பெட்ரோல் விலை 20 காசுகள் குறைப்பு!

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன.

சென்னையில் இன்று (14.7.18) பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 79.87-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 72.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, கடந்த ஆண்டு கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.

தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றன. இதையடுத்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன.

ஜூலை மாதம் தொடங்கியவுடன் மீண்டும் பெட்ரோ மற்றும் டீசலின் விலை அதிகரித்தது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 79.87-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 72.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

×Close
×Close