பெட்ரோல் விலை குறைந்ததாக நம்பி ஏமாந்த மக்கள்!

விலை குறைப்பு உண்மை தான் ஆனால், அது நேற்றைய நிலவரப்படி 1 பைசா மட்டுமே

தினமும் வேலைக்கு செல்லும்   நடுத்தர குடும்பத்தினர் தொடங்கி  ஆட்டோ,  கார்  போன்ற வாகனங்களை ஓட்டி பிழைப்பு நடத்துவோர் அனைவரும் முதலில் தெரிந்துக் கொள்வது இன்றைய பெட்ரோல் டீசலின் விலை என்ன என்பது தான். அப்படி தான் இன்றைய (30.5.18) நாளும் ஆரம்பமானது.

விலையை பார்த்த அனைவரும் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். காரணம்,  பெட்ரோல்  விலை 15 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக  குறைந்திருந்தது.  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 80.80 க்கு விற்பனை செய்யப்பட்டது.

15 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் 63 காசும், டீசல் விலை லிட்டருக்கு 60 காசும் குறைக்கப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகின. கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை  சற்றே குறைந்தது பொதுமக்களை நிம்மதியடைய வைத்துள்ளது.

ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.  இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி) இந்த விலை குறைப்பு உண்மையில்லை என்று தவறுதலாக  பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து ஐஓசி   தெரிவித்துள்ளது.” விலை குறைப்பு உண்மை தான் ஆனால், அது நேற்றைய நிலவரப்படி 1 பைசா மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. 60 பைசா என்பது  மே 25 ஆம் தேதி பதிவான நிலவரத்தின் படி 60 பைசா குறைவாகியுள்ளது போல் இணையதளத்தில் காட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை  நாள்தோறும் உயர்த்திக் கொண்டே செல்கின்றன.
   
முதலில் வெளியான  விலை குறைப்பு நிலவரத்தின் படி, டெல்லியில் பெட்ரோல் விலை 60 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 77.83 காசுகளுக்கு விற்கப்பட்டது. டீசல் விலை 56 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 68.75 காசுகளுக்கு விற்கப்பட்டது.மேலும் மும்பை  பெட்ரோல் விலை 59 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 85.65 காசுகளுக்கு விற்கப்பட்டது. டீசல் விலை 59 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 73.20 காசுகளுக்கு விற்கப்பட்டது.

ஆனால் தற்போது இவை முழுவதுமாக மாறி, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ. 78.42 காசுக்களுக்கும், மும்பையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.86.23,  கொல்கத்தாவில் ரூ. 71.85 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை  மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close