுரியும் 1,000 டெலிவரி நிர்வாகிகள் மீது வழக்குகளை பதிவு செய்தது.

“போக்குவரத்து மீறல்களில் ஈடுபடும் டெலிவரி தொழிலாளர்கள் மீது நாங்கள் வழக்குப் பதிவு செய்து, அந்தந்த நிறுவனங்களுக்கு அதைப் பற்றித் தெரிவிக்கிறோம். சிறப்பு அமலாக்க இயக்கத்தை நாங்கள் மேற்கொண்ட நாளில்… நாங்கள் 1,000 வழக்குகளைப் பதிவு செய்தோம், ”என்று சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் காவல்துறை ஆணையர் கபில் குமார் சி சரட்கர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

மேலும், “அந்த எண்ணிக்கையை குறிப்பிட்டுக் காட்ட, நாங்கள் அன்று மொத்தம் சுமார் 8,000 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை பதிவு செய்தோம். சென்னையில் இதுபோன்ற 9,000 ஊழியர்கள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், அவர்களில் 1,000 பேர் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்டால், அது மிகப்பெரிய எண்ணிக்கையாகும், ”என்றும் சரத்கர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Zomato
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment