Advertisment

சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி உதவி வழங்கியதா கேரளாவின் பி.எஃப்.ஐ அமைப்பு?

சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு முன்பு ரூ. 120 கோடிக்கு பரிவர்த்தனை நடைபெற்றது என்பது ஆதாரமற்றது - பி.எஃப்.ஐ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PFI funded CAA, NRC protests says enforcement directorate

PFI funded CAA, NRC protests says enforcement directorate

Deeptiman Tiwary

Advertisment

PFI funded CAA, NRC protests says enforcement directorate :  கேரளாவைச் சேர்ந்த பி.எஃப்.ஐ (Popular Front of India) என்ற அமைப்பு தான் இந்தியாவில் சி.ஏ.ஏவுக்கும், என்.ஆர்.சிக்கும் எதிராக நடந்த போராட்டங்கள் அனைத்துக்கும் நிதி உதவி செய்ததாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு வழக்கறிஞர்களுக்கும் அதே அமைப்பு தான் நிதி உதவி அளித்துள்ளது என்று உள்துறை அமைச்சகத்துக்கு அளித்த அறிக்கையில் அறிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மற்றும் துஷ்யந்த் தேவ் போன்றவர்கள் பி.எஃப்.ஐயிடம் இருந்து பணம் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணத்திற்கும் சி.ஏ.ஏ போராட்டத்திற்கும் சம்பந்தமும் இருப்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

To read this article in English

இந்த பணம் குறித்து கேட்கப்பட்டபோது கபில் சிபில் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. இது அவருடைய தொழில் சார்ந்த பணப்பரிவர்த்தனை என்று கூறியுள்ளார். ஜெய்சிங் இந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் துஷ்யந்த் தேவ்விடம் இருந்து எந்த பதில்களும் இல்லை.  பி.எஃப்.ஐ அமைப்பின் வங்கிக் கணக்குகளில் பணம் போடப்பட்ட / எடுக்கப்பட்ட நாட்களுக்கும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நாட்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை சமர்பித்த Summary of evidences proving that PFI has mobilised cash for organising demonstration against CAA என்ற அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

உள்துறை அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்ட மற்றொரு அறிக்கையான ‘Analysis of Bank Accounts of PFI-யில் 120.5 கோடி வரை பி.எஃப்.ஐ வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளது என்றும் அந்த தொகை அதே நாளில் அல்லது ஒரீரு தினங்களில் எடுக்கப்பட்டது என்றும் அறிக்கை அறிவித்துள்ளது. ஆனால் எந்த நேரத்தில் இந்த பணப்பறிமாற்றம் நடைபெற்றது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் கோழிக்கோடு மூவர் சாலையில் அமைந்திருக்கும் சிண்டிகெட் வங்கிக் கிளையில் இருக்கும் பி.எஃப்.ஐ கணக்கில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த தகவல்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  கபில் சிபிலுக்கு 77 லட்சம், ஜெய்சிங்கிற்கு 4 லட்சம், தேவுக்கு 11 லட்சம், பி.எஃப்.ஐ காஷ்மீருக்கு 1.65 கோடி, நியூஜோதி குரூப்புக்கு 1.17 கோடி மற்றும் என்.ஐ.ஏவால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அப்துல் சமாதுக்கு 3.10 லட்சம் வரையில் பணம் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுளளது.

மேலும் படிக்க : சி.ஏ.ஏ வரைவு : இந்தியாவில் குடியுரிமையை பெற மதத்தினை நிரூபிக்க வேண்டும்!

ஹாதியா வழக்கில் 7 முறை நீதிமன்றத்தில் வாதாடியதிற்காக இந்த பணம் எனக்கு அனுப்பப்பட்டது. என்னுடைய கட்டணம் தொடர்பாக என்னுடைய வழக்கறிஞருக்கு தெரிவிக்கின்றேன். பிறகு என்னுடைய கட்டணம் என்னுடைய கணக்கில் கட்டப்பட்டுவிடுகிறது. இதற்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார் கபில் சிபில். மேலும் ஜூலை 2017ம் ஆண்டு முதல் மார்ச் 2018ம் ஆண்டு வரை அவர் ஹாதியா வழக்கில் பெற்ற பில்கள் தொடர்பான தகவல்களையும் அவர் காட்டி, இவை அனைத்தும் குடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே கட்டப்பட்ட தொகையாகும் என்று கூறினார்.

இந்திரா ஜெய்சிங் இந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடும் எந்த ஒரு அமைப்பில் இருந்தும் தான் பணம் பெறவோ, அவர்களிடம் எவ்விதமான உறவோ இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.பி.எஃப்.ஐ பொதுச்செயலாளர் முகமது அலி ஜின்னா கூறுகையில் சி.ஏ.ஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களுக்கும் பண பரிவர்த்தனைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. சிபில், தேவ் மற்றும் ஜெய்சிங் ஆகியோருக்கு ஹாதியா வழக்கிற்காக தரப்பட வேண்டிய தொகையே கொடுக்கப்பட்டது என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டநாளில் இருந்து பி.எஃப்.ஐக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் 1.04 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூ. 5000 முதல் ரூ. 49 ஆயிரம் வரை பணமாகவோ, ஐ.எம்.பி.எஸ் மூலமாகவோ டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. டெபாசிட்டரின் அடையாளத்தை அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவாக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 1.34 கோடி ரூபாய் வரையில் டிசம்பர் 4 2019 முதல், ஜனவரி 6, 2020 வரை பணம் இந்த வங்கிக் கணக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. அவை நெஃப்ட், ஐ.எம்.பி.எஸ் என ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை பெறப்பட்டுள்ளது. 80 முதல் 90 முறை பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளது அந்த அறிக்கை.

இதற்கு பதில் அளித்த பி.எஃப்.ஐ சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு முன்பு ரூ. 120 கோடிக்கு பரிவர்த்தனை நடைபெற்றது என்பது ஆதாரமற்றது. எங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு கிளையும் இல்லை என்பதை தெரிவுபடுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் எதனையும் நிரூபிக்க இயலாது. எங்களுடைய நிர்வாகிகள் இருவரை மட்டும் கைது செய்துள்ளனர். எங்களை தடுத்து நிறுத்தும் எந்த ஒரு பாசிசவாதகளுக்கும் முன்பு நாங்கள் தலை குனிய மாட்டோம். நாங்கல் எங்களுடைய போராட்டங்களை, மாற்றுக் கருத்துகளை ஒடுக்கும் பாசிசவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து நடத்துவோம்” என்று தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment